Home
News

Apple உருவாக்கும் ரோபோட்.. வீட்டு வேலை எல்லாம் செய்யுமா? ஆப்பிள் பிளானால் Amazon மற்றும் Samsung-கிற்கு வெடி

ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் கனவு திட்டமான டைட்டன் ப்ராஜெக்ட் (Titan Project) ஆப்பிள் கார் (Apple car) திட்டத்தை சமீபத்தில் கைவிட்டது. இதற்கு அடுத்தபடியாக, நிறுவனம் இப்பொழுது ஆப்பிள் ஹோம் ரோபோட்ஸ் (Apple home robots) திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் நீண்ட நாள் கனவு, இறுதியில் வெறும் கனவாகவே முடிந்தது. ஆப்பிள் நிறுவனம் 10 வருடங்களுக்கும் மேலாக சைலெண்டாக டைட்டன் (Titan) என்ற திட்டத்தில் வேலை செய்து வந்தது. இது தான் ஆப்பிள் நிறுவனத்தின் கனவு திட்டமான ஆப்பிள் கார் (Apple car) திட்டத்தை வழிநடத்திய ப்ராஜெக்ட்டின் பெயராகும். இந்த திட்டம் சமீபத்தில் முழுமையாக கைவிடப்பட்டது. இது ஆப்பிள் ரசிகர்களிடையே பெரும் மனவருத்தத்தை உருவாக்கியது.

Apple உருவாக்கும் ரோபோட்.. வீட்டு வேலை எல்லாம் செய்யுமா?

ஆப்பிள் கார் திட்டம் கிளோஸ்.. ஆப்பிள் ஹோம் ரோபோட்டிக்ஸ் திட்டம் ஓபன் (Apple Car Project Closed.. Apple Home Robotics Project Opens):

காரணம், சியோமி (Xiaomi) நிறுவனம் கூட, அதன் சொந்த பிராண்டின் முதல் எலக்ட்ரிக் கார் (Electric car vehicle) வாகனத்தை அறிமுகம் செய்துவிட்டது. 10 வருடங்களுக்கு மேலாக ஆப்பிள் அதன் சொந்த காரை உருவாக்கி வருவதாக அரசல்புரசலாக வெளிவந்த தகவலை நம்பி, ஆப்பிள் ரசிகர்கள் ஆப்பிள் காரை எதிர்பார்ப்பது காத்திருந்தனர். இறுதியில், இவர்களுக்கெல்லாம் மனவிரக்தி மட்டுமே மிஞ்சியது. ஆப்பிள் நிறுவனம் அதன் ஆப்பிள் கார் திட்டத்தை முழுமையாக கைவிட்டது.

ஆப்பிள் நிறுவனம் அதன் காரை முழுமையாக ஒரு முழு ஆட்டோமேட்டி வாகனமாக உருவாக்க முயற்சி செய்து வந்தது. இதற்காக நிறுவனம் ஆடோனோமோஸ் டிரைவிங் (autonomous driving) அம்சத்தை உருவாக்கி அதை மேம்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. 10 வருடங்கள் தாண்டிய பின்னரும் ஆப்பிள் நிறுவனம், அதன் ஆப்பிள் காரில் எதிர்பார்த்த ரிசல்ட்டை எட்டவில்லை என்று கூறப்படுகிறது.

அதாவது, ஆப்பிள் நிறுவனத்தால், ஆப்பிள் கார் தன்னிச்சையாக செயல்பட வேண்டிய அம்சத்தில் முழுமையடைய முடியவில்லை என்று கூறப்படுகிறது. ஆப்பிள் காரில் வழங்கப்பட ஆடோனோமோஸ் டிரைவிங் அம்சம் லெவல் 4-ஐ (Level 4) எட்டியிருக்க வேண்டும். ஆனால், ஆப்பிள் உருவாக்கிய ஆப்பிள் காரில் லெவல் 2+ (Level 2+) வரை மட்டுமே அடைய முடிந்துள்ளது. இதனால், ஆப்பிள் காரின் ஆடோனோமோஸ் டிரைவிங் முழுமையடையாமல் போனது.

Apple உருவாக்கும் ரோபோட்.. வீட்டு வேலை எல்லாம் செய்யுமா?

ஆப்பிள் ஹோம் ரோபோட்ஸ் என்ன செய்யும்?

லெவல் 2+ என்றால் என்ன? என்ன தான் ஆப்பிள் கார் ஆடோனோமோஸ் மோடில் டிரைவ் செய்யப்பட்டாலும், டிரைவரின் (driver) கவனம் சாலையில் இருக்க வேண்டிய அவசியம் இந்த லெவெலில் கட்டாயமாக்கப்பட்டது. லெவல் 4 ஆடோனோமோஸ் டிரைவிங் மோடை ஆப்பிள் நிறுவனம் எட்டியிருந்தால், ஆப்பிள் கார் டிரைவர்கள் கண்ணை மூடிக்கொண்டே கூட காரில் பயணித்திருக்க முடியும். இதை ஆப்பிள் சாத்தியமாக முடியாத காரணத்தினால் டைட்டன் திட்டத்தை கைவிட்டது.

இப்போது ஆப்பிள் நிறுவனம் ஆப்பிள் ஹோம் ரோபோட்டிக்ஸ் (Apple Home Robotics) தளத்தில் களமிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் மனிதர்களுடன் இணைந்து வீட்டிற்குள் பின்தொடரும் மற்றும் வீட்டு வேலைகளை செய்து முடிக்கும் ஒரு ரோபோவை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் இப்போது துவக்கநிலையில் உள்ளது. இப்போதைக்கு இந்த ஆப்பிள் ரோபோட் மனிதர்களை வீட்டிற்குள் பின்தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல, இந்த ஆப்பிள் ரோபோட் வீடியோ கால்களை ஏற்க கூடியதாகவும், பாத்திரங்களை கழுவி வீட்டை சுத்தம் செய்யும் விதத்தில் பணிபுரியும் என்றும் லீக் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய ரோபோட்களை ஏற்கனவே அமேசான் (Amazon) மற்றும் சாம்சங் (Samsung) நிறுவனங்கள் உருவாக்கிவிட்டன என்பதனால், இந்த 2 நிறுவனங்களுக்கு போட்டியாக ஆப்பிள் வருவது, ரோபோட்டிக்ஸ் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமேசான் உருவாக்கிய அமேசான் ஆஸ்ட்ரோ ரோபோட் (Amazon's Astro robot) 2,00,000 விலையுடன் வருகிறது. அதேபோல், சாம்சங் நிறுவனம் உருவாக்கிய பால்லி ரோபோட் (Ballie robot) பில்ட் இன் ப்ரொஜெக்டர் உடன் வருகிறது. ஆப்பிள் உருவாக்கும் புதிய ரோபோட்டின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், இது முழுமையாக தயாராக இன்னும் 4 வருடங்கள் கூட ஆகலாம் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Apple The Tech Giant Focusing On Making Apple Home Robotics Project Works as a Personal Robot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X