OnePlus Nord 3 விரைவில் இந்தியாவில் அறிமுகம்.! Nord ஸ்மார்ட் வாட்ச் கூட அறிமுகமா?

|

OnePlus ரசிகர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. காரணம், ஒன்பிளஸ் இந்த ஆண்டு அதன் Nord பிராண்டின் கீழ் பல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் நிறுவனம் இன்னும் சில தயாரிப்புகளை அறிமுகம் செய்யவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்பிளஸ் அதன் வேகத்தைக் குறைப்பதாகத் தெரியவில்லை. ஒன்பிளஸ் ரசிகர்களுக்கான புதிய தயாரிப்புகளின் வேகம் அதிகரிக்கப்போகிறது.

OnePlus Nord 3 இந்தியர்களுக்கு ரெடியா?

OnePlus Nord 3 இந்தியர்களுக்கு ரெடியா?

சமீபத்தில் வெளியான அறிவிப்பின் படி, வரும் நாட்களில் OnePlus Nord 3 ஸ்மார்ட்போன், OnePlus Nord Watch, OnePlus Nord Band, போன்ற புதிய Nord பிராண்டட் தயாரிப்புகளை அறிமுகம் செய்யவிருக்கிறது என்று அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதேபோல், Nord பிராண்ட் கீழ் ஸ்மார்ட் கேட்ஜெட்ஸ் மற்றும் பிற Nord பிராண்டட் AIoT தயாரிப்புகளை அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருவதாக டிப்ஸ்டர் முகுல் ஷர்மா தெரிவித்துள்ளார்.

புதிய ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்சில் என்ன எதிர்பார்க்கலாம்?

புதிய ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்சில் என்ன எதிர்பார்க்கலாம்?

இந்த சாதனங்களின் வரிசையில், OnePlus Nord 3 ஸ்மார்ட்போன் மற்றும் வரவிருக்கும் OnePlus Nord வாட்ச் பற்றிய தகவல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது. இதன் படி, வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போன் சாதனம் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் டிவைஸில் நாம் என்ன எதிர்பார்க்கலாம் என்பது இங்கே. நமக்குத் தெரிந்த தகவலின் படி, OnePlus Nord 3 ஸ்மார்ட்போன் சாதனம், சில மாதங்களுக்கு முன்பு BIS தரவுத்தளத்தில் காணப்பட்டது.

இப்படி ஒரு டபுள் ட்ரம் வாஷிங் மெஷினா? Xiaomi அறிமுகம் செய்த MIJIA பார்ட்டிஷன் வாஷிங் மெஷின்!இப்படி ஒரு டபுள் ட்ரம் வாஷிங் மெஷினா? Xiaomi அறிமுகம் செய்த MIJIA பார்ட்டிஷன் வாஷிங் மெஷின்!

120Hz ரெப்பிரஷ் ரேட் டிஸ்பிளே

120Hz ரெப்பிரஷ் ரேட் டிஸ்பிளே

தற்போது நமக்குத் தெரிந்த படி, Nord 3 ஆனது Dimensity 8100 சிப்செட் மற்றும் 1080 x 2412 பிக்சல்களின் முழு HD+ தீர்மானம் கொண்ட 6.7' இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிஸ்பிளே 120Hz ரெப்பிரஷ் ரேட் உடன் வரவிருக்கும் Nord ஸ்மார்ட்போனால் ஆதரிக்கப்படும். தற்போது சந்தையில் இருக்கும் பெரும்பாலான OnePlus போன்களைப் போலல்லாமல், சாதனம் ஒரு பஞ்ச் ஹோல் கேமராவைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் நார்ட் 3 கேமரா அம்சம்

ஒன்பிளஸ் நார்ட் 3 கேமரா அம்சம்

கேமரா பற்றிப் பார்க்கையில், 8 மெகாபிக்சல் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் ஸ்னாப்பருடன் இணைக்கப்பட்ட 50 மெகாபிக்சல் IMX766 முதன்மை சென்சார் இருப்பதாக வதந்தி பரவுகிறது. இதன் முன் பக்கத்தில் செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, இந்த சாதனம் 12GB LPDDR5 ரேம் மற்றும் 256GB UFS 3.1 சேமிப்பகத்துடன் வரும் என வதந்தி பரவியுள்ளது. இது 150W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 4,500mAh உடன் வரலாம்.

ஒன்பிளஸ் நார்ட் வாட்ச்

ஒன்பிளஸ் நார்ட் வாட்ச்

பிரபல டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவின் வெளியிட்ட தகவலின் படி, OnePlus Nord வாட்ச், OnePlus வாட்ச் போன்ற தோற்றத்தில் இருந்து புதிய செவ்வக வடிவமைப்பை பெரும் என்று கூறப்படுகிறது. இது ஐந்து வெவ்வேறு வடிவமைப்புகளில் வரும் என்று தெரியவந்துள்ளது. Nord Watch ஆனது SpO2 சென்சார், இதயத் துடிப்பு கண்காணிப்பு மற்றும் ஸ்லீப் மானிட்டர் போன்ற அனைத்து கண்காணிப்பு அம்சங்களையும் கொண்டிருப்பதாக வதந்தி பரவுகிறது.

அடடே சூப்பர்! 5G-க்கான கட்டணம் இவ்வளவு தானா? 5ஜி யூஸ் பண்ண புது சிம் வாங்க வேண்டுமா?அடடே சூப்பர்! 5G-க்கான கட்டணம் இவ்வளவு தானா? 5ஜி யூஸ் பண்ண புது சிம் வாங்க வேண்டுமா?

OnePlus Nord 3 மற்றும் ஸ்மார்ட் வாட்ச் என்ன விலையில் எதிர்பார்க்கப்படுகிறது?

OnePlus Nord 3 மற்றும் ஸ்மார்ட் வாட்ச் என்ன விலையில் எதிர்பார்க்கப்படுகிறது?

இது இரண்டு வண்ண விருப்பங்களில் வரும் என்று கூறப்படுகிறது. இவை பிளாக் மற்றும் வைட் ஆகிய நிறங்களில் வெளிவரலாம் என்றும் கருதப்படுகிறது. கடைசியாக, இந்த புதிய நார்ட் ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 5,000 முதல் ரூ. 8,000 விலைக்குள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. வரவிருக்கும் இந்த புதிய OnePlus Nord 3 ஸ்மார்ட்போனின் விலை பற்றிய விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும் இது 300 அல்லது 400 டாலர் மதிப்பில் எதிர்பார்க்கப்படுகிறது. கூடிய விரைவில் இந்த சாதனத்தின் அறிமுகம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
OnePlus Nord 3 Nord Watch and Nord Band Expected To Launch Soon In India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X