Google எச்சரிக்கை! இந்த 4 ஆப்களையும் உடனே DELETE செய்யவும்; ஏனென்றால்?

|

கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று கண்ணில் தென்படும் ஆப்களை எல்லாம் இன்ஸ்டால் செய்து அதை பயன்படுத்தும் பழக்கம் நமக்கெல்லம் இருக்கும் வரை கூகுள் நிறுவனம் "இதுபோன்ற" எச்சரிக்கைகளை நிறுத்தப்போவதில்லை!

ஏன்? என்ன ஆகிற்று?

ஏன்? என்ன ஆகிற்று?

சுமார் 1 லட்சத்திற்கும் மேலான ஆண்ட்ராய்டு யூசர்களால் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள 4 ஆப்களில் ஜோக்கர் மால்வேர் (Joker Malware) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவைகளை உடனே டெலிட் செய்யும்படி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த 4 ஆப்களின் பெயர்கள் என்ன? அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? அவைகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டு விட்டனவா? ஜோக்கர் மால்வேர் என்றால் என்ன? இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களை அறிய தொடர்ந்து படிக்கவும்!

இன்று.. நேற்றல்ல.. ஆண்ட்ராய்டு என்றாலே அடிதடி தான்!

இன்று.. நேற்றல்ல.. ஆண்ட்ராய்டு என்றாலே அடிதடி தான்!

கூகுள் பிளே ஸ்டோரில் மால்வேர் ஆப்கள் கண்டுபிடிக்கப்படுவதும், அதுகுறித்த அறிக்கைகள் வெளியிடப்படுவதும், மக்கள் அடித்துபிடித்து அவைகளை உடனே டெலிட் செய்வதும் ஒன்றும் புதிதல்ல - வழக்கமாக நடப்பது தான்!

"கிச்சனாலே இளிச்சவாயன் தானே!" என்பது போல ஹேக்கர்களுக்கும், சைபர் குற்றவாளிகளுக்கும் ஆண்ட்ராய்டு யூசர்கள் என்றாலே அல்வா தான்.. வழிச்சு சாப்பிடுவாங்க!

iPhone-களுக்கான Lockdown-ஐ அறிவித்த Apple; அட இது எப்போ?iPhone-களுக்கான Lockdown-ஐ அறிவித்த Apple; அட இது எப்போ?

ஆனாலும்.. இது ஜோக்கர் மால்வேர், அசால்ட் ஆக  முடியாது!

ஆனாலும்.. இது ஜோக்கர் மால்வேர், அசால்ட் ஆக முடியாது!

ஆம்! கூகுள் பிளே ஸ்டோரில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 4 மால்வேர் ஆப்களும் 'ஜோக்கர்' (Joker) வகையை சார்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.

"ஜோக்கரின்" முக்கிய குறிக்கோள் என்னவென்றால், இது ஒரு மால்வேர் என்று தெரியாமல், அதை கவனக்குறைவாக டவுன்லோட் செய்த யூசர்களிடம் பணம் சம்பாதிப்பதே ஆகும்.

இதற்காக இன்-ஆப் பர்சேசஸ் (in-app purchases), பிரீமியம் ரேட் நம்பர்களுக்கு மெசேஜ் அனுப்புவது போன்ற வழிகளை இது பயன்படுத்தும்.

கூகுளையே திணறடிக்கும் ஜோக்கர்!

கூகுளையே திணறடிக்கும் ஜோக்கர்!

கடந்த சில ஆண்டுகளாக "செயல்பாட்டில்" உள்ள ஜோக்கர் மால்வேர் ஆனது கூகுள் நிறுவனத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறது என்றே கூற வேண்டும்.

நாளுக்கு நாள் அப்டேட் ஆகிக்கொண்டே போகும் ஜோக்கர் மால்வேர் ஆனது ஒவ்வொரு முறையும் கூகுளின் General security screening-ஐ பைபாஸ் செய்வதற்கான ஸ்மார்ட் ஆன வழிகளை கண்டுபிடித்து, கூகுளிடம் இருந்து தப்பித்து, பிளே ஸ்டோருக்குள் நுழைவதை வழக்கமாக கொண்டுள்ளது.

இன்னும் சரியாக சொல்வதானால், ஜோக்கர் மால்வேர் விவேகமானதாகவும், கோட்-லைட்டாகவும் இருப்பதால், அது ஸ்கிரீனிங்கில் சிக்குவதில்லை!

ஜூலை 10 வரை மட்டுமே; இவ்ளோ கம்மி விலைக்கு இந்த 5 போன்களும் இனி கிடைக்காது!ஜூலை 10 வரை மட்டுமே; இவ்ளோ கம்மி விலைக்கு இந்த 5 போன்களும் இனி கிடைக்காது!

அந்த 4 ஜோக்கர் ஆப்களும் இதுதான்!

அந்த 4 ஜோக்கர் ஆப்களும் இதுதான்!

01. ஸ்மார்ட் எஸ்எம்எஸ் மெசேஜ் (Smart SMS Message) - 50,000+ இன்ஸ்டால்கள்

02. ப்ளட் ப்ரெஷர் மானிட்டர் (Blood Pressure Monitor) - 10,000+ இன்ஸ்டால்கள்

03. வாய்ஸ் லேங்குவேஜஸ் டிரான்ஸ்லேட்டர் (Voice Languages Translator) - 10,000+ இன்ஸ்டால்கள்

04. க்விக் டெக்ஸ்ட் எஸ்எம்எஸ் (Quick Text SMS) - 10,000+ இன்ஸ்டால்கள்

உடனே டெலிட் செய்யவும்!

உடனே டெலிட் செய்யவும்!

மேற்கண்ட 4 ஆப்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் டவுன்லோட் செய்து இருந்தாலும் கூட அதை உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்து உடனே நீக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

இது தவிர்த்து, நாங்கள் எப்பொழுதும் பரிந்துரைப்பது போல, பிளே ஸ்டோரில் அணுக கிடைத்தாலும் கூட, தெரியாத டெவலப்பர்களிடமிருந்து எந்த வகையான ஆப்களையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

Best Mobiles in India

English summary
Delete these 4 Apps From Your Android Phone Immediately New Joker Malware Warning From Google

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X