Home
News

கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் அதிக மொபைல் சாதனங்களை விற்பனை செய்த நிறுவனமாக ஒன்பிளஸ் (OnePlus) பார்க்கப்படுகிறது. இப்போது திடீரென இந்த முன்னணி பிராண்டின் ஆப்லைன் கடைகள் மூடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு என்ன காரணம்? என்பது இங்கே.

பட்ஜெட் செக்மென்ட், பிளாக்க்ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் என்று எல்லா செக்மென்ட்டிலும் தனக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது போல தெரிகிறது. அதாவது, இந்தியாவில் உள்ள சுமார் 4500-க்கும் மேற்பட்ட ஒன்பிளஸ் ரீடெய்ல் ஸ்டோர் கடைகளை நிறுவனம் மூடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடையை இழுத்து மூடும் OnePlus.. தமிழ்நாட்டில் OnePlus போன் கிடைக்காதா?

இந்தியா முழுக்க 4500 கடைகளை இழுத்து மூடும் OnePlus:
இது ஒன்பிளஸ் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின் படி, மே 1,2024 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதிலும் உள்ள சுமார் 4500-க்கும் மேற்பட்ட ஆப்லைன் ரீடைலர் கடைகளை நிறுவனம் மூட இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒன்பிளஸ் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பின்னால் ஓன்பிளஸ் நிறுவனம் மேற்கொண்ட ஒரு தவறு தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் போன்களை பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலமே வாங்கி பயன்படுத்துகிறார்கள். உண்மையை சொல்ல போனால், ஒன்பிளஸ் பிராண்ட் ஆன்லைன் சேனல்களில் மிகப்பெரிய விற்பனையாளராக திகழ்ந்து வருகிறது. ஆனால், ஒன்பிளஸ் நிறுவனம் ஆஃப்லைன் மார்க்கெட்டில் கவனம் செலுத்த தவறி விட்டதால் இந்தியாவிலுள்ள ரீடெய்லர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது ஆப்லைன் கடைகளில் ஒன்பிளஸ் சாதனங்களை விற்பனை செய்ய ரீடெய்லர்களுக்கு போதுமான அளவு மார்ஜினை நிறுவனம் வழங்க தவறியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியாவில் உள்ள தென் மற்றும் மேற்கு பகுதிகளில் இருக்கும் அதிகாரப்பூர்வமான ஒன்பிளஸ் ஸ்டோர்களை ரீடெய்லர்கள் லாபமின்மை காரணத்தினால் இழுத்து மூட முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடையை இழுத்து மூடும் OnePlus.. தமிழ்நாட்டில் OnePlus போன் கிடைக்காதா?

தமிழ்நாட்டில் இனி ஓன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
இந்த காரணத்தினால், மே மாதத்தை தொடர்ந்து வரும் மாதங்களில் குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்று சந்தேகிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விற்பனையில் எந்தவித தடையும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ஆப்லைன் கடைகள் வழியாக ஒன்பிளஸ் சாதனங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்தியா முழுவதிலும் உள்ள சுமார் 4500 கடைகள் மூடப்படும் நிலையில் இருப்பதாக ரீடைலர் சங்க மக்கள் தெரிவித்துள்ளனர். உறுதியாக மே 1,2024 ஆம் தேதிக்கு பிறகு ஒன்பிளஸ் ஆப்லைன் கடைகளை மக்கள் காண்பது அரிதாகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, மல்டி ரீடைலர் ஆப்லைன் கடைகளில் ஒன்பிளஸ் போன்கள் வாங்க கிடைக்குமென்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது, மல்டி ரீடைலர் ஆப்லைன் கடைகள் என்றால், பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்களை ஒரே இடத்தில் விற்பனை செய்யும் கடைகளாக செயல்படும் ஆப்லைன் கடைகளில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் வாங்க கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ஓன்பிளஸ் நிறுவனம் அதன் ஆன்லைன் விற்பனையில் கவனம் செலுத்திய அளவிற்கு ஆப்லைன் விற்பனையில் கவனம் செலுத்த தவறியதன் காரணமாக தமிழகத்திலும் ஒன்பிளஸ் கடைகள் மூடப்படுகிறது.

Best Mobiles in India

English summary
India's 4500 OnePlus Offical Offline Smartphone Purchase Stores Being Closed From May 1, 2024 Tamil Nadu Included In the List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X