மிரள விட்டாப்ல.. வெறும் ரூ.22,995 போதும்.. SONY கேமரா.. OLED டிஸ்பிளே.. 90W சார்ஜிங்.. 12GB ரேம்.. எந்த மாடல்?
இப்படிவொரு பட்ஜெட்ல எப்படிங்க, என்று கேட்கும் அளவுக்கு சோனி சென்சார் கேமரா, ஓஎல்இடி டிஸ்பிளே, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம் போன்ற அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் ரெட்மி டர்போ 3 (Redmi Turbo 3) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், புதுவிதமான ஹாரி பாட்டர் லிமிடெட் எடிஷன் (Harry Potter Limited Edition) டிசைனில் ஸ்மார்ட்போன் பிரியர்களை தட்டித் தூக்கிவிட்டது. இந்த ரெட்மி டர்போ 3 போனின் முழு அம்சங்கள் பட்ஜெட்டைவிட கூடுதல் பிரீமியமாக கொடுக்கப்பட்டுள்ளன. இப்போது, அதை தெரிந்து கொள்வோம்.

ரெட்மி டர்போ 3 அம்சங்கள் (Redmi Turbo 3 Specifications): இந்த போன் 6.7 இன்ச் (2712 x 1220 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 2499 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) வருகிறது.
மேலும், டால்பி விஷன் (Dolby Vision), 2160Hz PWM டிம்மிங், டிசி டிம்மிங் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் புரொடெக்சன் (Corning Gorilla Glass Victus Protection) கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த பிரீமியம் டிஸ்பிளே பீச்சர்களும் வருவதால், வீடியோ, கேமிங் அனுபவம் மிரளவிடும்படி இருக்கும்.
சியோமி ஹைபர்ஓஎஸ் (Xiaomi HyperOS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8s Gen 3 4nm Mobile) சிப்செட் மற்றும் பக்கா கேமிங் பர்ஃபாமென்ஸ் கொண்ட அட்ரினோ 735 ஜிபியு (Adreno 735 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த டர்போ மாடலில் 4 வேரியண்ட்கள் வருகின்றன.

12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி, 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி, 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. அதேபோல 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட்டும் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் வருகிறது.
சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் மற்றும் ஓஐஎஸ் (OIS) சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா வருகிறது. 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமராவானது, சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் வருகிறது. இந்த கேமராவில் 4கே வீடியோ ரெக்கார்டிங் (4K Video Recording) சப்போர்ட் உள்ளது.
ஓம்னிவிஷன் ஓவி20பி (OmniVision OV20B) சென்சார் மற்றும் 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 20 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த ரெட்மி டர்போ 3 மாடலில் 90W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. IP64 டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் வருகிறது.
இன்-டிஸ்பிளே சென்சார், இன்பிராரெட் சென்சார், டைப்-சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் சப்போர்ட் உள்ளது. பிளாக் கிரிஸ்டல் (Black Crystal), கிரீன் பிளேட் (Green Blade) மற்றும் ஐஸ் டைட்டானியம் (Ice Titanium) கலர்கள் கொண்டிருக்கிறது. ஹாரி பாட்டர் லிமிடெட் எடிஷன் மாடலும் வருகிறது.
இந்த ரெட்மியின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.22,995ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,450 ஆகவும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.28,750ஆகவும் இருக்கிறது. 16 ஜிபி ரேம் + 1 டிபி மெமரி கொண்ட ஹாரி பாட்டர் மாடலின் விலை ரூ.32,200 ஆகவும் இருக்கிறது.
சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இருப்பினும், ப்ரீ-ஆர்டர் தொடங்கிவிட்டது. அங்கு விற்பனை தொடங்கிய பிறகு இந்தியா உள்பட மற்ற நாடுகளில் வெளியாக இருக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் பிரீமியம் அம்சங்கள் வருவதால், மிகப்பெரும் வரவேற்பு பெறலாம்.


Click it and Unblock the Notifications








