Home
News

டிஸ்கவுண்ட்-னா இப்படி இருக்கணும்.. TV-கள் மீது ரூ.21,000.. Mobile-கள் மீது ரூ.10,000.. ஏப்.12 வரை அள்ளிகோங்க!

சியோமி இந்தியா (Xiaomi India) வலைத்தளமானது, 2024 ஆம் ஆண்டிற்கான அதன் ஃபேன் ஃபெஸ்டிவல் விற்பனையை (2024 Fan Festival) அறிவித்துள்ளது. ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கிய இந்த சிறப்பு விற்பனையானது ஏப்ரல் 12 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.

சீன நிறுவனமான சியோமி, தனது பிராண்ட்டை உலகளவில் அறிமுகம் செய்து 14 ஆண்டுகள் ஆகிறது. அதை கொண்டாடும் நோக்கத்தின் கீழ் சியோமி ஃபேன் ஃபெஸ்டிவல் நடக்கிறது. இதன்கீழ் சியோமி மற்றும் ரெட்மி பிராண்டிங்கின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட பல வகையான தயாரிப்புகளுக்கு பெரிய அளவிலான தள்ளுபடிகள் கிடைக்கும்.

டிஸ்கவுண்ட்-னா இப்படி இருக்கணும்! ஏப்.12 வரை Xiaomi Fan Festival சேல்!

கூடுதலாக ஐசிஐசிஐ வங்கி கார்டு பரிவர்த்தனைகளுக்கு ரூ.5,000 கேஷ்பேக் சலுகையும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஃபேன் ஃபெஸ்டிவலின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுமே சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான எம்ஐ.காம் (Mi.com), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் (Amazon) என பல வழிகளில் ஆக கிடைக்கும். மேலும் இந்த சலுகைகள் ஷாவ்மீ ஹோம் (Xiaomi Home) மற்றும் ஷாவ்மீ ரீடெய்ல் ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது? சியோமி ஃபேன் ஃபெஸ்டிவல் 2024-க்கான லேண்டிங் பேஜின்படி, ஷாவ்மீ 14 (Xiaomi 14) ஆனது அதன் வெளியீட்டு விலையான ரூ.69,999 க்கு பதிலாக ரூ.59,999 க்கு, அதாவது ரூ.10,000 மலிவான விலைக்கு வாங்க கிடைக்கும்.

டிஸ்கவுண்ட்-னா இப்படி இருக்கணும்! ஏப்.12 வரை Xiaomi Fan Festival சேல்!

மேலும் ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5ஜி (Redmi Note 13 Pro Plus 5G) மாடலானது அதன் வெளியீட்டு விலையான ரூ. 31,999 க்கு பதிலாக ரூ.28,999 க்கு வாங்க கிடைக்கும். ரெட்மி 12 (Redmi 12) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,999 க்கு பதிலாக ரூ.8,499 க்கு வாங்க கிடைக்கும். இதே ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் ஆனது ரெட்மி 12 5ஜி ஆனது ரூ.15,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கும்.

12 சீரிஸ்-க்கு பின்னர் வெளியான ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.9499 க்கு வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இதன் அசல் விலை ரூ.13,999 ஆகும். இதேபோல ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G) மாடலானது, அதன் விளையான ரூ.22,999 க்கு பதிலாக ரூ.16,499 க்கு வாங்க கிடைக்கும்.

டிஸ்கவுண்ட்-னா இப்படி இருக்கணும்! ஏப்.12 வரை Xiaomi Fan Festival சேல்!

என்னென்ன ஸ்மார்ட் டிவிகள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது? 43-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் 4கே ஃபயர் டிவி (43-inch Redmi Smart Fire 4K TV) ஆனது ரூ.42,999 க்கு பதிலாக ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கும். அதாவது ரூ.21,000 மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது என்று அர்த்தம்.

இதேபோல 5-இன்ச் ஷாவ்மீ ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரீஸ் (Xiaomi Smart TV X 50) மாடல் ஆனது ரூ,44,999 க்கு பதிலாக ரூ.30,999 க்கும், 32-இன்ச் ஷாவ்மீ ஸ்மார்ட் டிவி ஏ சீரீஸ் (Xiaomi Smart TV A 32) மாடல் ஆனது ரூ.24,999 க்கு பதிலாக ரூ.11,699 க்கும் வாங்க கிடைக்கிறது.

மேலும் 43-இன்ச் ஷாவ்மீ டிவி எக்ஸ் சீரீஸ் மாடல் ரூ.42,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கும், 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் ஃபயர் டிவி (Redmi Smart Fire TV 32) மாடல் ரூ.24,999 க்கு பதிலாக ரூ.10,799 க்கும் வாங்க கிடைக்கிறது.

ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் மட்டுமின்றி 2024 ஆம் ஆண்டிற்கான இந்த சியோமி ஃபேன் ஃபெஸ்டிவலின் போது ஷாவ்மீ பேட் 6 (Xiaomi Pad 6) ஆனது ரூ.22,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. இது தவிர்த்து ஸ்மார்ட் வாட்ச், பவர் பேங்க், இயர்பட்ஸ் மீதும் நேரடி தள்ளுபடிகள் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
2024 Xiaomi Fan Festival Sale Discounts on Mobile Phones Smart TV Models Until April 12
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X