இன்னும் குறைஞ்ச விலைக்கு.. இன்னொரு OnePlus போன்.. ஏப்.18-ல் அறிமுகம்.. உடனே விற்பனை.. என்ன மாடல்?
ஏப்ரல் 18 ஆம் தேதியன்று, ஒன்பிளஸ் 11ஆர் ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் ஆன சோலார் ரேட் வேரியண்ட்டின் புதிய மற்றும் மலிவான ஸ்டோரேஜ் ஆப்ஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரும்.
ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகும் ஒன்பிளஸ் 11ஆர் சோலார் ரெட் ஸ்பெஷல் எடிஷன் (OnePlus 11R Solar Red Special Edition) ஸ்மார்ட்போனின் புதிய ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது அதே நாளில் விற்பனைக்கு வரும் என்பதும் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் அமேசான்.இன் (Amazon.in) வலைத்தளத்தில் ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ளது. அறிமுக சலுகைகளை பொறுத்தவரை ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஒன்கார்டு ஆகியவற்றின் கீழ் ரூ.1250 உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் 6 மாதங்களுக்கு நோ-காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் அனுக கிடக்கும்.
என்ன விலைக்கு வரும்? நினைவூட்டும் வண்ணம், இதே ஒன்பிளஸ் 11ஆர் சோலார் ரெட் ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.45,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆகையால் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இதை விட மலிவான விலைக்கு அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஆனால் சரியான விலை விவரம் வெளியீட்டின் போது தான் தெரிய வரும்.

ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) ஸ்மார்ட்போனின் விலையும் குறைந்துள்ளது! சமீபத்தில் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் மீது இரண்டாவது முறையாக விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்திய அறிமுகத்தின் போது ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் ஆப்ஷனின் விலை ரூ.56,999 ஆக இருந்தது.
சில வாரங்களுக்கு முன்னர் இந்த ஸ்மார்ட்போனின் மீது முதல் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் இது ரூ.2000 விலைக்குறைப்பை பெற்று ரூ.54,999 க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது மேலும் ரூ.3,000 விலைக்குறைப்பை பெற்றுள்ளது. இதன் மூலம் முதலில்ரூ.2000 + இப்போது மீண்டும் ஒரு ரூ.3000 என ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மொத்தம் ரூ.5000 குறைக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.51,999 க்கு வாங்க கிடைக்கிறது. இந்த விலைக்குறைப்பு 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது மட்டுமே கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.கூடுதல் சலுகைகளை பொறுத்தவரை, ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3000 உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது.
ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 6.7-இன்ச் QHD+ E4 2.75D கர்வ்டு OLED LTPO 3.0 டிஸ்பிளே, 5000mAh பேட்டரி மற்றும் 100W பாஸ்ட் சார்ஜிங், ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், 16ஜிபி வரை ரேம், ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ், 50எம்பி + 48எம்பி+ 32எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப், 16எம்பி செல்பீ கேமரா ஆகியவைகளை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் 11ஆர் சோலார் ரெட் எடிஷன் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட், 6.7-இன்ச் AMOLED டிஸ்பிளே, 50எம்பி + 8எம்பி + 2எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா, 5000mAh பேட்டரி மற்றும் 100W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களை பேக் செய்கிறது.
ஸ்மார்ட்போன்கள் ஒருபக்கம் இருக்க ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) மாடல் ஆனது இன்னும் சில மாதங்களில் அறிமுகமாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் முதல் டேப்லெட் ஆன ஒன்பிளஸ் பேட் (OnePlus Pad) நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications