ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
ரூ.8,000க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு தரமான ஸ்மார்ட்போனை (Best Smartphone Under Rs.8000) தேடுகிறீர்கள் என்றால்.. இந்த 2024 மார்ச் மாதம் மட்டுமல்ல வருகிற ஏப்ரல், மே மாதங்கள் வரையிலாக.. கீழ்வரும் 2 ஸ்மார்ட்போன்களில் ஒன்றை தான் வாங்க வேண்டும். ஏனென்றால்?
இப்போதைக்கு வேறு எந்த நிறுவனங்களின் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன்களும் (Entry-level Smartphone) அறிமுகமாகமாவது போல் தெரியவில்லை. எனவே நீங்கள் இந்த மாதம் அறிமுகமான போக்கோ சி61 (Poco C61) அல்லது கடந்த மாதம் அறிமுகமான ரெட்மி ஏ3 (Redmi A3) ஆகிய இரண்டில் ஒன்றைத்தான் நீங்கள் தேர்வு செய்யவேண்டி இருக்கும்!

போக்கோ சி61 ஸ்மார்ட்போனின் விலை: போக்கோவின் இந்த புதிய என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: 6ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.6,999 க்கும், 6ஜிபி ரேம் +128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.7,999 க்கும் வாங்க கிடைக்கும். இரண்டுமே மார்ச் 28 ஆம் தேதி முதல் பிரபல இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும்!
ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் விலை: ரெட்மியின் இந்த லேட்டஸ்ட் என்ட்ரி-லெவல் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது: 3ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.7,299-க்கும், 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.8,299-க்கும் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,299-க்கும் வாங்க கிடைக்கும். அனைத்து வேரியண்ட்களுமே பிளிப்கார்ட் வழியாக ஏற்கனவே வாங்க கிடைக்கின்றன.

போக்கோ சி61 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடனான 6.71-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ ஜி36 சிப்செட் உடனாக 6ஜிபி வரையிலான LPDDR4x ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான MMC 5.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை, ஏஐ ஆதரவு உடனான டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் 8 மெகாபிக்சல் மெயின் சென்சார் மற்றும் எல்இடி ஃபிளாஷ் யூனிட் உடனான "குறிப்பிடப்படாத" இரண்டாம் நிலை சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் வாட்டர் டிராப் நாட்ச் டிசைனில் 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 10W வயர்டு சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இது 1650 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடனான 6.71-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 @ 680மெகாஹெர்ட்ஸ் ஜிபியு உடனான 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 12 என்எம் சிப்செட் (Octa-Core MediaTek Helio G36 12nm chipset) உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 3ஜிபி / 4ஜிபி / 6ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 64ஜிபி / 128ஜிபி eMMC 5.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வருகிறது.
மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜுடன் வரும் ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 (கோ எடிஷன்) உடன் வருகிறது. கேமராக்களை பொறுத்தவரை, இதில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது, அதில் எல்இடி பிளாஷ் உடனான 8எம்பி (எப்/2.0 அபெர்க்ஷர்) மெயின் கேமரா + செகண்டரி கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 5எம்பி செல்பீ கேமரா உள்ளது.
மேலும் 3.5மிமீ ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் உடன் ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் ஆனது 10W சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது.
எதை வாங்கலாம்? பெயர் மட்டும் தான் வேறு. மற்றபடி இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஒன்றுதான்! அதாவது கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷன் (Rebranded Version) அதாவது மறுபெயரிடப்பட்ட வெர்ஷன் தான் - போக்கோ சி61 ஸ்மார்ட்போன்!
டிஸ்பிளே அளவு, ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ், பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட், பேட்டரி அளவு, ரேம் மற்றும் ஸ்டோரேஜ், மெயின் கேமரா, செல்பீ கேமரா என கிட்டத்தட்ட இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே ஒரே மாதிரியான அம்சங்களையே கொண்டுள்ளன. எனவே ரூ.300 கூடுதலாக செலவு செய்ய பணம் இருந்தால் ரெட்மி ஏ3 மாடலை வாங்கலாம். இல்லையென்றால் போக்கோ சி61 ,மாடலையே வாங்கலாம்!


Click it and Unblock the Notifications








