OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் பிரியர்களை மரண வெயிட்டிங் மோடில் போடும்படி அமோலெட் டிஸ்பிளே, 32ஜிபி மெமரி, ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி, ஹெல்த் மானிட்டர், 500mAh பேட்டரி போன்ற அல்ட்ரா பீச்சர்களுடன் ஒன்பிளஸ் வாட்ச் 2 (OnePlus Watch 2) மாடலின் புது எடிஷன் வெளியாகி இருக்கிறது.
ஒன்பிளஸ் வாட்ச் 2 அம்சங்கள் (OnePlus Watch 2 Specifications): 1.43 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 326 பிபிஐ (PPI), 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 2.5டி சபையர் கிளாஸ் (2.5D Sapphire Glass) புரொடெக்சன் வருகிறது.

இந்த கிளாஸ் ஸ்க்ராட்ச் ரெசிஸ்டன்ட் (Scratch Resistant) சப்போர்ட் கொண்ட மாடலாகும். ஆண்ட்ராய்டு 8.0 (Android 8.0) அல்லது அதற்கு மேற்பட்ட ஓஎஸ் டிவைஸ்களில் கனெக்ட் செய்து கொள்ளலாம். ஸ்னாப்டிகாரன் டபுள்யூ5 மற்றும் பிஈஎஸ் 2700 (Snapdragon W5 & BES 2700) சிப்செட்கள் வருகின்றன.
பிரத்யேக சிப்செட் வருவதால், பர்ஃபாமென்ஸ் மிரளவிடும்படி இருக்கும். ரன்னிங், வாக்கிங், ஸ்விம்மிங், சைக்கிளிங் போன்ற 100+ வொர்க்அவுட் மோட்கள் (Workout Modes) மற்றும் ஆட்டோமேடிக் வொர்க்அவுட் டிடெக்ட் (Automatic Workout Detection) சப்போர்ட் வருகிறது. டிராக்கர்கள், சென்சார்கள் வருகின்றன.
ஸ்லீப் டிராக்கரை (Sleep Tracker) பொறுத்தவரை, டீப் ஸ்லீப் (Deep Sleep), லைட் ஸ்லீப் (Light Sleep), அவேக் டைம்ஸ் (Awake Times), ஸ்லீப் பிரீதிங் ரேட் (Sleep Breathing Rate) சப்போர்ட் வருகிறது. ஹார்ட் ரேட் மற்றும் பிளட் ஆக்சிஜன் சென்சார் (Heart Rate & Blood Oxygen Sensor) கொண்டிருக்கிறது.

அதேபோல ஆக்சிலரேஷன் சென்சார் (Acceleration Sensor), கைரோஸ்கோப் சென்சார் (Gyroscope Sensor), ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic Sensor), பாரோமீட்டர் சென்சார் (Barometer Sensor) ஆகியவை வருகின்றன. ஆகவே, ஒட்டுமொத்த சென்சார்கள் கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் வாட்ச் 2 இருக்கிறது.
5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water Resistant) மற்றும் IP68 ரெசிஸ்டன்ட் சப்போர்ட் கொண்டுள்ளது. 50 மீட்டர்கள் ஆழம் வரையில் தாக்குபிடிக்கும். இந்த மாடலின் கனெக்டிவிட்டியை பார்க்கையில், ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), டூயல் ஃபிரிகொன்சி ஜிபிஎஸ் (GPS), கலிலியோ (Galileo), குளோனாஸ் (GLONASS) ஆகியவை வருகின்றன.
மியூசிக் பிளேபேக் சப்போர்ட்டுக்காக 32 ஜிபி மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. அதோபோல ப்ளூடூத் காலிங் சப்போர்ட் வருவதால், இன்பில்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் மைக்ரோபோன்கள் வருகின்றன. இந்த ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடலில் 500mAh பேட்டரி வருகிறது. ஸ்மார்ட் மோடில் 100 மணி நேரங்களுக்கு பயன்படுத்தலாம்.
அதேபோல ஹெவி-யூசேஜில் 48 மணி நேரங்களுக்கும், பவர் சேவர் மோடில் (ower Saver Mode) 12 நாட்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். பாடி மட்டும் 49 கிராம் எடை கொண்டிருக்கிறது. ஸ்ட்ராப் உடன் சேர்த்து 80 கிராம் எடை வருகிறது. பிளாக் ஸ்டீல், ரேடியன்ட் ஸ்டீல் ஆகிய கலர்களில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது.
ஆனால், இப்போது நார்டிக் ப்ளூ எடிஷன் (Nordic Blue Edition) என்னும் புதிய கலர் வேரியண்ட் அறிமுகமாகி ஒன்பிளஸ் பிரியர்களை அறக்க பறக்க செய்துள்ளது. முதலில் யுகேவில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்தியாவில் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த மாடலின் விலை ரூ.31,073ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications