Home
Mobile

பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?

என்னங்க சொல்லுறீங்க? என்று வியக்கும்படியான பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், 1 டிபி மெமரி, கார்னிங் கொரில்லா கிளஸ் 3 டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் போன்ற பீச்சர்களுடன் பிரீமியம் டிசைனில் போக்கோ சி61 (POCO C61) போன் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த போனின் மற்ற அம்சங்களும் பட்ஜெட்டுக்கு ஏற்ப பட்டையை கிளப்பும்படியே கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இப்போது, பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் தள்ளுபடியோடு விற்பனைக்கு வந்துள்ளது. ஆகவே, இந்த போக்கோ சி61 போனின் முழு அம்சங்களை பார்த்துவிட்டு, அதன் பிறகு விலை விவரங்களை காண்போம்.

பொளக்குது ஆர்டர்.. ரூ.7599 பட்ஜெட்ல 12GB ரேம்.. பிரீமியம் கேமரா லுக்!

போக்கோ சி61 அம்சங்கள் (POCO C61 Specifications): இந்த போனில் 6.71 இன்ச் (1650 x 720 பிக்சல்கள்) எச்டிபிளஸ் (HD+) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே மாடலாகும். 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) புரொடெக்சன் கொண்டிருக்கிறது.

பட்ஜெட்டிலும் கொரில்லா கிளாஸ் வருவதால், டிஸ்பிளேவில் நல்ல குவாலிட்டியை எதிர்பார்க்கலாம். அதேபோல இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்காத ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி ஹீலியோ ஜி36 12எம்எம் (Octa-Core MediaTek Helio G36 12nm) சிப்செட் வருகிறது.

மீடியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஈ8320 ஜிபியு (IMG PowerVR GE8320 GPU) சிப்செட் வருகிறது. இந்த போக்கோ சி61 போனில் 2 மெமரி வேரியண்ட்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. 8 ஜிபி ரேம் (4 ஜிபி ரேம் + 4 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 64 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் இருக்கிறது.

பொளக்குது ஆர்டர்.. ரூ.7599 பட்ஜெட்ல 12GB ரேம்.. பிரீமியம் கேமரா லுக்!

அதேபோல 12 ஜிபி ரேம் (6 ஜிபி ரேம் + 6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட ஹை-வேரியண்ட்டும் விற்பனைக்கு வருகிறது. இதுபோக 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட்டை இந்த போக்கோ சி61 போன் கொண்டிருக்கிறது. ஆகவே, நானோ சிம் மற்றும் எஸ்டி கார்டு சிலாட் கொண்டிருக்கிறது.

இந்த போக்கோவில் 8 எம்பி ஏஐ டூயல் ரியர் கேமரா (AI Dual Rear Camera) வருகிறது. இந்த கேமராவானது, பிரீமியம் லுக்கில் ரேடியன்ட் ரிங் டிசைன் (Radiant Ring Design) கொண்டிருக்கிறது. பட்ஜெட் போன்களில் வரும் 5 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது.

அதேபோல சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side mounted Fingerprint Scanner) மற்றும் பாட்டம் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ரூ.7000 பட்ஜெட்டிலும் 10W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) சார்ஜிங் போர்ட் கொண்டிருக்கிறது.

இந்த பேட்டரி உடன் 8.3 மிமீ தடிமன், 199 கிராம் எடை கொண்டிருக்கிறது. இந்த போக்கோ 4ஜி மாடலாகும். ஆகவே, டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 802 (Wi-Fi 802), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் ஜிபிஎஸ் (GPS) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன. கிளாஸ் பேக் டிசைன் கொண்டிருக்கிறது.

டயமன்ட் டஸ்ட் பிளாக், எதர்னல் ப்ளூ மற்றும் மிஸ்டிசல் கிரீன் ஆகிய 3 கலர்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.7,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.400 டிஸ்கவுண்ட் உடன் ஆர்டர் செய்து கொள்ளலாம். பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
20 Percent Discount on POCO C61 With 12GB RAM, 5000mAh Battery in Flipkart Sale Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X