Home
News

Apple-க்கு எப்படி மனசு வந்துச்சுனு தெரியலயே.. MacBook மீது ரூ.20,000 விலை குறைப்பு.. என்ன மாடல்?

ஆடிக்கு ஒருமுறை.. அமாவாசைக்கு ஒருமுறை தான்.. ஆப்பிள் (Apple) நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமான விலைக்குறைப்புகள் அறிவிக்கப்படும். அப்போதும் கூட ரூ.1000, ரூ.2000 தான் விலைக்குறைப்புகள் அறிவிக்கப்படும். ஆனால் இந்த முறை, ஒரு ஆப்பிள் தயாரிப்பின் மீது முழுதாக ரூ.20000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிள் (Apple) நிறுவனம் எம்3 சிப்செட் உடனான தனது லேட்டஸ்ட் மேக்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்த வேகத்தில், அதன் 13-இன்ச் மேக்புக் ஏர் எம்2 மாடலின் விலையை அதிரடியாக குறைத்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் கூற்றுப்படி, அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோர்களில் 2022 மேக்புக் ஏர் மாடல் மீது ரூ.20,000 பிளாட் டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

Apple MacBook மீது ரூ.20,000 விலை குறைப்பு.. என்ன மாடல்?

ஆப்பிளின் இந்த திடீர் விலைக்குறைப்பை தொடர்ந்து இந்த மேக்புக் மாடலின் விலை ரூ.99,900 ஆக குறைந்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்த மேக்புக் மாடலின் அசல் விலை ரூ.1,19,900 ஆகும். இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இதே மேக்புக் மாடலை ரூ.89,900 க்கும் வாங்க முடியும்

இந்த சலுகை, ஆப்பிளின் கல்வி சலுகையின்கீழ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதுவும் அப்பிளின் அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோர்கள் வழியாக மட்டுமே கிடைக்கும். ஒருவேளை நீங்கள் ஆப்பிள் அறிமுகம் செய்துள்ள புதிய மேக்புக் மாடலை வாங்க விருப்பினால், எம்3 சிப் உடன் கூடிய 13-இன்ச் மேக்புக் ஏர் மாடலானது ரூ.1,14,900 க்கு வாங்க கிடைக்கிறது. ஆப்பிளின் கல்வி சலுகையின்கீழ் இதே மாடல் ரூ.1,04,900 க்கு வாங்க கிடைக்கும்.

Apple MacBook மீது ரூ.20,000 விலை குறைப்பு.. என்ன மாடல்?

இது ஆப்பிள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்கள் வழியாக மார்ச் 4 ஆம் தேதி முதல் ஆர்டர் செய்யலாம். மார்ச் 8 முதல் டெலிவரி தொடங்கும் மற்றும் அதே மார்ச் 8 ஆம் தேதி முதல் ஆப்பிளின் புதிய எம்3 சிப் உடன் கூடிய 13-இன்ச் மேக்புக் ஏர் மாடலானது ஆப்பிள் ஸ்டோர் மற்றும் ஆப்பிளால் அங்கீகரிக்கப்பட்ட ரீசெல்லர் கடைகளின் வழியாகவும் வாங்க கிடைக்கும்.

ஆப்பிள் மேக்புக் ஏர் எம்2 மாடலை இப்போது நம்பி வாங்கலாமா? ஓரிரு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால் "கண்டிப்பாக வாங்கலாம்!". உங்களிடம் ஒரு பிரீமியம் லேப்டாப் வாங்க ரூ.1 லட்சம் பட்ஜெட் இருந்தால் எம்2 சிப் உடன் வரும் ஆப்பிள் மேக்புக் ஏர் மாடலை கண்களை மூடிக்கொண்டு வாங்கலாம்!

Apple MacBook மீது ரூ.20,000 விலை குறைப்பு.. என்ன மாடல்?

மேலும், கூடுதலாக ரூ.15,000 செலவு செய்து மேக்புக் ஏர் எம்3 மாடலை வாங்க விரும்பாதவர்களும் மேக்புக் ஏர் எம்2 மாடலை கருத்தில் கொள்ளலாம். ஏனென்றால் இதுவும் கூட மிகவும் மெலிதான வடிவமைப்பை கொண்டுள்ளது. இது ட்ரிம் செய்யப்பட்ட பெஸல்களுடன் கூடிய பிரகாசமான மற்றும் பெரிய டிஸ்பிளேவுடன் வருகிறது.

சற்றே பழைய சிப் ஆக இருந்தாலும் கூட ஆப்பிளின் எம்2 சிப் ஆனது இன்னமும் மிகவும் சக்திவாய்ந்த சிப் ஆகவே உள்ளது. நினைவூட்டும் வண்ணம் இதே சிப் தான், ஆப்பிளின் ஹை-எண்ட் 13-இன்ச் மேக்புக் ப்ரோ 2022 மாடலிலும் உள்ளது. இதுவரை வெளியான மதிப்புரைகள், இந்த மாடல் "வழக்கமான பணிகளுக்கு நல்லது" என்றே பரிந்துரைக்கின்றன. ஆனால் "தீவிரமான வொர்க்லோட்களின் போது இது கொஞ்சம் திணறுகிறது!" என்றும் கூறுகின்றன.

முக்கிய அம்சங்களை பொருத்தவரை, மேக்புக் ஏர் எம்2 மாடலில் 1080பி கேமரா உள்ளது. இது போதுமான தரத்திலான கேமரா அனுபவம் கிடைக்கும். மேலும் 2022 மாடலில் ஸ்பீக்கர் கிரில்ஸ் எதுவும் இல்லை. மாறாக ஆப்பிள் நிறுவனம் இரண்டு ட்வீட்டர்கள் மற்றும் இரண்டு வூஃபர்களை கீபோர்டு மற்றும் டிஸ்பிளேவிற்கு இடையே நேர்த்தியான முறையில் பொருத்தப்பட்டுள்ளது. கடைசியாக இதில் டால்பி அட்மோஸ் ஆதரவுடன் சேர்த்து ஸ்பேஷியல் ஆடியோ தொழில்நுட்பத்திற்கான ஆதரவும் உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
13 inch MacBook Air M2 Model gets Rs 20000 Price Cut After Apple Launch New M3 Chip MacBook Air
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X