அடடே சூப்பர்! 5G-க்கான கட்டணம் இவ்வளவு தானா? 5ஜி யூஸ் பண்ண புது சிம் வாங்க வேண்டுமா?

|

நாட்டில் 5G சேவையை அறிமுகம் செய்வதற்கான வேலைகளை இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மிகவும் வேகமாக முழுவீச்சில் நடத்தி வருகிறது. இந்த மாத இறுதிக்குள், இந்தியாவின் தலைசிறந்த 2 டெலிகாம் நிறுவனங்கள், அவர்களுடைய 5ஜி சேவையை துவங்கவிருக்கிறார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் புதிய 5ஜி சேவைக்கான கட்டணம் எந்தளவில் இருக்கும்?

?புதிய 5ஜி சேவை இந்தியாவில் எப்போது துவங்கப்படும்?

?புதிய 5ஜி சேவை இந்தியாவில் எப்போது துவங்கப்படும்?

புதிய 5ஜி சேவையை பெற நீங்கள் புது சிம் வாங்க வேண்டுமா? என்பது போன்ற சந்தேகங்களுக்கு விளக்கத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். ரிலையன்ஸ் ஜியோவின் தலைவரான ஆகாஷ் அம்பானி, "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" உடன் 5ஜி துவக்கத்தைக் கொண்டாடப் போவதாக அறிவித்திருக்கிறார். ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜியோ 5ஜியை அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

முழு 5ஜி பணிகள் எப்போது நடைபெறும்? இந்தியா முழுக்க 5ஜி எப்போது கிடைக்கும்?

முழு 5ஜி பணிகள் எப்போது நடைபெறும்? இந்தியா முழுக்க 5ஜி எப்போது கிடைக்கும்?

இந்தியா முழுவதிலும் உள்ள மெட்ரோ நகரங்களில் இது ஒரு பைலட் சோதனையாக, முதல் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முழு 5ஜி பணிகள் மற்றும் சேவைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரி, இப்போது முதலில் எந்தெந்த இந்திய நகரங்களில் ஜியோ 5ஜி முதலில் அறிமுகம் செய்யப்படும்? என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

Jio வாங்கிய 700MHz ஸ்பெக்ட்ரத்தை Airtel ஏன் வாங்கவில்லை? இது தீங்கு விளைவிக்குமா!Jio வாங்கிய 700MHz ஸ்பெக்ட்ரத்தை Airtel ஏன் வாங்கவில்லை? இது தீங்கு விளைவிக்குமா!

இந்த நகரங்களில் தான் 5ஜி சேவை முதலில் கிடைக்குமா?

இந்த நகரங்களில் தான் 5ஜி சேவை முதலில் கிடைக்குமா?

டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை, லக்னோ, ஹைதராபாத், அகமதாபாத் மற்றும் ஜாம்நகர் உள்ளிட்ட ஒன்பது இந்திய நகரங்களில் 5ஜியை அறிமுகப்படுத்த ஜியோ திட்டமிட்டுள்ளது. இத்துடன் சேர்த்து வெகு விரைவில் மற்ற 1000 பிராந்தியங்களில் 5ஜி சேவையை வெளியிட ஜியோ திட்டமிட்டுள்ளது. குர்கான், நொய்டா மற்றும் பிற நகரங்களும் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி சேவையைப் பெற உங்களுக்கு புதிய 5G சிம் தேவையா?

5ஜி சேவையைப் பெற உங்களுக்கு புதிய 5G சிம் தேவையா?

தற்போது, ​​பயனர்கள் 5G சேவைகளை அனுபவிக்க புதிய சிம் தேவைப்படுமா என்பது குறித்து சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது. ஆனால், இது தொடர்பாக நிறுவனங்கள் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. தொலைத்தொடர்பு அமைச்சகமும் இது குறித்த எந்த விவரங்களையும் பகிர்ந்து கொள்ளவில்லை. இருப்பினும், இந்தியா 3ஜியிலிருந்து 4ஜிக்கு மாறியபோது, ​​புதிய வேகத்தைப் பெற பயனர்கள் புதிய 4ஜி சிம்மைப் பெற வேண்டியிருந்தது என்பதை நாம் மறக்கக்கூடாது.

Jio 5G அறிமுகம் இந்த மாதமா? எந்த நகரங்களில் 5G முதலில் களமிறங்குகிறது? லிஸ்ட் இதோ!Jio 5G அறிமுகம் இந்த மாதமா? எந்த நகரங்களில் 5G முதலில் களமிறங்குகிறது? லிஸ்ட் இதோ!

புதிய சிம் கார்டுகள் பற்றி டெலிகாம் நிறுவனங்கள் என்ன சொல்கிறது?

புதிய சிம் கார்டுகள் பற்றி டெலிகாம் நிறுவனங்கள் என்ன சொல்கிறது?

இதேபோல், இந்தியாவில் 5ஜி சேவையை அதற்குரிய வேகத்துடன் மக்கள் பெறுவதற்கு கட்டாயம் புதிய சிம் கார்டுகளை நிறுவனங்கள் விநியோகம் செய்யும் என்று ஒரு இணையதள தகவல் தெரிவிக்கிறது. இது எவ்வளவு உறுதியானது என்பது நமக்குத் தெரியவில்லை, ஆனால், முன்னர் நடந்த விஷயங்களை வைத்துப் பார்க்கையில், புதிய சிம் கார்டுகளை வாங்க வேண்டிய சாத்தியங்கள் அதிகமாக இருக்கிறது என்பதே இப்போதைய கருத்து. இதுகுறித்து நிறுவனங்கள் என்ன அறிவிப்பை வெளியிடும் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஜியோ 5ஜி சேவைகளின் விலை என்னவாக இருக்கும்?

ஜியோ 5ஜி சேவைகளின் விலை என்னவாக இருக்கும்?

5ஜி சேவைகளின் விலை குறித்தும் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. விலை உயர்வுக்குப் பிறகு, அதிகபட்ச பலன்களைக் கொண்ட 4G ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை ரூ.400 முதல் துவங்கி ரூ. 500 வரை செல்லும் என்று ஒரு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், 5ஜி ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை இந்தியாவில் ரூ.500 மற்றும் அதற்கு மேல் தொடங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக 5ஜி, 4ஜி நெட்வொர்க்கை விட அதிக கட்டணம் கொண்டதாகத் தான் இருக்கப் போகிறது என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
Do you need a new 5G sim to get the services and What will be the price of Jio 5G?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X