ஆளுக்கொரு 50 இன்ச் டிவி.. ரூ.25,000 பட்ஜெட்ல 4K மாடல்.. சைபர்சவுண்ட் சீரிஸ்.. டால்பி வீடியோ.. 60W ஆடியோ!
ஹோம் தியேட்டர் அனுபவம் கொடுக்கும்படியான 50 இன்ச் அல்ட்ரா எச்டி டிஸ்பிளே, டால்பி விஷன் வீடியோ, டால்பி அட்மோஸ் ஆடியோ, 60W ஸ்பீக்கர் அவுட்புட் போன்ற பொளந்து கட்டும் பீச்சர்களை கொண்ட ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் டிவி டிஸ்கவுண்ட்டில் ரூ.25,000 பட்ஜெட்டுக்குள் கிடைக்கிறது.
அதுட்டுமல்லாமல், கூகுள் டிவி ஓஎஸ், 4K ரெசொலூஷன், 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி போன்ற முக்கிய அம்சங்களில் பின்னிப்பெடல் எடுக்கிறது. ஃபிரேம்லெஸ் டிஸ்பிளே கொண்டிருப்பதால், டிஸ்பிளே அவுட்புட் பட்டையை கிளப்பும். இந்த டிவியில் என்னென்ன பீச்சர்கள் வருகின்றன. விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்கள் இதோ.

50 இன்ச் ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் டிவி அம்சங்கள் (50 inch Blaupunkt CyberSound TV Specifications): இதுவொரு சைபர்சவுண்ட் ஜி2 சீரிஸ் (CyberSound G2 Series) மாடலாகும். 50 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. 4K அல்ட்ரா எச்டி ரெசொலூஷன், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது.
ஐபிஎஸ் பேனல் (IPS Panel) வருகிறது. டால்பி விஷன் (Dolby Vision), மோஷன் சென்சார் (Motion Sensor) மற்றும் டிஜிட்டல் நாய்ஸ் ஃபில்டர் (Digital Noise Filter) வருகிறது. பெசல்-லெஸ் டிசைன் (Bezel Less Design) மற்றும் 178 வியூ ஆங்கிள் வருவதால், வீடியோ அனுபவம் பிரீமியமாக எதிர்பார்க்கலாம். டிஸ்பிளே மட்டுமல்லாமல், ஆடியோவும் மிரளவிடுகிறது.
60 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட் கொண்டிருக்கிறது. பாக்ஸ் டைப் ஸ்பீக்கர்கள் வருகின்றன. டால்பி டிஜிட்டல் பிளஸ் (Dolby Digital Plus), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டிடிஎஸ் ட்ரூசரவுண்ட் (DTS TruSurround) சப்போர்ட் வருகிறது. ஆடியோ மோட்களை பார்க்கையில், ஸ்டான்டர்ட் (Standard), மியூசிக் (Music), மூவிஸ் (Movie), ஸ்போர்ட்ஸ் (Sports) வருகின்றன.
இந்த 50 இன்ச் ப்ளூபங்க்ட் சைபர்சவுண்ட் டிவியில் கூகுள் டிவி ஓஎஸ் (Google TV OS) வருகிறது. குவாட் கோர் மீடியாடெக் ஆர்ம் கோர்டெக்ஸ் ஏ53 (Quad-core MediaTek ARM Cortex A53) சிப்செட் வருகிறது. மாலி குவாட்-கோர் ஜிபியு (Mali Quad-core GPU) கிராபிக்ஸ் வருகிறது. 2 ஜிபி ரேம் + 16 ஜிபி மெமரி சப்போர்ட் கொண்டிருக்கிறது.
கூகுள் ஓஎஸ் வருவதால், கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் கொண்டிருக்கிறது. ஆகவே, யூடியூப் (YouTube), நெட்ஃபிளிக்ஸ் (Netflix), அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) உள்ளிட்ட ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம்.
அதேபோல குரோம் காஸ்ட் (Chromecast), ஏர்பிளே (AirPlay) போன்றவற்றையும் பயன்படுத்தலாம். இந்த டிவியின் போர்ட்களை பொறுத்தவரை, 2 யுஎஸ்பி போர்ட் (USB Port), 3 எச்டிஎம்ஐ போர்ட் (HDMI), ஈதெர்நெட் போர்ட் (Ethernet Port) மற்றும் ஆடியோ ஜாக் சப்போர்ட் கொண்டிருக்கிறது. அதேபோல ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் வை-பை கனெக்டிவிட்டி சப்போர்ட் கொண்டுள்ளது.
இந்த டிவிக்கு ஸ்மார்ட் ரிமோட் (Smart Remote) வருகிறது. 1 வருட வாரண்ட்டி கொடுக்கப்படுகிறது. இந்த ப்ளூபங்க்ட் டிவியின் விலை ரூ.25,999ஆக இருக்கிறது. இந்த விலையில், பிளிப்கார்ட் (Flipkart) தளத்தில் ரூ.1250 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.24,749 பட்ஜெட்டில் இந்த டிவியை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications