அதிரி புதிரி ஆர்டர்.. 108எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. ஆஃபரில் ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆனது 108எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
தற்போது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோர்ட் 13 5ஜி போனுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் ரூ.17,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே ரூ.16499 விலையில் இந்த போனை வாங்க முடியும்.

ரெட்மி நோட் 13 5ஜி அம்சங்கள் (Redmi Note 13 5G Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 6080 ஆக்டோ-கோர் 5ஜி (Mediatek Dimensity 6080 6nm Octa-core 5G) சிப்செட் உடன்; ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதேபோல் MIUI 14 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதியுடன் இந்த போன் அறிமுகமானது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
இந்த ரெட்மி நோட் 13 5ஜி ஆனது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் pOLEDடிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 1080x2400 பிக்கசல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான போன்.
ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 108எம்பி பிமைரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது . எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா கொண்டு வெளிவந்துள்ளது இந்த ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன்.
மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். அதேபோல சாண்ட் ஒயிட், மிட்நைட் பிளாக் மற்றும் டைம் ப்ளூ ஆகிய 3 கலர்கள் விற்பனைக்கு வருகிறது இந்த ரெட்மி நோட் 13 5ஜி போன். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக 5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும் என்று கூறுகிறது சியோமி நிறுவனம். மேலும் இந்த பேட்டரி சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இந்த போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் இந்த ரெட்டமி போனுக்கு IP54 தர டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust And Splash Resistant), சைடு மவுண்ட்டெட் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் (Side Mounted Fingerprint Scanner) மற்றும் இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor) கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications