Home
Mobile

Redmi-யின் ருத்ர தாண்டவம்! ரூ.7000-க்கு இன்னொரு புது போன்.. 12GB ரேம், 5000mAh பேட்டரி, 1TB மெமரினு மிரட்டுது!

ரூ.7000 பட்ஜெட்டில் சக்கைபோடு போட்டு கொண்டிருக்கும் ரெட்மி ஏ3 இந்தியாவில் அறிமுகமாகி 2 மாதங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் இதே ஏ-சீரிஸின்கீழ் இன்னொரு சூப்பர்-பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. என்ன மாடல்? எப்போது அறிமுகம்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

என்ன மாடல்? ரெட்மி ஏ-சீரிஸின்கீழ் ரெட்மி ஏ3எக்ஸ் (Redmi A3x) என்கிற மாடல் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. பெயரை வைத்து பார்க்கும்போதே இது கடந்த பிப்ரவரியில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் ட்வீக்டு வெர்ஷன் (Tweaked Version) ஆக இருக்கும் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

Redmi-யின் ருத்ர தாண்டவம்.. ரூ.7000-க்கு இன்னொரு புது போன்!

அதாவது ரெட்மி ஏ3எக்ஸ் ஆனது சில கவனிக்கத்தக்க மாற்றங்களை தவிர்த்து ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனில் உள்ள பெரும்பாலான அம்சங்களை அப்படியே கொண்டிருக்கும். பிஐஎஸ் (BIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தரநிலை பணியகத்தில் (Bureau of Indian Standard) காணப்பட்டுள்ளதால், இந்த ஸ்மார்ட்போன் உடனடி வெளியீட்டை காணும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

நினைவூட்டும் வண்னம் ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போன் மொத்தம் 3 வகையான ரேம் + ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பேஸிக் 3ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் தற்போது ரூ.6,999 க்கும், 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.7,999 க்கும் மற்றும் டாப்-எண்ட் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ. 8,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

Redmi-யின் ருத்ர தாண்டவம்.. ரூ.7000-க்கு இன்னொரு புது போன்!

இருப்பினும் ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி குறித்து எந்த தகவலும் இல்லை. இதேபோல ரெட்மி ஏ3எக்ஸ் ஸ்மார்ட்போனின் எந்த அம்சங்களுமே வெளிப்டுத்தப்படவில்லை. முன்னரே குறிப்பிட்டபடி, எப்படியும் இது ரெட்மி ஏ3 மாடலில் பெரும்பாலான அம்சங்களை அப்படியேத்தான் கடன் வாங்கி கொள்ளும்.

ரெட்மி ஏ3 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1650 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 ப்ரொடெக்ஷன் உடனான 6.71-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

Redmi-யின் ருத்ர தாண்டவம்.. ரூ.7000-க்கு இன்னொரு புது போன்!

ஐஎம்ஜி பவர்விஆர் ஜிஇ8320 @ 680மெகாஹெர்ட்ஸ் ஜிபியு உடனான 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி36 12 என்எம் சிப்செட் (Octa-Core MediaTek Helio G36 12nm chipset) கொண்டு இயக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி / 4ஜிபி / 6ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 64ஜிபி / 128ஜிபி eMMC 5.1 இன்டர்னல் ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இதில் மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவு உள்ளது. ஆண்ட்ராய்டு 13 (கோ எடிஷன்) ஓஎஸ் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் டூயல் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்கிறது. அதில் எல்இடி பிளாஷ் உடனான 8எம்பி (எப்/2.0 அபெர்க்ஷர்) மெயின் கேமரா + செகண்டரி கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 5எம்பி செல்பீ கேமரா உள்ளது.

கடைசியாக இது 10W சார்ஜிங் ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 3.5மிமீ ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 பி/ஜி/என், ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவைகளை கொண்டுள்ளது.

இதுதவிர்த்து ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 (OnePlus Nord CE 4), ரியல்மி 12எக்ஸ் 5ஜி (Realme 12x 5G), மோட்டோரோலா எட்ஜ் 50 சீரீஸ் (Motorola Edge 50 Series), ரியல்மி சி65 (Realme C65), ஐக்யூ இஸட்9 சீரீஸ் (iQOO Z9 Series), சாம்சங் கேலக்ஸி எம்15 (Samsung Galaxy M15) மற்றும் கேலக்ஸி எம்55 (Galaxy M55) என பல போன்கள் இந்த ஏப்ரலில் அறிமுகமாகவுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
One More Super Budget Smartphone Under Rs 10000 Ready to Launch in India Soon Redmi A3x All Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X