ஐயோ சாமி.. முழுசா ரூ.20,000 தள்ளுபடியா? Apple Watch 8 மீது நம்ப முடியாத விலை குறைப்பு.. உடனே வாங்குங்க..
ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் ரசிகர்களுக்கு ஒரு ஜாக்பாட் சலுகையை அறிவித்துள்ளது. யாருமே நம்ப முடியாத வகையில், ஆப்பிள் நிறுவனம் இப்போது அதன் ஆப்பிள் வாட்ச் 8 (Apple Watch 8) ஸ்மார்ட்வாட்ச் மீது முழுதாக ரூ.20,000 தள்ளுபடியை இந்தியாவில் அறிவித்துள்ளது.
என்னது? 20,000 ரூபாய் தள்ளுபடியா? கைதவறி 2000 ரூபாய் என்பதற்கு பதிலாக 20,000 ரூபாய் என்று டைப் செய்து விட்டார்களோ? என்று சந்தேகத்துடன் பார்க்காதீர்கள். உண்மையாலுமே, ரூ.20,000 தள்ளுபடியை ஆப்பிள் இப்போது அறிவித்துள்ளது. இந்த சிறப்பு சலுகை இந்திய ஆப்பிள் ரசிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்வாட்ச்களிலேயே மிகவும் ஸ்மார்ட் ஆன ஆப்பிள் வாட்சை வாங்க இது தான் சரியான நேரம் மக்களே.

ஆப்பிள் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி, இந்தியாவில் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 சாதனம் இப்போது மிகப் பெரிய தள்ளுபடியைப் பெற்றுள்ளது. ஆப்பிள் நிறுவனம் முதன்முதலில் இந்த ஆப்பிள் வாட்ச் 8 ஸ்மார்ட்வாட்ச் சாதனத்தை கடந்த 2022 இல் அறிமுகம் செய்தது. இப்போது, இந்த மாடல் மீது இந்திய மதிப்பின் படி சுமார் ரூ.20,000-க்கும் அதிகமான பெரிய தள்ளுபடியைப் பெற்றுள்ளது.
ஆம், ரவுண்டாக வெறும் 20,000 என்று நினைத்துவிடாதீர்கள். இந்த தள்ளுபடி 20,901 ரூபாய் வரை செல்கிறது. ஆப்பிள் இன் ஸ்மார்ட்வாட்ச் வரிசையில் முக்கிய அம்சங்களை பெற்ற ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 சாதனத்தின் 41mm வேரியண்ட் மாடல் மீது இந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் (Smartwatch) சாதனம் இப்போது வெறும் 24,999 ரூபாய்க்கு வாங்க கிடைக்கிறது.
அமெரிக்க டாலர் மதிப்பின் படி, இதன் தற்போதைய விலை தோராயமாக 302 அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்த மாடல் முதன்முதலில் இந்தியாவில் 45,900 ரூபாய் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாபெரும் தள்ளுபடியான ரூ. 20,901 மதிப்புள்ள தள்ளுபடிக்கு பிறகு, இந்த ஆப்பிள் வாட்ச் 8 சாதனத்தின் விலை சுமார் 45 சதவீதம் குறைந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் தற்போது இப்பகுதியில் பிரபலமான இ-காமர்ஸ் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளமான பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கிறது. இத்துடன் கூடுதல் சலுகையாக, Axis, Citi மற்றும் ICICI கிரெடிட் கார்டு பயனர்களுக்கு ரூ. 1,500 வரை எக்ஸ்ட்ரா தள்ளுபடியும் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி விலை ஆப்பிள் வாட்ச் 8 சாதனத்தின் மிட்நைட் பிளாக் வண்ண விருப்பத்திற்கு மட்டுமே பொருந்தும் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த விலை வரம்பில், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 8 ஒரு சிறந்த ஒப்பந்தமாகும். இது புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 இன் சில அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், வாட்ச் சீரிஸ் 8 கிட்டத்தட்ட வாட்ச் சீரிஸ் 9 ஐப் போலவே உள்ளது. தெரியாதவர்களுக்கு, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 ஆனது செப்டம்பர் 2023 இல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 இப்போது பிளிப்கார்ட்டில் ரூ. 32,999 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








