Home
Mobile

மிரளுது டிஸ்கவுண்ட்.. பட்ஜெட்ல OnePlus.. 100W சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

அமேசான் ஸ்மார்ட்போன் ப்ரீமியர் லீக் விற்பனையில் 100 ஃபாஸ்ட் சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 16 ஜிபி ரேம் போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களை கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 (OnePlus Nord CE4) பட்ஜெட்டில் கிடைக்கிறது. விவரம் இதோ.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 அம்சங்கள் (OnePlus Nord CE4 Specifications): இந்த போனில் 6.7 இன்ச் (2412×1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 240Hz டச் சாம்பிளிங் ரேட், 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி வருகிறது.

பட்ஜெட்ல OnePlus.. 100W சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே மாடல்!

1100 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) கொண்டுள்ளது. ஆகவே, டிஸ்பிளே ப்ரீமியம் அனுபவம் கொடுக்கும். 50 எம் ரியர் கேமராவானது, சோனி எல்ஒய்டி 600 (Sony LYT 600) சென்சார் கொண்டிருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்355 (Sony IMX355) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா இருக்கிறது.

இந்த மெயின் கேமராவில் ஆட்டோபோகஸ் (Autofocus), ஈஐஎஸ் (EIS) மற்றும் OIS சப்போர்ட் வருகிறது. 20எக்ஸ் டிஜிட்டல் ஜூம் (20x Digital Zoom), 4K வீடியோ ரெக்கார்டிங் (Video Recording) கொண்டிருக்கிறது. 16 எம்பி செல்பீயானது, 1080p வீடியோ ரெக்கார்டிங் மற்றும் டூயல் வியூ வீடியோ (Dual-view Video) சப்போர்ட் உடன் வருகிறது.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போனில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. 8 ஜிபிக்கான விர்ச்சுவல் ரேம் மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தலாம். ஆக்ஸிஜன்ஓஎஸ் 14 (OxygenOS 14) உள்ளது.

பட்ஜெட்ல OnePlus.. 100W சார்ஜிங்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே மாடல்!

ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) உடன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 7 Gen 3 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 720 ஜிபியு (Adreno 720 GPU) கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது. கேமிங் மற்றும் ஆப் பர்ஃபாமென்ஸ் மிட்-ரேஞ்ச் அவுட்புட் கொடுக்கும்.

100W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (SUPERVOOC Fast Charging) கொண்ட 5500mAh பேட்டரி வருகிறது. ஆகவே, பேக்கப் மற்றும் சார்ஜிங் பற்றிய கவலையே இந்த மாடலில் இருக்காது. பேட்டரி உடன் 186 கிராம் எடை மற்றும் 8.4 மிமீ தடிமன் கொண்டிருக்கிறது. IP54 ரெசிஸ்டன்ட் மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது.

இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போனானது, 5ஜி மாடலாகும். டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers), நாய்ஸ் கேன்சலேஷன் சப்போர்ட் (Noise Cancellation Support), ஹை-ரெஸ் (Hi-Res) ஆடியோ கொண்டிருக்கிறது. டார்க் குரோம் (Dark Chrome) மற்றும் செலடன் மார்பிள் (Celadon Marble) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வருகிறது.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 விலை (OnePlus Nord CE4 Price): இந்த போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.24,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.26,999ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் (Amazon) தளத்தில் உடனடி டிஸ்கவுண்ட் உடன் விற்பனையாகிறது.

ஆகவே, ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.1,500 டிஸ்கவுண்ட் மற்றும் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு ஈஎம்ஐ ஆர்டருக்கு ரூ.1,250 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், ரூ.23,749 எக்ஸ்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஆகவே, இந்த போனை ரூ.23,499 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE4 With 50MP Camera, 100W Charging Sale Under Rs 24000 in Amazon Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X