Home
Mobile

கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஐடெல் நிறுவனம் தனது புதிய ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதுவும் கம்மி விலையில் 108எம்பி கேமரா, 8ஜிபி ரேம், மீடியாடெக் சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த புதிய போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஐடெல் எஸ்24 அம்சங்கள் (itel S24 Specifications): 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே 6.6-இன்ச் எச்டிபிளஸ் (HD+) ஐபிஎஸ் எல்சிடி (IPS LCD) டிஸ்பிளே வசதியுடன் இந்த அசத்தலான ஐடெல் எஸ்24 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1612 x 720 பிக்சல்ஸ், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 480 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

ரூ.10,999 போதும்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?

பெரிய டிஸ்பிளே மற்றும் சிலிம் டிசைன் கொண்டு இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதியுடன் இந்த ஐடெல் எஸ்24 போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது

தரமான மீடியாடெக் ஹீலியோ ஜி91 12என்எம் (MediaTek Helio G91 12nm) சிப்செட் வசதியுடன் இந்த அசத்தலான ஐடெல் எஸ்24 போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் ஐடெல் ஓஸ் 13.5 (itel OS 13.5) சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் ஐடெல் எஸ்24 போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

ரூ.10,999 போதும்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?

108 எம்பி சாம்சங் எச்எம்6 ஐசோசெல் (Samsung ISOCELL HM6) சென்சார் + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கொண்டுள்ளது இந்த ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன்.

போர்ட்ராய்டு மாஸ்டர் (Portrait Master),மூவி மாஸ்டர் (Movie Master), டூயல் வீயூ வீடியோ (Dual-view Video), வீடியோ பொக்கெ (Video Bokeh), சூப்பர் ஸ்டெடி வீடியோ ஸ்டெபிளைசேஷன் (Super Steady Video Stabilization) போன்ற கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

5000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பைபாஸ் சார்ஜிங் சப்போர்ட் கூட உள்ளது. யுஎஸ்பி சி போர்ட் (USB-C port), சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner), டூயல் ஸ்பீக்கர்கள் மற்றும் எப்எம் ரேடியோ ஆதரவும் இந்த போனில் உள்ளன.

ரூ.10,999 போதும்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?

டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11, புளூடூத் 5, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் டான் ஒயிட் (Dawn White) மற்றும் ஸ்டார்ரி பிளாக் (Starry Black) நிறங்களில் இந்த போன வாங்க முடியும். குறிப்பாக 194 கிராம் எடை உடன் ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐடெல் எஸ்24 ஸ்மார்ட்போனை ரூ.10,999 விலையில் வாங்க முடியும். மேலும் அமேசான் தளத்தில் இந்த புதிய போன் விற்பனைக்கு வருகிறது. அனைத்து சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் வாங்க கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
itel S24 launched in India with 108MP camera: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X