என்னடா இது? OnePlus-க்கு வந்த சோதனை! போயும் போயும் Realme தான் கிடைச்சுதா?

|

கொஞ்சம் கூட 'கேப்' விடாமல் ஒரே மாதத்தில் பல வகையான பட்ஜெட்டின் கீழ் பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் ஒரு ஸ்மார்ட்போன் நிறுவனம் உள்ளது. அந்த கம்பெனியின் பெயர் என்ன என்ற கேட்டால்.. யாரு வேண்டுமானாலும் சொல்லுவார்கள் - ரியல்மி (Realme) என்று!

ரியல்மி இப்படி

ரியல்மி இப்படி "கொச கொசவென" போன்களை அறிமுகம் செய்ய என்ன காரணம்?

Realme நிறுவனம் இப்படி அடிக்கடி, பல எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துவதற்கு பெரிய காரணங்கள் எதுவும் இல்லை. இரண்டே இரண்டு சாதாரண காரணங்கள் தான் உள்ளன.

ஒன்று - ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் சந்தையில் நிலவும் போட்டியில் நீடித்து இருக்க; இரண்டு - தன் பிராண்ட் பெயரை மக்களின் மனதில் தக்கவைக்க!

ரியல்மியின் இதே பாணியை ஆப்பிள் நிறுவனம் ஃபாலோ செய்தால், அது வொர்க்-அவுட் ஆகுமா? என்று கேட்டால் சத்தியமாக ஆகாது; இப்படி இருக்க ஒன்பிளஸ்-க்கு என்ன தான் ஆச்சு?

கடும் குழப்பத்தில் ஒன்பிளஸ்!?

கடும் குழப்பத்தில் ஒன்பிளஸ்!?

ஆப்பிளுக்கு அடுத்தப்படியான இடத்தில் வைத்து பார்க்கப்படும் பிராண்ட் ஆன ஒன்பிளஸ், பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டதில் கூட எந்த தவறும் இல்லை, ஏனெனில் ஆப்பிள் கூட மினி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

ஆனால் எதை, எப்போது, எப்படி அறிமுகம் செய்ய வேண்டும் என்கிற தெளிவு - தந்திரம் இல்லாமல், ரியல்மி பாணியில் தொடர்ச்சியான அறிமுகங்களை நிகழ்த்தி, ஒன்பிளஸ் நிறுவனம் தன் சொந்த ரசிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களையே கடுமையாக குழப்பி கொண்டிருக்கிறது.

கொஞ்சம் கேப் விட்டால் தான், எதை வாங்கலாம் என்கிற முடிவுக்கு வந்து, ஒரு ஸ்மார்ட்போனை வாங்குவார்கள், "கேப் விடமால் அடித்தால்" எதையுமே வாங்காமல் அடுத்த மாடல் வரட்டும் என்கிற குழப்பத்திலேயே தான் இருப்பார்கள்; அப்படித்தானே?

1-இன்ச் கேமராவுடன் வரும் அடுத்த Xiaomi போன்; iPhone-களின் ஆட்டம் முடிந்தது!1-இன்ச் கேமராவுடன் வரும் அடுத்த Xiaomi போன்; iPhone-களின் ஆட்டம் முடிந்தது!

இப்போ (ஜூலை 1) தான் புதுசு வந்துச்சு.. அதுக்குள்ள அடுத்தது!

இப்போ (ஜூலை 1) தான் புதுசு வந்துச்சு.. அதுக்குள்ள அடுத்தது!

தற்போது கிடைத்துள்ள ஒரு தகவலின்படி, OnePlus 10RT ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம்.

"அட இப்போ தானே ஒன்பிளஸ் நோர்ட் 2டி அறிமுகம் ஆச்சு? அதுக்குள்ள அடுத்த போன்-ஆ?" என்று நீங்கள் ஷாக் ஆவீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். அதே ஷாக் தான் எங்களுக்கும்!

ஆனால் என்ன செய்வது? ஒன்பிளஸ் 10ஆர்டி ஸ்மார்ட்போன் ஆனது இந்திய தரநிலைகள் பணியகத்தின் (Bureau of Indian Standards - BIS) சர்டிபிகேஷன் டேட்டாபேஸில் காணப்பட்டதாக கூறப்படுகிறது!

ஏற்கனவே 10டி ஸ்மார்ட்போன் வருது.. நடுவுல 10ஆர்டி வேறயா?

ஏற்கனவே 10டி ஸ்மார்ட்போன் வருது.. நடுவுல 10ஆர்டி வேறயா?

சமீப நாட்களாகவே, ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போன் குறித்து எக்கச்சக்கமான லீக்ஸ் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. அது இந்த ஜூலை மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இன்னும் "கொடுமையான" விடயம் என்னவென்றால், 10டி மாடல் ஆனது 8டி மாடலை போல ஒரு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக ரெடியாகிறதாம் மற்றும் இது சமீபத்தில் வெளியான ஒன்பிளஸ் 10 ப்ரோ மாடலை போலவே இருக்குமாம்.

இப்படியெல்லாம் தகவல் வெளியாகும் பட்சத்தில் யார் (ஏற்கனவே வெளியான) 10 ப்ரோ மாடலை வாங்குவார்கள்? 10டி வரட்டும் என்று தான் காத்திருப்பார்கள்.

அதே போல நேற்று, ஜூலை 1 ஆம் தேதி அறிமுகமான நோர்ட் 2டி மாடலை யார் வாங்குவார்கள்? ஒன்பிளஸ் 10ஆர்டி வரட்டும் என்று தான் காத்திருப்பார்கள்!

போச்சு! WhatsApp-இல் இருந்தே ஒரே ஒரு உளவு பார்க்குற மேட்டரும் இப்போ போச்சு!போச்சு! WhatsApp-இல் இருந்தே ஒரே ஒரு உளவு பார்க்குற மேட்டரும் இப்போ போச்சு!

OnePlus 10RT தான் கடைசியா? இல்ல இன்னும் இருக்கா?

OnePlus 10RT தான் கடைசியா? இல்ல இன்னும் இருக்கா?

"தற்போது வரை வேறு எந்த மாடலும் இல்லை" என்பது தான் 'சேஃப்' ஆன பதில்!

ஒன்பிளஸ் 10RT தான் 10 சீரீஸின் கீழ் வரும் கடைசி ஸ்மார்ட்போனாக இருக்கலாம் அல்லது அந்த இடத்தை ஒன்பிளஸ் 10T கைப்பற்றலாம் (படிப்பதற்கே குழப்பமாக இருக்கிறது அல்லவா?)

ஒன்பிளஸ் 10ஆர்டி-ஐ பொறுத்தவரை, இது 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் உடன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா போன்ற அம்சங்களை பேக் செய்யும் என்று கூறப்படுகிறது.

இதுல ஃபினிஷிங் டச் வேற!

இதுல ஃபினிஷிங் டச் வேற!

நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர்களில் ஒருவரான முகுல் ஷர்மா வழியாக கிடைத்த தகவலின்படி, 10ஆர்டி ஸ்மார்ட்போன் ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், அமோஎல்இடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஆக்சிஜென்ஓஎஸ் 12 போன்ற அம்சங்களை பேக் செய்யும்.

மேலும் இது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே "எந்த ஒன்பிளஸ் 10 சீரீஸ் ஸ்மார்ட்போனை வாங்குவது என்று தெரியலையே?" என்று நிலவும் மக்களின் குழப்பத்திற்கு ஃபினிஷிங் டச் ஆக ஒரு மேட்டர் இருக்கு!

அது என்னவென்றால், OnePlus 10RT ஆனது OnePlus 10R 5G மாடலின் "அப்டேட்" டிசைன் மற்றும் அம்சங்களுடன் வருமாம்; ஆக 10ஆர் மாடலுக்கும் வேட்டு! அட போங்கப்பா.. ரியல்மி எவ்வளவோ பராவாயில்ல!

Best Mobiles in India

English summary
Is OnePlus Follow Realme Back to Back Launch Strategy After Nord 2T OnePlus 10T and 10RT on the row

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X