ஜூலை 10 வரை மட்டுமே; இவ்ளோ கம்மி விலைக்கு இந்த 5 போன்களும் இனி கிடைக்காது!

|

"நல்ல ஆபர் விலையில் வரட்டும் பிறகு வாங்கலாம்!" என்கிற எண்ணத்தின் கீழ் நீண்ட நாட்களாகவே புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வாங்க வேண்டும் என்கிற திட்டம் உங்களுக்கு இருப்பின். இப்போது தொடங்கி ஜூலை 10 ஆம் தேதி வரை - உங்கள் காட்டில் மழை தான்!

ஏனெனில் பிரபல இகாமர்ஸ் தளமான பிளிப்கார்ட், 2022 ஜூலை மாதத்திற்கான அதன் சிறப்பு விற்பனையான 'எலக்ட்ரானிக்ஸ் சேல்-ஐ (Flipkart's Electronics Sale) அறிவித்து, அதை முழு வீச்சில் நடத்தியும் வருகிறது.

பல போன்கள் மீது ஆபர் மழை; குறிப்பாக போக்கோ மாடல்கள் மீது!

பல போன்கள் மீது ஆபர் மழை; குறிப்பாக போக்கோ மாடல்கள் மீது!

ஏற்கனவே தொடங்கிவிட்ட இந்த பிளிப்கார்ட் எலக்ட்ரானிக்ஸ் சேலின் கீழ், பல நிறுவனங்களின் பல வகையான ஸ்மார்ட்போன்களின் மீது தாறுமாறான ஆபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும் சில போக்கோ ஸ்மார்ட்போன்கள் மீது ஒப்பிடமுடியாத சலுகைகள் அணுக கிடைப்பதால், எங்களின் கண்கள் மட்டுமல்ல, பெரும்பாலான வாடிக்கையாளர்களின் கவனமும் 'போக்கோ போன்கள்' மீது மட்டுமே உள்ளது!

என்னென்ன போக்கோ போன்கள் மீது... ஆபர் அள்ளுது?

என்னென்ன போக்கோ போன்கள் மீது... ஆபர் அள்ளுது?

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி (Poco X4 Pro 5G), போக்கோ எம்4 ப்ரோ (Poco M4 Pro) ஸ்மார்ட்போனின் 4ஜி வேரியண்ட், அதே மாடலின் 5ஜி வேரியண்ட் (அதாவது Poco M4 Pro 5G), வெண்ணிலா வேரியண்ட் ஆன போக்கோ எம்4 5ஜி (Poco M4 5G) மற்றும் போக்கோ சி31 (Poco C31) போன்ற மாடல்கள் மீது "வேற லெவல்" ஆபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

OnePlus 10T விலை: தாறுமாறு.. அப்போ தாராளமா வெயிட் பண்ணலாம்!OnePlus 10T விலை: தாறுமாறு.. அப்போ தாராளமா வெயிட் பண்ணலாம்!

Poco X4 Pro 5G மீதான ஆபர்!

Poco X4 Pro 5G மீதான ஆபர்!

போக்கோ எக்ஸ்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, தற்போது நடந்து கொண்டிருக்கும் Flipkart இன் சிறப்பு விற்பனையின் கீழ் ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது 6ஜிபி ரேம் மற்றும் 64 இன்டர்னல் ஸ்டோரேஜின் ஆபர் விலை ஆகும். இதன் அசல் விலை ரூ.18,999 ஆகும்.

இதே போல Poco X4 Pro 5G ஸ்மார்ட்போனின் 6ஜிபி + 128ஜிபி மற்றும் 8ஜிபி + 128ஜிபி வேரியண்ட்கள் முறையே ரூ.16,999 க்கும், ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரூ.16,000 என்கிற விலைக்கு Poco X4 Pro 5G போன்றதொரு பெஸ்ட் ஸ்மார்ட்போனை உங்களால் பெற முடியாது என்பதால், இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம்!

Poco M4 Pro-வின் 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்கள் மீதான ஆபர்?

Poco M4 Pro-வின் 4ஜி மற்றும் 5ஜி வேரியண்ட்கள் மீதான ஆபர்?

போக்கோ எம்4 ப்ரோ 4ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.14,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.

மறுகையில் உள்ள போக்கோ எம்4 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 4ஜிபி + 64 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.14,999 க்கு பதிலாக ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது.

Motorola கிட்ட இருந்து இப்படி ஒரு Budget Phone-ஐ யாருமே எதிர்பார்க்கல! ஜூலை 11 முதல் SALE!Motorola கிட்ட இருந்து இப்படி ஒரு Budget Phone-ஐ யாருமே எதிர்பார்க்கல! ஜூலை 11 முதல் SALE!

Poco M4 5G மற்றும் Poco C31 மீதான ஆபர்?

Poco M4 5G மற்றும் Poco C31 மீதான ஆபர்?

எம்4 சீரீஸின் கீழ் வாங்க கிடைக்கும் 'நான்-ப்ரோ' மாடல் ஆன போக்கோ எம்4 5ஜி மீதான சலுகைகளை பொறுத்தவரை, இது ரூ.12,999 க்கு பதிலாக ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கும். இது குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் 4ஜிபி + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ஆகும்.

இதே போல போக்கோ சி31 ஆனது ரூ.8,499 க்கு பதிலாக ரூ.6,499 க்கு வாங்க கிடைக்கிறது. இது 3ஜிபி ரேம் + 32ஜிபி இன்டர்னல் ஸ்டார்ஜின் விலை ஆகும்.

மேற்கண்ட பெரும்பாலான விலைகள் பேஸிக் வேரியண்ட்களின் ஆபர் விலைகள் ஆகும் என்பதும், குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களின் மற்ற வேரியண்ட்கள் மீதும் சலுகைகள் உள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

போக்கோ தவிர்த்து வேறென்ன ஸ்மார்ட்போன்களின் மீது ஆபர் உள்ளது?

போக்கோ தவிர்த்து வேறென்ன ஸ்மார்ட்போன்களின் மீது ஆபர் உள்ளது?

ஆப்பிள் ஐபோன் 12 (128ஜிபி) - ரூ.70,900 க்கு பதிலாக ரூ.59,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆசஸ் 8இசட் (8ஜிபி ரேம் + 128 ஜிபி) - ரூ.48,999 க்கு பதிலாக ரூ.42,999 க்கு கிடைக்கிறது.

மோட்டோரோலா எட்ஜ் 20 ப்ரோ 5ஜி (8ஜிபி + 128 ஜிபி) - ரூ.45,999 க்கு பதிலாக ரூ. 32,999 க்கு வாங்க கிடைக்கும்.

மோட்டோரோலா எட்ஜ் 20 5ஜி (8ஜிபி + 128ஜிபி) - ரூ.34,999 க்கு பதிலாக ரூ.24,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ரியல்மி 9 ப்ரோ+ 5ஜி (8ஜிபி + 128ஜிபி) - ரூ.29,999 க்கு பதிலாக ரூ.26,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரியல்மி ஜிடி 2 ப்ரோ (8ஜிபி + 128ஜிபி) - ரூ.57,999 க்கு பதிலாக ரூ.49,999 என்கிற சலுகையை பெற்றுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Flipkart Electronics Sale 2022 Heavy Price Cut on Poco Smartphones including Poco X4 Pro 5G

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X