Home
Tablets

அப்படி போடு.. 10000mAh பேட்டரி.. 12.1 இன்ச் டிஸ்பிளே.. 256GB மெமரி.. ரெட்மி டேப்லெட் அறிமுகம்.. என்ன விலை?

ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி பேட் ப்ரோ எனும் புதிய டேப்லெட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த டேப்லெட் ஆனது குவாட் ஸ்பீக்கர்கள், ஸ்னாப்டிராகன் சிப்செட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இப்போது இந்த டேப்லெட் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி பேட் ப்ரோ அம்சங்கள் (Redmi Pad Pro specifications): 12.1-இன்ச் 2.5கே எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி பேட் ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், டால்பி விஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 2 பாதுகாப்பு உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த டேப்லெட் மாடலின் டிஸ்பிளே.

அப்படி போடு.. 10000mAh பேட்டரி.. ரெட்மி டேப்லெட் அறிமுகம்.. என்ன விலை?

2.4ஜிகாஹெர்ட் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 2 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 2 4nm) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி பேட் ப்ரோ மாடல். மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட் மாடல். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வரும் இந்த ரெட்மி பேட் ப்ரோ மாடல். மேலும் 1.5டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட்.

8எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பி கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி பேட் ப்ரோ மாடல். மேலும் HyperOS சார்ந்த ஆண்ட்ராய்டு 13 (Android 13) இயங்குதள வசதியுடன் இந்த ரெட்மி பேட் ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்டெல் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் (In-display fingerprint sensor), குவாட் ஸ்பீக்கர்கள் (Quad speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), டூயல் மைக்ரோஃபோன்கள் (Dual microphones), இன்ஃப்ராரெட் சென்சார் (Infrared Sensor) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ரெட்மி பேட் ப்ரோ மாடல்.

10,000எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த அட்டகாசமான ரெட்மி பேட் ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது. எனவே இந்த டேப்லெட் மாடலில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் (33W fast charging) வசதியைக் கொண்டுள்ளது. எனவே இதன் பேட்டரியை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும்.

அப்படி போடு.. 10000mAh பேட்டரி.. ரெட்மி டேப்லெட் அறிமுகம்.. என்ன விலை?

வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.2, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி பேட் ப்ரோ மாடல். மேலும் லைட் பே ப்ளூ (Light bay blue), ஸ்மோக்கி கிரீன் (Smoky green) மற்றும் டார்க் கிரே (Dark gray) நிறங்களில் இந்த ரெட்மி பேட் ப்ரோ மாடல் வெளிவந்துள்ளது.

அதேபோல் ரெட்மி பேட் ப்ரோ மாடல் ஆனது சீனாவில் மட்டும் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த டேப்லெட் உலக சந்தை மற்றும் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரெட்மி பேட் ப்ரோ மாடலின் ஆரம்ப விலை 1,499 yuan (இந்திய மதிப்பில் ரூ.17,595)-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Pad Pro with quad speakers announced: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X