ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
ரூ.10,000 - ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை.. குறிப்பாக ரெட்மி பிராண்டின் கீழ் கிடைக்கும் ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற திட்டம் மற்றும் அதற்கான பட்ஜெட் உங்களிடம் இருந்தால்.. உடனே அமேசான் வலைத்தளத்திற்கு செல்லவும்.
ஏனென்றால் அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தின் மொபைல் பிரிவின் (Mobile Section) கீழ் 5 ரெட்மி ஸ்மார்ட்போன்களின் மீது "அடேங்கப்பா" என்று கூறும்படியான ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன மாடல்கள்? எந்தெந்த ரெட்மி போனின் மீது எவ்வளவு டிஸ்கவுண்ட் கிடக்கிறது? இதோ விவரங்கள்:

1. ரெட்மி 12 5ஜி (Redmi 12 5G): 4என்எம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட் (4nm Snapdragon 4 Gen 2 Chipset) உடன் இந்தியாவில் அறிமுகமான முதல் ஸ்மார்ட்போனான ரெட்மி 12 5ஜி மீது ரூ.1000 வரையிலான கூப்பன் ஆஃபர் கிடைக்கிறது. அமேசானில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,749 முதல் வாங்க கிடைக்கிறது.
2. ரெட்மி நோட் 13 5ஜி (Redmi Note 13 5G): 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான டிஸ்பிளேவுடன் வரும் ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போன் மீதும் ரூ.1000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது; ஆனால் இதுவொரு பேங்க் ஆஃபர் ஆகும். அமேசானில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.16,499 முதல் வாங்க கிடைக்கிறது.

3. ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி (Redmi Note 13 Pro 5G): 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 1.5கே டிஸ்பிளேவுடன் வரும் ரெட்மி நோட் 13 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் மீது ரூ.2000 பேங்க் ஆஃபர் கிடைக்கிறது. அமேசானில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.23,999 முதல் வாங்க கிடைக்கிறது.
4. ரெட்மி 13சி 5ஜி (Redmi 13C 5G): இந்தியாவின் பெஸ்ட் செல்லிங் 5ஜி ஸ்மார்ட்போன்களில் (Best Selling 5G Smartphone) ஒன்றான ரெட்மி 13சி 5ஜி ஸ்மார்ட்போன் மீது ரூ.1000 பேங்க் ஆபர் கிடைக்கிறது. அமேசானில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.9,499 முதல் வாங்க கிடைக்கிறது.

5. ரெட்மி 13சி 4ஜி (Redmi 13C 4G): ஸ்டார் ஷைன் டிசைன் (Star Shine Design) மற்றும் 16ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) உடன் வரும் ரெட்மி 13சி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.7699 முதல் வாங்க கிடைக்கிறது. இது 4ஜிபி ரேம் +128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையாகும்.
ரெட்மி 13சி 5ஜி-ன் முக்கிய அம்சங்கள்: இது 90ஹெர்ட்ஸ் 6.74-இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா, 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh, ரீடெயில் பாக்ஸில் 10W சார்ஜர் போன்றவைகளை கொண்டுள்ளது.

ரெட்மி 13சி 4ஜி-ன் முக்கிய அம்சங்கள்: இது 90ஹெர்ட்ஸ் 6.74-இன்ச் எச்டி+ எல்சிடி டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ், மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட், 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா, 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5,000mAh, ரீடெயில் பாக்ஸில் 10W சார்ஜர் போன்றவைகளை கொண்டுள்ளது.
ரெட்மி 12 5ஜி-ன் முக்கிய அம்சங்கள்: இது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.79 இன்ச் ஃபுல்எச்டி டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 சிப்செட், 8ஜிபி வரையிலான ரேம், 8ஜிபி விர்ச்சுவல் ரேம், 50எம்பி + 8எம்பி + 2எம்பி ட்ரிபிள் ரியூட்ட கேமரா செட்டப், 8எம்பி செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்றவைகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications