Xiaomi-ன் தங்கச்சி வெளியிடும் புது Smartphone.. 2K OLED டிஸ்பிளே.. 2TB ஸ்டோரேஜ்.. மார்க்கெட்டே மிரள போகிறது..
சியோமியின் (Xiaomia) தங்கச்சி நிறுவனமான ரெட்மி (Redmi) விரைவில் புதிதாக 2 ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யவுள்ளது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் உடன் அறிமுகமாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சிப்செட்டுடன் அறிமுகமாகும் முதல் போனாக இது இருக்கும்.
ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் (Smartphone) மாடல் ரெட்மி கே80 (Redmi K80) என்ற பெயருடன் விரைவில் சந்தைக்கு வெளிவர உள்ளது என்று லீக் தகவல் குறிப்பிட்டுள்ளது. ஸ்மார்ட் பிக்காச்சு (Smart Pikachu) என்ற நம்பகமான டிப்ஸ்ட்டர் வெளியிட்ட தகவல் வழியாக இந்த ரெட்மி கே80 (Redmi K80) பற்றிய லீக் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரெட்மி கே80 (Redmi K80):
ரெட்மி K70 ஸ்மார்ட்போனை நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்தது. இதற்கு அடுத்தபடியாக, நிறுவனம் இப்போது ரெட்மி கே80 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய சுவாரசியமான தகவல்கள் இப்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இந்த போனின் சிப்செட் (chipset), பேட்டரி (battery), டிஸ்பிளே (display) போன்ற விபரங்களை பற்றி இப்பொது விரிவாக பார்க்கலாம்.
சீனாவின் வெய்போ (Weibo) பக்கத்தில் டிப்ஸ்டர் ஸ்மார்ட் பிக்காச்சு (Smart Pikachu) வெளியிட்ட தகவலின் படி, வரவிருக்கும் புதிய ரெட்மி கே80 (Redmi K80) ஸ்மார்ட்போன் சாதனம் 5500mAh பேட்டரி உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை விட 500mAh அதிகமான பேட்டரி (Battery) சக்தியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த மாடல் 2 மாடலாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் 1 ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ரெட்மி கே80 (Redmi K80) ஸ்மார்ட்போன் மாடல் மற்றும் ப்ரோ வேரியண்ட் என்ற 2 மாடலக்ளை இந்த சீரிஸ் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் மாடல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 3) உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

ரெட்மி கே80 2TB ஸ்டோரேஜ் உடன் வெளிவருமா?
இதன் ப்ரோ வேரியண்ட் மாடல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 4) உடன் வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வரவிருக்கும் ரெட்மி கே80 ஸ்மார்ட்போன் சாதனம் 2K OLED ரெசொலூஷன் டிஸ்பிளேவை (Display) கொண்டுள்ளது. இது பீக் பிரைட்னஸ் லெவல் அம்சத்துடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பின்பக்கத்தில் கிளாஸ் பேனல் உடன் மெட்டல் பாடியை பெரும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய ரெட்மி கே80 ஸ்மார்ட்போன் சாதனம் 2 ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதன் முந்தைய மாடலை போல இதில் கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்காக 1TB ஸ்டோரேஜ் கண்டிப்பாக இருக்குமென்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2TB ஸ்டோரேஜ்ஜை கூட வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 120W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறுகிறது.


Click it and Unblock the Notifications