அடிதூள்.. இனி கவலப்படாம வண்டிய ஓட்டுங்க.. Google Maps கொண்டுவரும் புதிய அப்டேட்.. என்ன தெரியுமா?
கூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் புதிய புதிய தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கூகுள் மேப்ஸ் தளத்தில் புதிய அப்டேட் ஒன்றை அறிவித்துள்ளது கூகுள் நிறுவனம்.
அதாவது தற்போது நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தான் மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். ஆனாலும் இந்த எலக்ட்ரிக் வாகனங்களைப் பயன்படுத்துவதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், அதற்கான சார்ஜிங் ஸ்டேஷன் தான், அதாவது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜிங் ஸ்டேஷன்களை கண்டுபிடிப்பது மிகப் பெரிய ஒரு சவாலாகவே இருக்கிறது.

எனவே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கூகுள் மேப்ஸ் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது விரைவில் உலகம் முழுவதும் அமைந்திருக்கும் EV சார்ஜிங் ஸ்டேஷன்களை கூகுள் மேப்ஸ் தளத்தில் டிஸ்ப்ளே செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது நீங்கள் நீண்ட தூரம் பயணம் செல்லும் போது அருகில் உள்ள சார்ஜிங் ஸ்டேஷன்களை இதில் எளிமையாகத் தெரிந்துகொள்ள முடியும்.
குறிப்பாக இந்த கூகுள் மேப்ஸ் (Google Maps) செயலியில் வரும் இந்த அம்சம் ஆர்டிஃபிஷியல் இன்டலிஜன்ஸ் (AI)மூலமாக இயங்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த அம்சம் மூலம் தான் பயனர்கள் சார்ஜிங் ஸ்டேஷன் பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

இதுதவிர கஸ்டமர்கள் வழங்கிய ரிவ்யூக்கள் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷனை சென்று அடைவதற்கான படிப்படியான வழிகாட்டுதல் போன்றவற்றையும் இந்த அம்சம் வழங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கூகுள் மேப்ஸ் தளத்தில் வெளிவரும் இந்த அம்சம் கண்டிப்பாக அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.
அதேபோல் இப்போது வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicle) துறைக்குப் பங்களிக்கும் வகையில், இன்-கார் மேப்புகளில் நேரடியாக அருகில் உள்ள சார்ஜர்களை வழங்குவதற்கான முயற்சியில் கூகுள் மேப்ஸ் வேலை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது இதில் வரக்கூடிய இந்த புதிய அப்டேட்டின் உதவியுடன் கஸ்டமர்களால் ரியல் டைம் போர்ட் கிடைக்கும் தன்மை மற்றும் சார்ஜிங் வேகத் திறன்கள் போன்ற பல விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த புதிய அப்டேட் ஆனது உலகம் முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக கூகளின் பில்ட்-இன்ச் சிஸ்டம்கள் கொண்ட வாகனங்கள் இந்த பெரிய அப்டேட் மூலம் மிகப் பெரிய பலன் அடையலாம் என்பது தான் உண்மை.
அதேசமயம் கூகுள் நிறுவனம் ஏற்கனவே google.com/travel-க்கு நுஏ ஃபில்டர் என்ற ஒரு அம்சத்தைக் கூகுள் மேப்ஸ் தளத்தில் அறிமுகம் செய்தது. இந்த அம்சம் மூலம் EV கஸ்டமர்கள் இன்-பில்ட் சார்ஜிங் ஸ்டேஷன் கொண்ட ஹோட்டல்கள் மற்றும் தங்கும் இடங்களை எளிதாக அடையாளம் காணலாம் என்று கூறப்படுகிறது.

இதுதவிர ஒரு வளாகத்தின் நுழைவு வாயில் முதல் நீங்கள் செல்ல வேண்டிய கட்டிடம் வரை (entrances to buildings)துல்லியமாக வழிகாட்டும் வகையில் புதிய அம்சத்தைச் சோதனை செய்து வருகிறது கூகுள் நிறுவனம். குறிப்பாக இந்த வசதி மூலம் கட்டிடத்தை நீங்கள் செலக்ட் செய்யும் போது மேப்ஸ் ஜூம் செய்யப்பட்டுக் காண்பிக்கப்படும்.
அதாவது நீங்கள் செல்ல வேண்டிய கட்டிடம் மேப்ஸ் பக்கத்தில் ரெட் நிறத்தில் காண்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் இந்த புதிய அம்சம் பெரிய கட்டிடங்கள் உள்ள இடம், காலேஜ் கட்டிடம், பெரிய வணிக வளாகங்களில் உள்ள கடைகளைக் கண்டறிவதற்கு மிகவும் உதவியாய் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு புதிய அம்சங்கள் இந்த கூகுள் மேப்ஸ் செயலியில் விரைவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications