Home
Gadgets

சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!

இந்திய சந்தையில், பட்ஜெட் விலைப்பிரிவின்கீழ் வாங்க கிடைக்கும் சீன நிறுவனங்களின் ஸ்மார்ட் வாட்ச்களுக்கு வேட்டு வைக்கும் விலை மற்றும் அம்சங்களுடன் இந்திய நிறுவனம் ஒன்று 2 புதிய ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்துள்ளது. என்னென்ன மாடல்கள்? என்ன விலை? இதோ விவரங்கள்:

இந்திய மொபைல் தயாரிப்பாளர் ஆன லாவா (LAVA) நிறுவனத்தின் துணை பிராண்டான ப்ரோவாட்ச் (ProWatch) ஆனது இந்தியாவில் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந் நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது: ப்ரோவாட்ச் இஸட்என் (Prowatch ZN) மற்றும் ப்ரோவாட்ச் விஎன் (Prowatch VN).

சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா?

இவ்விரு ஸ்மார்ட் வாட்ச்களில் இஸட்என் மாடல் ஆனது "இந்த விலைப்பிரிவில்" கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடன் வரும் முதல் ஸ்மார்ட் வாட்ச் ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவ்விரு மாடல்களுமே ரியல்டெக் (Realtek) சிப்செட் மற்றும் ஹார்ட் ரேட் மானிட்டர், ஃபிட்னஸ் மானிட்டர் மற்றும் உயர் துல்லியமான பிபிஜி சென்சார் போன்ற சில பொதுவான அம்சங்களையும் கொண்டுள்ளன.

லாவா ப்ரோவாட்ச் இஸட்என் மாடலின் விரிவான அம்சங்கள்: இது 466x466 ரெசல்யூஷன், 60ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 1.43-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஐபி68 ரேட்டிங், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடனான மெட்டல் - ஜிங்க் அலாய் பாடி உடன் வருகிறது. கூடவே இந்த ஸ்மார்ட் வாட்சில் ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டியும் உள்ளது.

சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா?

இதய துடிப்பு சென்சார், பிளட் ஆக்சிஜென் லெவலை கண்காணிக்கும் எஸ்பிஓ2 ட்ராக்கர், ஸ்லீப் ட்ராக்கிங், ஸ்ட்ரெஸ் ட்ராக்கிங், 110+ ஸ்போர்ட்ஸ் மோட்களுடன் வரும் இந்த ஸ்மார்ட் வாட்ச் 350mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது சாதாரண பயன்பாட்டின் கீழ் 8 நாள் பேட்டரியையும் மற்றும் 20 நாட்கள் ஸ்டேண்ட்பை டைமையும் வழங்கும் என்று ப்ரோவாட்ச் நிறுவனம் கூறுகிறது.

லாவா ப்ரோவாட்ச் விஎன் மாடலின் விரிவான அம்சங்கள்: இது 320x386 ரெசல்யூஷன், 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 1.96-இன்ச் TFT LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது ஐபி67 ரேட்டிங் உடனான மெட்டல் - ஜிங்க் அலாய் பாடி உடன் வருகிறது. கூடவே இந்த ஸ்மார்ட் வாட்சில் ப்ளூடூத் 5.2 கனெக்டிவிட்டியும் உள்ளது.

சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா?

இதுவும் இதய துடிப்பு சென்சார், பிளட் ஆக்சிஜென் லெவலை கண்காணிக்கும் எஸ்பிஓ2 ட்ராக்கர், ஸ்லீப் ட்ராக்கிங், ஸ்ட்ரெஸ் ட்ராக்கிங், 115+ ஸ்போர்ட்ஸ் மோட்களுடன் வருகிறது. பேட்டரியை பொறுத்தவரை 230mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது சாதாரண பயன்பாட்டின் கீழ் 7 நாள் பேட்டரியையும் மற்றும் 15 நாட்கள் ஸ்டேண்ட்பை டைமையும் வழங்கும் என்று ப்ரோவாட்ச் நிறுவனம் கூறுகிறது.

லாவா ப்ரோவாட்ச் இஸட்என் விலை மற்றும் விற்பனை: சிலிக்கான் ஸ்ட்ராப் கொண்ட லாவா ப்ரோவாட்ச் இசட்என் வேரியண்டின் அசல் விலை ரூ.4,999 என்றும், மெட்டல் ஸ்ட்ராப் உடன் வேரியண்ட்டின் அசல் விலை ரூ.5,999 ஆகும். இருப்பினும், இரண்டு மாடல்களுமே ஏப்ரல் 26 முதல் முறையே ரூ.2,599 மற்றும் ரூ.2,999 என்கிற அறிமுக சலுகை விலையில் வாங்க கிடைக்கும்.

ஆன்லைன் வழியாக இந்த ஸ்மார்ட்வாட்ச்சை வாங்க விரும்புபவர்கள் லாவா இ-ஸ்டோர் (Lava e-store) மற்றும் இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம் ஆன அமேசான் இந்தியாவிற்கு (Amazon India) செல்லலாம். ஆப்லைன் வழியாக வாங்க விரும்புவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் லாவா ப்ரோவாட்ச் இஸட்என் ஸ்மார்ட் வாட்சை வாங்கலாம்.

லாவா ப்ரோவாட்ச் விஎன் விலை மற்றும் விற்பனை: சிலிக்கான் ஸ்ட்ராப் கொண்ட லாவா ப்ரோவாட்ச் விஎன் வேரியண்டின் அசல் விலை ரூ.3,999 ஆகும். இருப்பினும் இது ஏப்ரல் 26 முதல் ரூ.1,999 என்கிற அறிமுக சலுகை விலையின் கீழ் வாங்க கிடைக்கும். இதுவும் லாவா இ-ஸ்டோர் மற்றும் இ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம் ஆன அமேசான் இந்தியா மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களின் வழியாக விற்பனைக்கு வரும்.

அடுத்து வரும் புதிய லாவா போன் (New Lava Phone): இன்னும் சில வாரங்களில் லாவா நிறுவனம் அதன் அக்னி 2எஸ் (Lava Agni 2S) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் என்கிற தகவல் கிடைத்துள்ளது. இதன் பெயரை வைத்து பார்க்கும் போது இது பெரும்பாலும் லாவா அக்னி 2 (Lava Agni 2) மாடலை போலவேத்தான் இருக்கும். ஆனால் வேறு சிப்செட் உடன் அனுப்பப்படலாம்.

Best Mobiles in India

English summary
Indian Brand Lava 2 New Smartwatches ProWatch ZN VN Offer Price Specifications Sale From April 26
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X