நிறைய பெண்கள் கையில் iPhone இருக்குற இந்த நேரத்துல இப்படி ஒரு ஆபத்தா?

|

"அட போங்க ப்ரோ.. நாம என்ன பில் கேட்ஸா? இல்ல முகேஷ் அம்பானியா? நம்ம ஸ்மார்ட்போனை ஹேக் செஞ்சி அவனுக்கு (ஹேக்கருக்கு) என்ன கிடைக்க போகுது? சல்லி பைசா கூட கிடைக்காது" - இது, ஹேக்கிங் பற்றிய எச்சரிக்கைகளை விடுக்கும் போது, மிகவும் அடிக்கடி மற்றும் மிகவும் அசால்ட் எங்களுக்கு கிடைக்கும் ஒரு பொதுவான பதில் ஆகும்.

ஆனால் இந்த பதில் எல்லோரிடம் இருந்தும் வராது; குறிப்பாக ஆன்லைன் மோசடி, ஹேக்கிங், சைபர் க்ரைம் போன்ற பாதிப்புகளில் சிக்கியவர்களிடம் இருந்து - கண்டிப்பாக வராது!

பணம் மட்டுமே குறி அல்ல.. ஒரே ஒரு போட்டோ கிடைச்சாலும்..?

பணம் மட்டுமே குறி அல்ல.. ஒரே ஒரு போட்டோ கிடைச்சாலும்..?

என் ஸ்மார்ட்போனில் நெட் பேங்கிங் கூட இல்லை, அதில் என்னுடைய வங்கி தொடர்பான எந்த தகவலும் இல்லை, அப்படி இருக்க எனக்கு ஹேக்கிங் பற்றி எனக்கு என்ன கவலை? என்று கேட்பவர்களும் இங்கே அதிகம்.

உண்மை என்னவென்றால், ஹேக்கர் என்றாலே அவன் பணத்தை மட்டுமே திருடுவான் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால், ஐ யம் சாரி - பணத்தை விட - பெயர், விலாசம், மொபைல் நம்பர், போட்டோ, வீடியோ போன்ற - இன்ஃபர்மேஷன்களுக்கு விலை அதிகம் என்பதை நீங்கள் புரிந்துகொண்டே ஆக வேண்டும்.

இத்தாலியில் இருந்து வந்துள்ள புது தலைவலி!

இத்தாலியில் இருந்து வந்துள்ள புது தலைவலி!

ஏற்கனவே பலவகையான இன்ஃபர்மேஷன்களை, நூதமான டெக்னீக்குகளை பயன்படுத்தி திருடும் ஹேக்கர்ஸ் கும்பலுக்கு மத்தியில் நாம் போராடிக்கொண்டிருக்கும் வேளையில், இத்தாலியில் இருந்து ஒரு புது தலைவலி வந்துள்ளது.

அது வேறொன்றும் இல்லை - இத்தாலிய மென்பொருள் நிறுவனமான RCS ஆல் உருவாக்கப்பட்ட ஹெர்மிட் (Hermit) என்கிற ஸ்பைவேர் தான். கடந்த சில தினங்களாகவே நீங்கள் இந்த பெயரை கேட்டு வரலாம். ஆனால் ஹெர்மிட் ஸ்பைவேர் சமாச்சாரம் இப்போது மிகவும் சீரியஸ் ஆகி உள்ளது.

எச்சரிக்கை! உங்க Wi-Fi Router இந்த 4 கம்பெனியை சேர்ந்தது என்றால் உடனே மாத்திடுங்க! ஏன்?எச்சரிக்கை! உங்க Wi-Fi Router இந்த 4 கம்பெனியை சேர்ந்தது என்றால் உடனே மாத்திடுங்க! ஏன்?

ஆப்பிள் நிறுவனமே களத்தில் இறங்கும் அளவிற்கு மேட்டர் சீரியஸ்!

ஆப்பிள் நிறுவனமே களத்தில் இறங்கும் அளவிற்கு மேட்டர் சீரியஸ்!

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை மட்டுமின்றி, ஹெர்மிட் ஸ்பைவேர் ஆனது ஐபோன்களை ஹேக் செய்யும் திறன் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் Threat Analysis Group-இன் (TAG) கூற்றுப்படி, ஹெர்மிட் ஸ்பைவேர் ஆனது அனைத்து ஐஓஎஸ் (iOS) டிவைஸ்களையும் "சமரசம்" செய்யலாம்.

(பின் குறிப்பு: ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கும் கூட இதே நிலை தான்)

அதுவே 'கால்' செய்யும், உங்களுக்கு தெரியாமல் போட்டோ எடுக்கும்!

அதுவே 'கால்' செய்யும், உங்களுக்கு தெரியாமல் போட்டோ எடுக்கும்!

ஹெர்மிட் ஸ்பைவேர் உங்கள் ஐபோனில் இருந்தால், அது ஐபோனை ஹேக் செய்து, தானாகேவ ஆடியோவை ரெக்கார்ட் செய்வது, அங்கீகரிக்கப்படாத அழைப்புகளை மேற்கொள்வது, சில அம்சங்களை கட்டுப்படுத்துவது போன்ற திறன்களை பெறுமாம்.

மேலும் உங்கள் இமெயில்கள், காண்டாக்ட்ஸ், டெக்ஸ்ட் மெசேஜ்கள், உங்கள் ப்ரவுஸரின் சேர்ச் ஹிஸ்டரியை பார்ப்பது மற்றும் உங்களுக்கு தெரியாமலேயே புகைப்படங்களை எடுக்க கேமராவை ஹேக் செய்வது போன்ற பல தீங்கு விளைவிக்கும் காரியங்களையும் செய்யுமாம்.

என்னடா இது? OnePlus-க்கு வந்த சோதனை! போயும் போயும் Realme தான் கிடைச்சுதா?என்னடா இது? OnePlus-க்கு வந்த சோதனை! போயும் போயும் Realme தான் கிடைச்சுதா?

இதெப்படி சாத்தியம்? Sideloading வழியாக!

இதெப்படி சாத்தியம்? Sideloading வழியாக!

"இந்த ஹெர்மிட் ஸ்பைவேர் ஒரு ஐபோன் அல்லது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை எப்படி சென்றடைகிறது?" என்கிற கேள்விக்கு பதில் - சைட்லோட்டிங்!

ஆம்! சைட்லோட்டிங் முறையில் தான் ஹெர்மிட் ஸ்பைவேர் ஆனது ஆப்பிளின் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் பிளே ஸ்டோருக்கு "வெளியே" அணுக கிடைக்கிறது.

சைட்லோடிங் என்றால் என்ன?

சைட்லோடிங் என்றால் என்ன?

பொதுவாக 'சைட்லோடிங்' என்பது யூ.எஸ்.பி, ப்ளூடூத், வைஃபை மற்றும் இதே போன்ற 'மெத்தேட்ஸ்' வழியாக ஒரு ஸ்மார்ட்போனுக்கு டிரான்ஸ்பர் செய்யப்படக்கூடிய மீடியா ஃபைல்ஸை குறிக்கிறது.

கூகுளின் கூற்றுப்படி - ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஹெர்மிட் ஸ்பைவேர் வழியாக நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில் - ஹேக்கர்கள் பெரும்பாலும் யூசர்களின் மொபைல் டேட்டா கனெக்ஷனை தான் முதலில் 'கட்' செய்துள்ளன்னர். எனவே சந்தேப்படும்படியான இன்டர்நெட் கனெக்ஷன் துண்டிப்பை நீங்கள் சந்தித்தால், அலெர்ட் ஆகி கொள்ளவும்.

போச்சு! WhatsApp-இல் இருந்தே ஒரே ஒரு உளவு பார்க்குற மேட்டரும் இப்போ போச்சு!போச்சு! WhatsApp-இல் இருந்தே ஒரே ஒரு உளவு பார்க்குற மேட்டரும் இப்போ போச்சு!

தெரியாமல் கூட

தெரியாமல் கூட "இதையெல்லாம்" செய்து விடாதீர்கள்!

ஹெர்மிட் ஸ்பைவேரிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க, ஒருபோதும் தெரியாத லிங்க்-களை கிளிக் செய்வதோ அல்லது அறியப்படாத சோர்ஸில் இருந்து அணுக கிடைக்கும் ஏதேனும் ஒரு ஆப்பை இன்ஸ்டால் செய்யவோ கூடாது.

அதிர்ஷ்டவசமாக ஆப்பிள் நிறுவனம் ஹெர்மிட்-ஐ தடை செய்துள்ளது. இந்த ஸ்பைவேர் தொடர்புடைய அனைத்து சான்றிதழ்களையும் ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. உடனே 'அப்பாடா!" என்று பெருமூச்சு விட்டுக்கொள்ள வேண்டாம்.

ஹெர்மிட் இல்லை என்றால் என்ன இன்னும் எத்தனையோ ஸ்பைவேர்கள் இங்கே உள்ளன. எனவே, எப்போதும் உஷாராக இருப்பது தான் உங்களுக்கான ஒரே பெருமூச்சாக இருக்க வேண்டும்!

Best Mobiles in India

English summary
Warning to iPhone Users Especially Women Dangerous Spyware Hermit Hack Your Phone Control Camera Take Photos

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X