போச்சு! WhatsApp-இல் இருந்தே ஒரே ஒரு உளவு பார்க்குற மேட்டரும் இப்போ போச்சு!

|

வாட்ஸ்அப்பில் (WhatsApp) ஒரு சில பேர் இல்ல, ஒரு கூட்டமே இருக்கு! ஒரு மெசேஜ் பார்க்கப்பட்டு விட்டது, படிக்கப்பட்டு விட்டது என்பதை மேலோட்டமாக பார்க்க அனுமதிக்கும் ப்ளூ டிக்ஸ்-ஐ மறைச்சு, ஆஃப் பண்ணி வச்சி இருப்பாங்க.. அது மட்டுமா?

கடைசியாக எப்போது வாட்ஸ்அப்பிற்குள் எட்டி பார்த்துட்டு போனாங்க என்பதை கண்டறிய உதவும் லாஸ்ட் சீன்-ஐயும் மறைத்து வைத்துருப்பார்கள்.

சிலர் நல்ல எண்ணத்தில்.. சிலர் ஏமாற்றும் நோக்கத்தில்!

சிலர் நல்ல எண்ணத்தில்.. சிலர் ஏமாற்றும் நோக்கத்தில்!

இதெல்லாம் முழுக்க முழுக்க தனிப்பட்ட பாதுகாப்புகளுக்காக, தேவை இல்லாத தொந்தரவுகளை தவிர்ப்பதற்காக செய்யப்படும் வாட்ஸ்அப் தந்திரங்கள் என்றாலும் கூட, பிறரை ஏமாற்றுவதற்காகவும் கூட சிலர் இதையெல்லாம் பயன்படுத்துகின்றனர் என்பதும் வெளிப்படை!

"நான் உங்கள் மெசேஜை பார்க்கவே இல்ல", "நான் காலையில் இருந்து வாட்ஸ்அப்பிற்குள் வரவே இல்ல!" என்கிற கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விடுவார்கள். இம்மாதிரியான பொய்யர்களை கண்டுபிடிக்க நமக்கு உதவிய ஒரே ஒரு வாட்ஸ்அப் அம்சம் - ஆன்லைன் (Online)!

இப்போது அதற்கும் வேட்டு வைத்து விட்டார்கள்!

இப்போது அதற்கும் வேட்டு வைத்து விட்டார்கள்!

ஒருவர் ரீட் ரெசிப்ட்ஸை (அதாவது ப்ளூ டிக்ஸை) மறைக்கலாம், லாஸ்ட் சீன்-ஐ கூட மறைக்கலாம் மற்றும் அதை அடிப்படையாக கொண்டு பொய்களை சொல்லலாம். ஆனால் அவர் வாட்ஸ்அப்பில் ஆன்லைனில் இருப்பதை எதைக்கொண்டும் மறைக்க முடியாது.

அந்த ஒரு மேட்டரை வைத்து தான் இத்தனை நாட்கள் நாம் அவர்களை "உளவு" பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது அதற்கும் வேட்டு வைத்து விட்டார்கள்!

WhatsApp-இல் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மாட்டிக்காதீங்க; இனிமேல் இப்படி பண்ணுங்க!WhatsApp-இல் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மாட்டிக்காதீங்க; இனிமேல் இப்படி பண்ணுங்க!

போச்சு! 'ஆன்லைன்' சோலி முடிஞ்சு போச்சு!

போச்சு! 'ஆன்லைன்' சோலி முடிஞ்சு போச்சு!

இதுநாள் வரையிலாக அனைவருக்கும் தெரியும் படி இருந்த, செட்டிங்ஸ் வழியாக கட்டுப்படுத்தப்பட முடியாத ஒரு அம்சமாக திகழ்ந்த வாட்ஸ்அப் ஆன்லைன் ஸ்டேட்டஸ்-ஐ இனிமேல் கட்டுப்படுத்த முடியும் என்றும், அதை மறைக்க உதவும் அம்சத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

டெஸ்டிங்கில் இருக்கும் வாட்ஸ்அப் அம்சங்களை பற்றி "புட்டுப்புட்டு" வைக்கும் வலைத்தளமான WABetaInfo வழியாக இந்த தகவல் கிடைத்துள்ளதால், இதை மேலோட்டமாகவும் எடுத்துக்கொள்ள முடியாது.

யார் பார்க்கலாம்? யாரெல்லாம் பார்க்க கூடாது?

யார் பார்க்கலாம்? யாரெல்லாம் பார்க்க கூடாது?

WABetaInfo-வின் ஒரு ட்வீட், "வாட்ஸ்அப் நிறுவனம், ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைக்கும் திறனில் செயல்படுகிறது! ஒருவழியாக, நீங்கள் வாட்ஸ்அப்பில் இருக்கும் போது, நீங்கள் ஆன்லைனில் இருக்கிறீர்கள் என்பதை யார் யாரெல்லாம் பார்க்கலாம் என்பதை தேர்வுசெய்யும் அம்சம் உங்களுக்கு அணுக கிடைக்க உள்ளது!" என்கிறது.

மேலும் WABetaInfo வழியாக வெளியான ஒரு அறிக்கையில், நீங்கள் ஆன்லைனில் இருக்கும்போது, அதை யார் பார்க்கலாம் அல்லது யார் எல்லாம் பார்க்க கூடாது என்பதை தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட அம்சம் ஆண்ட்ராய்டு (Android), ஐஓஎஸ் (iOS) மற்றும் டெஸ்க்டாப்பிற்கான (Desktop) வாட்ஸ்அப் பீட்டாவின் எதிர்கால அப்டேட்டில் வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!WhatsApp-இல் தலைகீழாக டைப் செய்வது எப்படி? அட இது தெரியாம போச்சே!

இது தானாக வரவில்லை.. கெஞ்சி கேட்டதால் வருகிறது!

இது தானாக வரவில்லை.. கெஞ்சி கேட்டதால் வருகிறது!

குறிப்பிட்ட அம்சம் நிறுவனத்தின் வழக்கமான அப்டேட்களில் ஒன்று என நினைத்துக்கொள்ள வேண்டாம். பெரும்பாலான வாட்ஸ்அப் யூசர்கள் நீண்ட காலமாக இந்த 'ஹைட் ஆன்லைன் ஸ்டேட்டஸ்' (Hide Online Status) அம்சத்தை கோரி வருகின்றனர்.

நாம் முன்பே பார்த்தபடி, யூசர்களின் இந்த கோரிக்கைக்கு - அடிப்படையிலேயே - பல காரணங்களின் இருக்கலாம்: மற்றவர்களால் தொந்தரவு செய்யபடுவதை விரும்பாமல் இருக்கலாம் அல்லது யாரோ ஒருவர் தன்னை "பின்தொடர்வதாக" உணர்ந்தால் அவர்களை விலக்கி வைக்கலாம், மிகவும் முக்கியமான ஏமாற்றும் நோக்கங்களை கொண்டவர்கள் இன்னும் நன்றாக ஏமாற்றலாம்!

வந்ததும்... ப்ரைவஸி செட்டிங்ஸ்-ல செக் பண்ணுங்க!

வந்ததும்... ப்ரைவஸி செட்டிங்ஸ்-ல செக் பண்ணுங்க!

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, இந்த அம்சம் வெளிவந்தவுடன், ஒரு வாட்ஸ்அப் யூசர் அதை வாட்ஸ்அப் ப்ரைவஸி செட்டிங்ஸ் (WhatsApp Privacy Settings) வழியாக கண்டறிய முடியும்.

WABetaInfo வழியாக நமக்கு கிடைத்த ஒரு ஸ்கிரீன் ஷாட்டின் படி, இந்த அம்சம் லாஸ்ட் சீன் செட்டிங்ஸ்-க்கு உள்ளேயே, இரண்டு புதிய விருப்பங்களின் கீழ் அணுக கிடைக்கும் என்பது போல் தெரிகிறது.

அதாவது ""Everyone" மற்றும் "Same as Last Seen" என்கிற பெயரின் கீழ் 'ஹைட் ஆன்லைன் ஸ்டேட்டஸ்' அம்சம் அணுக கிடைக்கும்.

Google Pay, Paytm-இல் தெரியாமல் கூட Google Pay, Paytm-இல் தெரியாமல் கூட "இதை" செஞ்சிடாதீங்க.. SBI எச்சரிக்கை!

இந்த அம்சம் எப்போது அனைவருக்கும் வரும்?

இந்த அம்சம் எப்போது அனைவருக்கும் வரும்?

ஹைட் ஆன்லைன் ஸ்டேட்டஸ் அம்சம் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்கிற சரியான தேதி இன்னும் அறியப்படவில்லை. மேலும் இந்த அம்சம் தற்போது வரையலாக உருவாக்கத்தில் தான் உள்ளது, அதாவது சோதனை கட்டத்தை கூட எட்டவில்லை என்பதால், இதை உடனே எதிர்பார்க்க முடியாது; ஆனால் கண்டிப்பாக வரும்!

Best Mobiles in India

English summary
Most Wanted Privacy Settings coming to WhatsApp Soon you are allowed to Hide your Online Status

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X