Home
Gadgets

லட்டு மாதிரி பட்ஜெட்.. ரூ.1499 போதும்.. டச் கன்ட்ரோல்.. பாஸ்ட் சார்ஜிங்.. லோவ் லேட்டன்சி.. எந்த மாடல்?

ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், டச் கன்ட்ரோல், லோவ் லேட்டன்சி மோட், ஃபாஸ்ட் சார்ஜிங் பேட்டரி போன்ற மிரளவிடும் பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் டிசைன் கொண்ட ரெட்மி பட்ஸ் 5ஏ (Redmi Buds 5A) மாடல் நம்ப முடியாத பட்ஜெட்டில் அறிமுகமாகி இருக்கிறது.

இந்த பட்ஜெட்டிலும் கூகுள் ஃபாஸ்ட் பேர், சியோமி இயர்பட்ஸ் ஆப் கனெக்டிவிட்டி, ஈஎன்சி டெக்னாலஜி, டிரான்ஸ்பரன்சி மோட் போன்ற சப்போர்ட் கொண்டிருக்கிறது. இந்த ரெட்மி பட்ஸ் 5ஏ மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்வோம்.

லட்டு மாதிரி பட்ஜெட்.. ரூ.1499 போதும்.. டச் கன்ட்ரோல்.. பாஸ்ட் சார்ஜ்!

ரெட்மி பட்ஸ் 5ஏ அம்சங்கள் (Redmi Buds 5A Specifications): இந்த மாடலில் 12 எம்எம் டிரைவர்கள் வருகின்றன. ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) கனெக்டிவிட்டி உடன் எஸ்பிசி கோடெக் (SBC Codec) மற்றும் கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) சப்போர்ட் வருகிறது. ஆகவே, மொபைல், லேப்டாப், டேப்லெட் டிவைஸ்களில் நொடியில் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் காலிங் சப்போர்ட்டுக்காக ஏஐ என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Environmental Noise Cancellation) வருகிறது. அதுமட்டுமல்லாமல், 25dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) சப்போர்ட் வருகிறது. இதற்காக டிரான்ஸ்பரன்சி மோட் (Transparency Mode) ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டிலும் வால்யூம், கால் ஆன்/ஆஃப் ஆப்ஷன்களுக்கு டச் கன்ட்ரோல் (Touch Controls) சப்போர்ட் வருகிறது. கேமிங் பிரியர்களுக்காக 60ms லோவ் லேட்டன்சி மோட் (Low Latency Mode) கொண்டிருக்கிறது. ஆகவே, ஆடியோ, வீடியோ சிங்க் பக்காவாக அவுட்புட் கொடுக்கும். IPX4 ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Splash Resistant) வருகிறது.

லட்டு மாதிரி பட்ஜெட்.. ரூ.1499 போதும்.. டச் கன்ட்ரோல்.. பாஸ்ட் சார்ஜ்!

இந்த ரெசிஸ்டன்ட்டானது, பட்களுக்கு மட்டுமே வருகிறது, சார்ஜிங் கேஸ்-க்கு கிடையாது. இந்த ரெட்மி பட்ஸ் 5ஏ மாடலில் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் பக்கா பேட்டரி பேக்கப் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, 440mAh சார்ஜிங் கேஸ் வருகிறது. அதேபோல ஒவ்வொரு பட்களிலும் 34mAh பேட்டரி வருகிறது. கேஸ் பேட்டரி 30 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும்.

அதுவே, ஏஎன்சி மோடில் பயன்படுத்தினால், 23 மணி நேரங்களுக்கு பேக்கப் எதிர்பார்க்கலாம். பட்களை பொறுத்தவரை ஏஎன்சி மோடில் 3.5 மணி நேரங்களுக்கும், நார்மல் மோடில் 5 மணி நேரங்களுக்கும் பேக்கப் கொடுக்கும். இந்த ரெட்மி பட்ஸ் 5ஏ மாடலுக்கு டைப்-சி போர்ட் (Type-C Port) மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் வருகிறது.

ஆகவே, வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், தொடர்ந்து 90 நிமிடங்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஸ்மூத் கர்வ் எட்ஜ் பாடி (Smooth Curve Edge Body) மற்றும் பிரீமியம் பெபெல் டிசைனில் (Premium Pebble Design) பின்னி எடுக்கிறது. அதோடு பேஸ் பிளாக் (Bass Black) மற்றும் டைம்லெஸ் ஒயிட் (Timeless White) ஆகிய 2 கலர்கள் கொண்டிருக்கிறது.

இவ்வளவு அம்சங்களை கொண்டிருந்தும், இந்த ரெட்மி பட்ஸ் 5ஏ மாடலின் விலை ரூ.1499ஆக மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர இருக்கிறது. எம்ஐ.காம் (mi.com), சியோமி ரீடெயில் ஸ்டோர்கள் (Xiaomi Retail Stores) மற்றும் ரிலையன்ஸ் ஸ்டோர்களில் (Reliance Stores) விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi Buds 5A With 440mAh Battery, Google Fast Pair Laucnched Sale From April 29 Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X