அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது 4ஜி சேவையை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. விரைவில் இந்நிறுவனம் 4ஜி சேவையை நாடு முழுவதும் அறிமுகம் செய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்நிறுவனம் கம்மி விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது.
அதாவது பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.197, 199 மற்றும் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டங்கள் அதிக நாட்கள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா நன்மையை வழங்குகின்றன. இப்போது இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 197 plan) ஆனது 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இதில் நீங்கள் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்குத் தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Zing Music உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஆனால் மேலே கூறிய நன்மைகள் 15 நாட்கள் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இந்த ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம் 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக சிம் கார்டை செயலில் வைத்திருக்க இதுபோன்ற திட்டங்கள் தான் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.
பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் (bsnl rs 199 plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நீங்கள் இந்த பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 60ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.
அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தை பயன்படுத்த முடியும். இதுதவிர கேமிங் சேவைகள் உட்பட பல நன்மைகள் பிஎஸ்என்எல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் (bsnl rs 299 plan) தினசரி 3ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு 40 கேபிபிஎஸ் என்ற வேகத்தில் இணையத்தை பயன்படுத்த முடியும்.

மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. ஆனால் பிஎஸ்என்எல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒடிடி நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் மட்டும் வழங்கப்பட்டிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
சமீபத்தில் பிஎஸ்என்எல் 4ஜி சேவைக்காக உருவாக்கப்பட்ட உள்நாட்டு தொழில்நுட்பம் (Homegrown Technology) ஆனது சரியாக வேலை செய்யவில்லை என்று தகவல் வெளிவந்தது. எனவே இதுபோன்ற பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு விரைவில் 4ஜி சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 4ஜி சேவை அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications