வியக்க வைக்கும் சுவாரஸ்யம்- 36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் வைஃபை சேவை: சாத்தியமானது எப்படி தெரியுமா

|

இன்றைய தொழில்நுட்ப காலக்கட்டத்தில் இணைய பயன்பாடு என்பது மிகவும் பிரதானமாகி விட்டது. 2021 ஆம் ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் 750 மில்லியன் பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாகவும் அதே 2026 ஆம் ஆண்டில் 1 பில்லியன் ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்தியாவில் இருப்பார்கள் எனவும் கணிக்கப்படுவதாக Deloitte ஆய்வறிக்கை தெரிவித்தது. ஸ்மார்ட்போன்களில் இணையம் என்பது அத்தியாவசிய தேவையாகிவிட்டது.

ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே சமயத்தில் இணைய பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்திய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் இணையம் பயன்படுத்துவதாக statista-வின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. ஸ்மார்ட்போன் மற்றும் இணையத்தின் வளர்ச்சி என்பது அளப்பறியதாக இருக்கிறது. இப்போது கேள்விக்கு வருவோம். விமானத்தில் பயணிக்கும் போது எவ்வாறு இணைய சேவை வழங்கப்படுகிறது?

36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானம்

36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானம்

36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் கம்பிகள் மூலம் இணைய சேவை வழங்குவது என்பது சாத்தியமற்ற ஒன்று. எனவே விமானத்தில் இணைய சேவை வழங்குவதற்கான ஒரே வழி வைஃபை தான். Wireless Fidelity என்ற வார்த்தையின் சுருக்கமே Wifi. இந்த வைஃபை சேவையில் கம்பிகளுக்கு பதிலாக ரேடியோ அலைகள் மூலம் இணைய சேவை வழங்கப்படுகிறது. பூமியில் இருந்து 36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் வைஃபை எப்படி கிடைக்கிறது என்று சிந்திக்கிறீர்களா? வாருங்கள் அதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.

இரண்டு வழிகள் வைஃபை சேவை

இரண்டு வழிகள் வைஃபை சேவை

பல விமான நிறுவனங்களும் தங்கள் விமானங்களில் வைஃபை சேவையை வழங்குகின்றன. 36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்துக்கு இணைய சேவை வழங்குவதற்கு இரண்டு வழிகள் இருக்கிறது. அதில் ஒன்று ATG (Air to Groud) தொழில்நுட்பமாகும். விமானங்கள் தரையில் நிறுவப்பட்டிருக்கும் செல்போன் டவர்கள் மூலம் இணையத் தொடர்பை பெறுகிறது. செல்போன் டவர்கள் மூலம் சிக்னலை பெறுவதற்கு விமானத்தில் பிரத்யேக கருவி ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது.

பிரத்யேக ரிசீவர் ஆண்டனா

பிரத்யேக ரிசீவர் ஆண்டனா

விமானத்தின் கீழ்புற மையப் பகுதியில் ரிசீவர் ஆண்டனா என்ற கருவி பொருத்தப்பட்டிருக்கிறது. ரிசவர் ஆண்டனா செல்போன் டவரில் இருந்து பெறும் சிக்னலை விமானத்துக்குள் இருக்கும் ரவுட்டருக்கு அனுப்பப்படுகிறது. இந்த ரவுட்டர் மூலமாக வைஃபை சேவைகள் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது.

செல்போன் டவர்களை தொடர்பு கொண்டு சிக்னல்

செல்போன் டவர்களை தொடர்பு கொண்டு சிக்னல்

வான்வழியில் விமானம் பயணிக்கும் அந்தந்த இடத்துக்கு அருகில் இருக்கும் செல்போன் டவர்களை தொடர்பு கொண்டு இணைய சிக்னலை பெறுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் இந்த ஆண்டனா நமது செல்போனை போலவே செயல்பட்டு இணையத்தை வழங்குகிறது. சரி, தரைப்பகுதிக்கு மேலே பறக்கும் போது இந்தமுறையில் இணைய சேவை வழங்கப்படுகிறது. கடற்பரப்பிற்கு மேலே விமானம் பயணிக்கும் போது எப்படி சிக்னல் கிடைக்கும் என்ற கேள்வி வருகிறதா?

கடற்பரப்பில் மேலே பறக்கும் போது எப்படி வைஃபை வழங்கப்படுகிறது?

கடற்பரப்பில் மேலே பறக்கும் போது எப்படி வைஃபை வழங்கப்படுகிறது?

விமானம் பறக்கும் போது இரண்டு முறைகளில் பயணிகளுக்கு இணைய சேவை வழங்கப்படுகிறது என்று முன்னதாகவே பார்த்தோம், இந்த இடத்தில் தான் இரண்டாவது முறை செயல்படுத்தப்படுகிறது. இதற்கென விமானத்தில் மேற்புறத்தில் ஒரு ரிசரவ் ஆண்டனா பொருத்தப்பட்டிருக்கிறது. கடற்பரப்பின் மேலே விமானம் பயணத்துக் கொண்டிருக்கும் போது விமானத்தின் மேற்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ரிசவர் ஆண்டனா செயற்கைக்கோளில் இருந்து சிக்னலை பெறுகிறது. இந்த விஷயம் இன்னும் வியக்க வைக்கிறதா?

சேட்டிலைட் Wi-Fi இணைப்பு

சேட்டிலைட் Wi-Fi இணைப்பு

கடற்பரப்பின் மேலே விமானம் பயணிக்கும் போது சேட்டிலைட் Wi-Fi இணைப்பு செயல்படுத்தப்படுகிறது. தரையில் இருக்கும் டிரான்ஸ்மிட்டர் டவர்கள் மூலமாக ரேடியோ சிக்னல்கள் செயற்கைகோளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த சிக்னலை செயற்கைக்கோள் விமானத்தின் மேற்புறத்தில் இருக்கும் ரிசவர் ஆண்டனாவுக்கு அனுப்புகிறது. ரிசவர் ஆண்டனா செயற்கைகோள் மூலம் சிக்னலை பெற்று அதை விமானத்துக்குள் இருக்கும் ரவுட்டருக்கு அனுப்புகிறது. இதன்மூலமாக கடற்பரப்பின் மேலே பயணிக்கும் போதும் பயணிகளுக்கு தடையின்றி வைஃபை சேவை வழங்கப்படுகிறது.

விமானத்தில் வைஃபை பயன்படுத்த கட்டணமா?

விமானத்தில் வைஃபை பயன்படுத்த கட்டணமா?

விமானத்தில் வைஃபை சேவை வழங்கும் விமான நிறுவனங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதேபோல் பெரும்பாலான விமான நிறுவனங்கள் தங்களது பயணிகளுக்கு வைஃபை சேவையை இலவசமாக வழங்குகின்றன. சில விமான நிறுவனங்கள் வைஃபை பயன்படுத்தும் நேரத்துக்கு ஏற்ப கட்டணங்களை வசூலிக்கின்றன என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

File Images

Best Mobiles in India

English summary
In-Flight wifi: How does WiFi work on Flight

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X