Home
Mobile

ஆர்டர்னு போட்ட இதான்.. பட்ஜெட்ல OLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 90W சார்ஜிங்.. 16GB ரேம்.. எந்த மாடல்?

இந்த போன் வரட்டும் வெயிட் பண்ணி வாங்குவோம் என்று சொல்லும்படி ஓஎல்இடி டிஸ்பிளே, 16ஜிபி ரேம், சோனி கேமரா, 90W சார்ஜிங் போன்ற அம்சங்களுடன் அல்ட்ரா ஸ்லிம் டிசைனில் ரெட்மி டர்போ 3 (Redmi Turbo 3) போன் வெளியாக இருக்கிறது.

ரெட்மி டர்போ 3 அம்சங்கள் (Redmi Turbo 3 Specifications): இந்த ரெட்மியில் 6.67 இன்ச் ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. பிளாட் டிஸ்பிளே டிசைன் (Flat Display Design) கொண்டிருக்கிறது.

பட்ஜெட்ல OLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 90W சார்ஜிங்.. 16GB ரேம் போன்!

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஹைபர்ஓஎஸ் (HyperOS) வருகிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 எஸ்ஓசி (Octa Core Snapdragon 8s Gen 3 SoC) சிப்செட் கொண்டுள்ளது. இந்த ரெட்மியில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) வருகிறது.

சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் கொண்ட 50 எம்பி பிரைமரி கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சார் கொண்ட 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா வருகிறது. இந்த அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவில் 2 எம்பி மேக்ரோ ஆப்ஷன் இருக்கிறது.

ஒஐஎஸ் (OIS) டெக்னாலஜி கொண்டிருக்கிறது. 20 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ரெட்மி டர்போ 3 போனில் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் (Fast Charging Support) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்டிருக்கிறது.

பட்ஜெட்ல OLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 90W சார்ஜிங்.. 16GB ரேம் போன்!

ஆகவே, பிரீமியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். இந்த டர்போ மாடலின் அதிகாரப்பூர்வ போட்டோக்கள் வெளியாகி இருக்கிறது. இந்த போட்டோக்கள் மூலம் டூயல் ஸ்பீக்கர்கள் (Dual Speakers), ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster) வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி (USB Type-C) போர்ட் வருகிறது.

ஆகவே, கேமிங் பிரியர்களுக்கான பர்ஃபாமென்ஸ் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், அல்ட்ரா பிரீமியம் லுக் கொடுக்கிறது. 7.8 மிமீ தடிமன் மற்றும் 179 கிராம் எடை உடன் ஸ்லிம் டிசைன் கொண்டிருக்கிறது. க்ரீன் (Green), பிளாக் (Black) மற்றும் கோல்டு (Gold) ஆகிய 3 கலர்களில் வெளியாக இருக்கிறது.

அண்டர் டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Under-display Figerprint Sensor), IP54 தர ரெசிஸ்டன்ட் கொண்டுள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் வை-பை 7 (WiFi 7) ஆகிய கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.

மேற்கூறிய அம்சங்களில், சிப்செட், ரேம், மெமரி மற்றும் டிசைன் பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற பீச்சர்கள் மார்கெட்டில் கசிந்தவை மட்டுமே. ஆனால், இந்த ரெட்மி டர்போ 3 போனின் வெளியீட்டு தேதி உறுதியாகிவிட்டது. வரும் ஏப்ரல் 10ஆம் தேதி சீனாவில் வெளியாகிறது.

இந்த போன் மட்டுமல்லாமல், ரெட்மி பேட் ப்ரோ (Redmi Pad Pro) டேப்லெட்டும் அதே தேதியில் வெளியாகிறது. முதலில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. அதன்பின் இந்தியா உள்பட மற்ற நாடுகளில் ரெட்மி டர்போ 3 போன் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த போனின் ஆரம்ப விலை ரூ.30,000 பட்ஜெட்டுக்குள் இருக்க வாய்ப்புள்ளது. அதற்கு ஏற்பவே பீச்சர்களை கொண்டிருக்கிறது. இருப்பினும், சீனா மற்றும் இந்திய வேரியண்ட்களுக்கு இடையே விலையில் மாற்றங்கள் இருக்கலாம். சீனாவில் வெளியான பிறகு இந்திய விலை நிர்ணயத்தை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Turbo 3 With 16GB RAM, 50MP Camera, OLED Display Launch on April 10 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X