ஏப்பா Xiaomi இதான் உன் உருட்டா? ஒரே மாதிரி 2 போன்.. ஆனா பெயர் மட்டும் வேறயா? எந்த போன் என்ன மாடல்?
சியோமி (Xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான துணை பிராண்டுகளில் ஒன்றான போகோ (POCO) பிராண்ட் விரைவில் இரண்டு புதிய ஸ்மார்ட்போன் சாதனங்களை உலக சந்தை மற்றும் இந்திய ஸ்மார்ட்போன் சந்தைகளில் அறிமுகம் செய்யவுள்ளது. இது பற்றிய விபரங்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
சியோமியின் தங்கச்சி பிராண்ட் ஆன போகோ (POCO) நிறுவனம் வரும் மாதங்களில் போகோ எஃப்6 (POCO F6) மற்றும் போகோ எஃப்6 ப்ரோ (POCO F6 Pro) ஆகிய ஸ்மார்ட்போன்களை கொண்ட POCO F6 தொடரை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போகோ நிறுவனம் இன்னும் POCO F6 தொடர் மற்றும் அதன் வெளியீட்டு தேதியை வெளியிடவில்லை என்றாலும், IMEI தரவுத்தளத்தில் வரவிருக்கும் POCO F6 பற்றிய விபரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

POCO F6 ஆனது IMEI தரவுத்தளத்தில் 24069PC21I மற்றும் 24069PC21G ஆகிய மாடல் எண்களுடன் காணப்பட்டுள்ளது. இது முறையே இந்திய மற்றும் உலகளாவிய வகைகளைக் குறிக்கிறது. இதனுடன், ஐஎம்இஐ தரவுத்தளத்தில் மாடல் எண் 24069RA21C உடன் கூடிய ரெட்மி நோட் 13 டர்போ (Redmi Note 13 டர்போ) மாடலும் கண்டறியப்பட்டுள்ளது. POCO F6 மற்றும் Redmi Note 13 டர்போ மாதிரி எண்கள் ஒரே மாதிரியானவையாக இருக்கிறது.
இது POCO F6 மற்றும் Redmi Note 13 Turbo ஆகியவை ஒரே மாதிரியான வன்பொருளைக் கொண்டிருக்கும் என்பதை குறிக்கிறது. இருப்பினும், ரெட்மி நோட் 13 டர்போவுடன் ஒப்பிடும்போது POCO F6 இல் POCO சில விஷயங்களை மாற்றியமைக்கலாம் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு POCO F5 ஆனது, மறுபெயரிடப்பட்ட Redmi Note 12 Turbo ஆக அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இது Qualcomm Snapdragon 7+ Gen 2 செயலி மூலம் இயக்கப்படுகிறது. POCO F6 ஆனது Qualcomm SM8635 SoC ஐக் கொண்டிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மார்ச் 18 அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படும் Snapdragon 8s Gen 3 ஆக இருக்கலாம் என்று லீக் தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது iQOO Z9 (சீன மாறுபாடு), Realme GT 6 நியோ சீரிஸ் போன்ற பல ஃபிளாக்ஷிப் கில்லர் செக்மென்ட் சாதனங்களில் காணப்பட்ட சிப்செட் என்பது கவனிக்கத்தக்கது. POCO F6 ஏப்ரல் மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. POCO F6 ஆனது HyperOS குறியீட்டின் மூலம் பெறப்பட்ட Peridot என்ற குறியீட்டுப் பெயரைக் கொண்டிருக்கும்.
POCO F6 ஸ்மார்ட்போன் சந்தானத்திற்கு முன் ரெட்மி நோட் 13 டர்போ (Redmi Note 13 Turbo) அதிகாரப்பூர்வமாக வரும் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஒரே போனை வெவ்வேறு பெயருடன், வெவ்வேறு சந்தைகளில் சிறிய மாற்றங்களுடன் சியோமி நிறுவனம் ஒரு புதிய போனை அறிமுகம் செய்வது ஒன்றும் புதிதல்ல என்று கூறப்பட்டுள்ளது. இது சியோமியின் ஒரு வழக்கமான பழக்கம் தான் என்கிறது டெக் வட்டாரங்கள்.


Click it and Unblock the Notifications








