ஏப்.23 கன்பார்ம்.. 11 இன்ச் டிஸ்பிளே.. 8000எம்ஏஎச் பேட்டரி.. இந்தியாவுக்கு வரும் Redmi டேப்லெட்.. எந்த மாடல்?
ரெட்மி பேட் எஸ் எனும் டேப்டெல் மாடல் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதாவது ரெட்மி பேட் எஸ்இ மாடல் ஆனது இந்தியாவில் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற இருக்கும் ஸ்மார்ட்டர் லிவிங் நிகழ்வில் (Smarter Living event) அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்வில் ரெட்மி நிறுவனத்தின் பல்வேறு சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி பேட் எஸ்இ அம்சங்கள் (Redmi Pad SE specifications): 11-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் இந்த டேப்லெட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் 1920 × 1200 பிக்சல்ஸ், 400 நிட்ஸ் ப்ரைட்ன்ஸ், 1500:1 கான்ட்ராஸ்ட் ரேஷியோவுடன் (Contrast Ratio), TUV ரைன்லேண்ட் ப்ளூ லைட் சான்றிதழ் (TUV Rheinland Blue light certification) மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி பேட் எஸ்இ மாடலி டிஸ்பிளே.
தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் வசதியுடன் இந்த அசத்தலான ரெட்மி பேட் எஸ்இ மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். மேலும் அட்ரினோ 610 ஜிபியு (Adreno 610 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது இந்த டேப்லெட். எனவே கேமிங் பயனர்கள் இந்த ரெட்மி பேட் எஸ்இ மாடலை நம்பி வாங்கலாம்.

4ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இந்த ரெட்மி டேப்லெட் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.
MIUI சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி பேட் எஸ்இ மாடல். ஆனால் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். டால்பி அட்மாஸ் ஆடியோ (Dolby Atmos audio) ஆதரவு கொண்ட குவாட் ஸ்பீக்க்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி பேட் எஸ்இ மாடல்.
இதுதவிர ஹை-ரெஸ் ஆடியோ, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த புதிய ரெட்மி டேப்லெட் இந்தியாவுக்கு வரும். மேலும் AI ஃபேஸ் அன்லாக் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி பேட் எஸ்இ மாடல். மேலும் இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்த ரெட்மி நிறுவனம்.

8எம்பி ரியர் கேமரா கொண்டுள்ளது ரெட்மி பேட் எஸ்இ மாடல். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமரா வசதி உள்ளது. அதேபோல் 8000எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி பேட் எஸ்இ மாடல். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 10 வாட்ஸ் சார்ஜிங் வசதியும் உள்ளது.
வைஃபை, புளூடூத் 5.0, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி பேட் எஸ்இ மாடலில் உள்ளது. மேலும் 478 கிராம் எடை கொண்டுள்ளது இந்த புதிய ரெட்மி பேட் எஸ்இ மாடல். மேலும் இந்தியாவில் ரெட்மி பேட் எஸ்இ மாடல் ஆனது ரூ.20.000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications