நினைச்சு கூட பார்க்காத விலையில் Redmi K50i 5G; அவசரப்பட்டு வேற போன் வாங்கிடாதீங்க!

|

ரெட்மி நிறுவனத்தின் கே சீரிஸ் (K Series) ஸ்மார்ட்போன்கள் மீண்டும் இந்தியாவிற்கு வருகின்றன என்கிற 'மேட்டர்' உறுதி செய்யப்பட்டதில் இருந்து, பெரும்பாலான ரெட்மி ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பும் - ரெட்மி கே50 ப்ரோ மீது குவிந்தது.

சின்ன வருத்தம் தான் ஆனாலும் பரவாயில்லை!

சின்ன வருத்தம் தான் ஆனாலும் பரவாயில்லை!

இந்தியாவில் கடைசியாக அறிமுகமான ரெட்மி கே20 ப்ரோ மாடலின் 'சக்ஸஸ்' தான், ரெட்மி கே50 ப்ரோ மீதான எதிர்பார்ப்பை கிளப்பி விட்டது, "வந்தால் கே50 ப்ரோ தான் வரும்!" என்கிற ஆர்வத்தை தூண்டி விட்டது என்று கூறினால் அது மிகையாகாது.

ஆனால் ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்யப்போவது என்னவோ - ரெட்மி கே50ஐ 5ஜி ஸ்மார்ட்போனை தான். ரெட்மி ரசிகர்களுக்கு அதில் சின்ன வருத்தம் தான் ஆனாலும் பரவாயில்லை.

ஏனெனில் Redmi K50i 5G ஸ்மார்ட்போனும் ஒரு 'மாஸ்' ஆன மாடலாகத்தான் இருக்கும். ஏனெனில், பெரும்பாலும் இது Redmi Note 11T Pro ஸ்மார்ட்போனின் 'ரீபிராண்டட் வெர்ஷன்' ஆக வரலாம்.

ஜூலை 20-க்கு முன் வேற ஸ்மார்ட்போன் வாங்கிடாதீங்க!

ஜூலை 20-க்கு முன் வேற ஸ்மார்ட்போன் வாங்கிடாதீங்க!

ஏனெனில், ரெட்மி இந்தியா அதன் Redmi K50i 5G ஸ்மார்ட்போனை வருகிற ஜூலை 20 ஆம் தேதியன்று தான் அறிமுகம் செய்ய உள்ளது. இது அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும் என்கிற தகவலும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் விற்பனை தேதி குறித்து எந்த தகவலையும் அமேசான் பக்கத்தில் காண முடியவில்லை. எவ்வாறாயினும், இது ஜூலை 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள Amazon Prime Day Sale 2022-இன் போது வாங்க கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 10 வரை மட்டுமே; இவ்ளோ கம்மி விலைக்கு இந்த 5 போன்களும் இனி கிடைக்காது!ஜூலை 10 வரை மட்டுமே; இவ்ளோ கம்மி விலைக்கு இந்த 5 போன்களும் இனி கிடைக்காது!

இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகம் ஆகும்?

இந்தியாவில் என்ன விலைக்கு அறிமுகம் ஆகும்?

எதிர்பார்க்கப்படும் விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ரெட்மி கே50ஐ 5ஜி ஸ்மார்ட்போன் (பேஸிக் வேரியண்ட்) ஆனது இந்தியாவில் ரூ.24,000 முதல் ரூ.28,000 க்குள் அறிமுகம் செய்யப்படலாம்.

இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், பேஸிக் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.26,999 க்கும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ. 29,000 - ரூ.33,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வெளியாகலாம்.

தள்ளுபடி மற்றும் சலுகைகள் கிடைக்குமா?

தள்ளுபடி மற்றும் சலுகைகள் கிடைக்குமா?

கண்டிப்பாக! அமேசானை தவிர்த்து Mi ஸ்டோர்ஸ் மற்றும் ரீடெயில் பார்ட்னர்ஸ் வழியாகவும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குவதற்காக சியோமி நிறுவனம் - வழக்கம் போல - எச்டிஎப்சி வங்கி உடன் கூட்டு சேரலாம்.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் க்விக் சில்வர், ஃபாண்டம் ப்ளூ மற்றும் ஸ்டெல்த் பிளாக் வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஒரு தகவல் உள்ளது.

Google எச்சரிக்கை! இந்த 4 ஆப்களையும் உடனே DELETE செய்யவும்; ஏனென்றால்?Google எச்சரிக்கை! இந்த 4 ஆப்களையும் உடனே DELETE செய்யவும்; ஏனென்றால்?

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

முன்னரே குறிப்பிட்டபடி, இது Redmi Note 11T Pro ஸ்மார்ட்போனின் ரீபிராண்டட் வெர்ஷனாக இருக்கும் பட்சத்தில், ரெட்மி கே50ஐ 5ஜி ஆனது 144Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடனான 6.6-இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளேவை பேக் செய்யலாம். உடன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,400mAh பேட்டரியையும் வழங்கலாம்.

மேலும் இது மீடியாடெக் டைமென்சிட்டி 8100 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். கேமராக்களை பொறுத்தவரை, இதில் 64எம்பி ப்ரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை எதிர்பார்க்கலாம்.

இடையில் சியோமி 12எஸ் சீரீஸும் அறிமுகம் ஆனது!

இடையில் சியோமி 12எஸ் சீரீஸும் அறிமுகம் ஆனது!

சியோமி தொடர்பான மற்ற ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை, நிறுவனத்தின் 12S சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டன.

குறிப்பிட்ட சீரீஸின் கீழ் அறிமுகமான அனைத்து மாடல்களுமே ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப் மற்றும் லைக்கா பிராண்டட் கேமராக்களை பேக் செய்கிறன.

இந்த சீரீஸின் கீழ் சியோமி 12எஸ், சியோமி 12எஸ் ப்ரோ மற்றும் சியோமி 12எஸ் அல்ட்ரா என மொத்தம் மூன்று மாடல்கள் அறிமுகமாகி உள்ளன. ஆனாலும் இது எதுவுமே இந்தியாவில் அறிமுகம் ஆகாது என்றும் கூறப்படுகிறது.

Photo Courtesy: Mi.com

Best Mobiles in India

English summary
Price of Redmi K50i 5G Smartphone leaked ahead of July 20 India Launch

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X