Home
News

ஓ மை காட்.. ஒற்றை கண் கேமராவுடன் புது iPhone SE 4.. பட்ஜெட் விலை.. தெறிக்கவிடும் அம்சம்.. எப்போது அறிமுகம்?

பட்ஜெட் விலையில் புதிய ஐபோன் (iPhone) சாதனங்களை வாங்கும் காலம் வரப்போகிறது. ஆம், இனி அதிக காசு கொடுத்து ஒரு ஐபோன் சாதனத்தை வாங்க வேண்டுமென்ற நிலைமை இருக்க போவதில்லை. காரணம், பட்ஜெட்டில் புதிய ஐபோன் (new budget iPhone) வெளியாகவிருக்கிறது.

iPhone: தெரியாதவர்களுக்கு, ஆப்பிள் (Apple) நிறுவனம் உருவாக்கி வரும் அதன் ஐபோன் 16 சீரிஸ் (iPhone 16 series) வரிசையில், SE மாடல் ஐபோன் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது என்று கூறப்பட்டு வந்தது. இது தொடர்பாக பல லீக் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தது. இப்போது ஐபோன் எஸ்இ 4 (iPhone SE 4) அல்லது ஐபோன் 16 SE என்று அழைக்கப்படும்.

ஓ மை காட்.. ஒற்றை கண் கேமராவுடன் புது iPhone SE 4.. பட்ஜெட் விலை..

ஐபோன் SE 4 (iPhone SE 4): இந்த புதிய ஐபோன் சாதனத்தின் வருகையை உறுதி செய்யு விதமாக, இப்போது CAD தளத்தில் ஐபோன் SE 4 சாதனத்தின் ரெண்டெர் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் வரப்போகும் ஐபோன் SE 4 (iPhone SE 4) சாதனங்களின் வடிவமைப்பை அப்படியே காண்பித்துள்ளது. இதன் வடிவமைப்பு ஐபோன் 14 சாதனத்தை போன்ற தோற்றத்துடன் காட்சியளிக்கிறது.

டைனமிக் ஐலேண்ட்: ஆனால், பின்பக்கத்தில் ஒற்றை கேமரா மாட்யூல் டிசைனை கொண்டுள்ளது. அதேபோல், இந்த புதிய ஐபோன் SE 4 (iPhone SE 4) ஸ்மார்ட்போன் சாதனம் டைனமிக் ஐலேண்ட் (dynamic island) அம்சத்தை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட புதிய அம்சங்களில் ஒன்று தான் டைனமிக் ஐலேண்ட். இந்த அம்சம் புதிய ஐபோன் மாடல் மற்றும் பழைய ஐபோன் மாடல்களை பிரித்துப்பார்க்கவும் அனுமதிக்கிறது.

பேஸ் ஐடி: தற்போது விற்பனை செய்யபப்படும் 8 ஐபோன் மாடல்களில் உள்ள புதிய மாடல்களில் மட்டும் இந்த டைனமிக் ஐலேண்ட் அம்சம் காணப்படுகிறது. ஐபோன் வரிசையில் மிகவும் குறைந்த விலை போனாக ஆப்பிள் ஐபோன் SE மாடல் திகழ்கிறது. குறைந்த விலை ஐபோனில் டைனமிக் ஐலேண்ட் அம்சம் மற்றும் பேஸ் ஐடி (face ID) அம்சம் இடம்பெறப் போகிறது என்று வெளியாகியுள்ள தகவல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓ மை காட்.. ஒற்றை கண் கேமராவுடன் புது iPhone SE 4.. பட்ஜெட் விலை..

கேமரா பில் டிசைன்: இப்போது வெளியான CAD ரெண்டார் புகைப்படங்களும் டைனமிக் ஐலேண்ட் டிஸ்பிளே இருப்பதை காண்பிக்கிறது. அதேபோல், ஐபோன் 16 SE அல்லது ஐபோன் SE 4 சாதனம் கேமரா பில் (iphone 16 SE camera pill) வடிவமைப்பை பெரும் என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இதன் அளவு ஏறக்குறை ஐபோனின் முந்தைய மாடலான ஐபோன் XR அளவில் இருக்குமென்று கூறப்படுகிறது.

ஒற்றை கண் கேமரா அமைப்பு: டைனமிக் ஐலேண்ட் மற்றும் கேமரா அமைப்பு ஐபோன் 16 போல் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், ஐபோன் 16 இல் இருக்கும் இரண்டு கேமரா போல் இல்லாமல், ஒற்றை கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. இந்த ஒற்றை கேமரா அமைப்பை பார்ப்பதற்கு வரவிருக்கும் புதிய ஐபோன் SE 4 சாதனத்தை ஒற்றை கண்ணுடன் காட்சியளிப்பது போல் தெரிகிறது.

ஐபோன் SE 4 எப்போது அறிமுகம்? இணையத்தில் லீக் ஆகியுள்ள இந்த புதிய ஐபோன் SE சாதனத்தின் புகைப்படங்கள் நமது ஆர்வத்தை அதிகரித்துள்ளது. ஆப்பிள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த புதிய ஐபோன் SE 4 (iPhone SE 4) அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது. இதன் அறிமுகம் இந்த வருடம் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் ஐபோன் வாங்க இந்த வருடம் வாய்ப்புள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Apple iPhone SE 4 CAD renders shows 6.1 inch dynamic island display and face ID
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X