Google இல்லனா.. ஆப்பிள்.. குப்பனோ, சுப்பனோ இல்ல.. சுந்தர் பிச்சை ஆச்சே.. மிரளும் டெக் மீம்பெஸ்ட்!
கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பதவி நீக்கம் செய்யப்படுவார் அல்லது ராஜினாமா செய்துவிடுவார் என்று ஏகபோகமாக யூகத்தின் அடிப்படையில் டெக் சாம்ராஜ்மே பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், ஆப்பிள் சிஇஓ டிம் குக் உடனான சுந்தர் பிச்சையின் பழைய மீட்டிங் ஆட்டத்தை சூடிபிடிக்க வைத்துள்ளது.
தொழில்நுட்ப உலகையே கட்டி ஆளும் கூகுள் (Google) நிறுவனத்தின் அடுத்த சிஇஓ யார்? என்ற கேள்விக்கே இடமில்லாமல் 9 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை சேர்ந்த சுந்தர் பிச்சை தனது பதவியை தக்க வைத்து வருகிறார். யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப அவருக்கும் நேரம் வந்துவிட்டதாக சமீப காலமாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

சிஇஓ பதவி கேள்விக்குறி? கூகுளின் ஜெமினி ஏஐ (Gemini AI) சாட்பாட்டின் பிரதமர் மோடி குறித்த ஆட்சேபனைக்குரிய பதில்கள், ஜெமினி ஏஐ இமேஜ் ஜெனரேட்டரில் கறுப்பின மக்கள் சித்தரிக்கப்பட்ட ஏற்றகொள்ள முடியாத புகைப்படங்கள் ஆகியவை சுந்தர் பிச்சையின் சிஇஓ பதவிக்கான அஸ்திவாரத்தை ஆட்டி விட்டன. இதனிடையே ஹீலியோஸ் கேப்பிட்டல் நிறுவனர் சமீர் அரோரா அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரம் பூதாகரமாக மாறிய நேரத்தில், கூகுள் நிறுவனமானது, இந்திய அரசாங்கத்திடம் பிரதமர் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கோரியது. இப்படி அடுத்தடுத்த விவகாரங்கள் காரணமாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை (Google CEO Sundar Pichai) அவரது பதவியில் நீடிப்பாரா அல்லது நீக்கம் செய்யப்படுவரா என்ற கேள்வி டெக் சாம்ராஜ்யத்தில் தொடர் பேசுபொருளாக மாறிவிட்டது.

ஆனால், கூகுள் நிறுவனம் சுந்தர் பிச்சைக்கு எதிராக எந்தவொரு கருத்தையோ அல்லது அதிருப்தியையோ வெளிப்படுத்தவில்லை. இதனால், அந்த விவகாரம் சற்று தணிந்தே இருந்தது. இப்படிப்பட்ட சூழலில், ஆப்பிள் சிஇஓ டிம் குக் (Apple CEO Tim Cook) உடனான சுந்தர் பிச்சையின் சந்திப்பு அந்த விவகாரத்தை பூமராங் போல போன வேகத்தில் திரும்ப கொண்டு வந்திருக்கிறது.
இவர்களின் சந்திப்பு தொடர்பான புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் மீண்டும் பஞ்சாயத்தை கூட்டி இருக்கிறது. மீம்களும் வெளுத்து வாங்குகின்றன. சுந்தர் பிச்சை ஆப்பிள் நிறுவனத்தில் சேரப் போகிறார். அதற்கான நேர்காணலின் போதே இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. சுந்தர் பிச்சை என்ன சாதாரண ஆளா, கூகுள் இல்லையென்றால் ஆப்பிளில் சேர்ந்துவிடுவார். இப்படி பல்வேறு விமர்சனங்களை நெட்டிசன்கள் எழுப்ப தொடங்கிவிட்டனர்.
இந்த புகைப்படத்தில் டிம் குக் மற்றும் சுந்தர் பிச்சை இருவரும் ரெஸ்டாரன்ட் ஒன்றில் எதிரெதிரே அமர்ந்துள்ளனர். இதை பார்த்தால் நேர்காணல் போலத்தான் தோன்றுகிறது. ஆனால், இது உண்மையல்ல. இந்த புகைப்படத்தில் அவர்கள் நேர்காணலிலும் ஈடுபடவில்லை. அதேபோல சிஇஓ பதவி விவகாரம் எழுவதற்கு முன்பே இந்த சந்திப்பு நிகழந்துவிட்டது என்பதே உண்மையாகும்.
புகைப்படத்தின் பின்னணி என்ன? கலிபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் 2017ஆம் ஆண்டு ப்ளூஃபிஷ் (Bluefish) நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் சிம்ஸ் (Steve Sims) ஏற்பாடு செய்திருந்த கார்ப்பரேட் கிளையண்ட் மீட்டிங்கில் டெக் ஜாம்பாவான்கள் பலர் கலந்து கொண்டனர். அதில், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மற்றும் ஆப்பிள் சிஇஓ டிம் குக் இருவரும் கலந்துகொண்டது மட்டுமல்லாமல், சந்தித்து பேசி இருக்கின்றனர்.
இந்த நேரத்தில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டது. இதுதொடர்பான செய்தியை அமெரிக்காவின் சிஎன்பிசி (CNBC) அப்போதே வெளியிட்டிருக்கிறது. ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையே என்ன உரையாடல் நிகழ்ந்தது என்று எந்த தகவலும் இல்லை. இப்போது, சுந்தை பிச்சை சிஇஓ பதிவி டிரெண்டிங் டாப்பிக்காக இருப்பதால், நெட்டிசன்கள் பழைய புகைப்படத்தை வைத்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








