Home
Gadgets

வீட்டுக்குள்ள தியேட்டர் இல்ல.. தியேட்டர்குள்ள தான் வீடே.. 100-இன்ச் TV-ஐ அறிமுகம் செய்த Redmi.. என்ன விலை?

வீட்டிற்குள்ளேயே ஒரு மினி சினிமா தியேட்டர் போன்ற செட்டப்பை பார்த்து இருப்பீர்கள். அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று கூறவைக்கும்படியாக.. 100-இன்ச் அளவிலான ஒரு ரெட்மி ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்ன மாடல்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

சீன பிராண்ட் ஆன ஷாவ்மீயின், துணை நிறுவனமான ரெட்மி, அதன் ஸ்மார்ட் டிவி தயாரிப்பின் கீழ் 100-இன்ச் அளவிலான டிஸ்பிளே (100-inch Display) கொண்ட ஒரு புதிய கேமிங் டிவியை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி மேக்ஸ் (Redmi MAX) என்று அழைக்கப்படும் இந்த டிவியை ஒரு "கேமிங் ஸ்பெஷலிஸ்ட்" ஆக மாற்றுவது இதிலுள்ள 144ஹெர்ட்ஸ் ஸ்கிரீன் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz screen refresh rate) தான்!

100-இன்ச் TV-ஐ அறிமுகம் செய்த Redmi.. என்ன விலை?

அதாவது 100-இன்ச் ரெட்மி மேக்ஸ் டிவி ஆனது திரைப்படங்களை பார்ப்பதற்கு மட்டுமான ஒரு ஸ்மார்ட் டிவி அல்ல. இதிலுள்ள 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆனது கன்சோல் கேம்களை மிகச்சீராக விளையாட அனுமதிக்கும். போதாக்குறைக்கு இது ரெசல்யூஷன் (4K resolution) மற்றும் 144ஹெர்ட்ஸ் பேக்லிட் பேனலுடன் (144Hz backlit panel) வருகிறது. இது 700 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் (700 nits Peak Brightness) உடன் வருகிறது.

100-இன்ச் என்கிற அளவிலானஒரு ஸ்க்ரீனில் 4கே-வை விட குறைவான ரெசல்யூஷனை பயன்படுத்துவது ஒரு மோசமான யோசனையாக இருக்கும். எனவே தான் ரெட்மி நிறுவனம் இதில் 4கே ரெசல்யூஷனை சேர்த்துள்ளது. மேலும் இந்த டிவியில் காம்படிட்டிவ் மோட் (Competitive mode) என்கிற அம்சமும் உள்ளது. இந்த அம்சத்தை ஆக்டிவேட் (Activate) செய்யும் போது 240ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்டை (240Hz screen refresh rate) அடைய முடியும்.

100-இன்ச் TV-ஐ அறிமுகம் செய்த Redmi.. என்ன விலை?

ரெட்மியின் இந்த புதிய டிவி ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) கொண்டு இயங்கும் டிவைஸ்களுடன் தடையின்றி செயல்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. சுவாரசியமாக இந்த டிவி வைஃபை 6 தரநிலையை (Wi-Fi 6 standard) ஆதரிக்கிறது.

கார்டெக்ஸ் ஏ73 குவாட் கோர் ப்ராசஸர்களை (Cortex A73 quad-core processors) கொண்ட சிப் மூலம் இயங்கும் இந்த 100-இன்ச் ஸ்மார்ட் டிவியானது டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) மற்றும் எச்டிஆர்10+ (HDR10+) போன்றவைகளையும் ஆதரிக்கிறது. கூடுதலாக, இதில் இரண்டு பில்ட்-இன் 15வாட் ஸ்பீக்கர்களையும் (Built-in 15W speakers) கொண்டுள்ளது.

100-இன்ச் TV-ஐ அறிமுகம் செய்த Redmi.. என்ன விலை?

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இதில் 3 எச்டிஎம்ஐ போர்ட்கள் (HDMI Ports), 2 யூஎஸ்பி போர்ட்கள் (USB Ports) மற்றும் 1 ஈதர்நெட் போர்ட் (Ethernet port) உள்ளது. அளவீடுகளை பொறுத்தவரை இது தோராயமாக 2.2 மீட்டர் அகலமும், 1.2 மீட்டர் நீளமும், 63 கிலோ எடையும் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பெயருக்கு ஏற்றது போல ரெட்மி மேக்ஸ் டிவி ஆனது உண்மையிலேயே "மிகப்பெரியதாக" இருக்கிறது.

விலையை பொறுத்தவரை, சீன சந்தையில் ரெட்மியின் இந்த 100-இன்ச் கேமிங் டிவியானது, இந்திய மதிப்பின்படி தோராயமாக 1 லட்சத்து ஆறாயிரம் ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அங்கே இந்த டிவியை முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.17,300 மதிப்புள்ள ஷாவ்மீ டிவி ஸ்பீக்கர் (Xiaomi TV Speaker) இலவசமாக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் ஷாவ்மீ மற்றும் ரெட்மி ஆகிய இரண்டுமே அதிகபட்சம் 65-இன்ச் வரையிலான ஸ்க்ரீன் சைஸ் கொண்ட ஸ்மார்ட் டிவிகளை மட்டுமே விற்பனை செய்வதால்.. 100-இன்ச் ரெட்மி மேக்ஸ் டிவி ஆனது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்பில்லை. ஆனால் எதையுமே எப்போதுமே உறுதியாக சொல்ல முடியாது. எப்போது வேண்டுமானலும் ஷாவ்மீ அதன் பிக் சைஸ் டிவி மாடல்களை இந்தியாவிற்கும் கொண்டு வரலாம்.

Best Mobiles in India

English summary
100 inch Redmi Max Smart TV Which Makes Your Home into Cinema Theatre Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X