Home
Mobile

என்ன சோனமுத்தா போச்சா.. ரூ.2000, ரூ.3000 இல்ல அதுக்கும் மேல.. லேட்டஸ்ட் OnePlus போன் மீது அபார விலை குறைப்பு!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிகவும் விலையுயர்ந்த ஸ்மார்ட்போனாக, கடந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் 11 5ஜி (OnePlus 11 5G) மீது தற்போது இரண்டாவது முறையாக.. மீண்டும் ஒரு விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இந்த போனின் விலை நிர்ணயம் என்ன? இதோ விவரங்கள்:

நினைவூட்டும் வண்ணம், ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் ஆப்ஷன் இந்தியாவில் ரூ.56,999 க்கு அறிமுக செய்யப்பட்டது. சில நாட்களுக்கு முன்னர் இந்த ஸ்மார்ட்போனின் மீது முதல் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் இது ரூ.2000 விலைக்குறைப்பை பெற்று ரூ.54,999 க்கு இறங்கிவந்தது.

லேட்டஸ்ட் OnePlus போன் மீது அபார விலை குறைப்பு!

தற்போது இந்த ஸ்மார்ட்போனின் மீது மீண்டும் ரூ.3,000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்.. முதலில் ஒரு ரூ.2000, இப்போது மீண்டும் ஒரு ரூ.3000 என ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மொத்தம் ரூ.5000 குறைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் ஆப்ஷன் ரூ.51,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. ஆனால் இந்த விலைக்குறைப்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் மீது மட்டுமே கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. கூடுதல் சலுகைகளை பொறுத்தவரை, ஐசிஐசிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கி கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3000 உடனடி தள்ளுபடியும் கிடைக்கிறது.

லேட்டஸ்ட் OnePlus போன் மீது அபார விலை குறைப்பு!

ஆக ஒட்டுமொத்தமாக ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.8000-ஐ குறைத்து, அதை வெறும் ரூ.48,999 க்கு சூழ்நிலை உருவாகியுள்ளது. மேற்கண்ட விலைக்குறைப்பு மற்றும் சலுகை எல்லாமே ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் 2 கலர் ஆப்ஷன்களிலும் (டைட்டன் பிளாக் மற்றும் எடர்னல் கிரீன்) கிடைக்கும்.

ஒன்பிளஸ் 12 (OnePlus 12) வாங்க கிடைக்கும் சூழ்நிலையில் ஒன்பிளஸ் 11-ஐ வாங்கலாமா? லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஒன்பிளஸ் 12 மாடலானது பிளிப்கார்ட் வழியாக ரூ.63,999 க்கு வாங்க கிடைக்கும் நேரத்தில்.. ஒரு வருட பழைய மாடலான ஒன்பிளஸ் 11 5ஜி மாடலை இப்போது நம்பி வாங்கலாமா என்கிற சந்தேகம் அல்லது குழப்பம் உங்களுக்கு இருப்பின்.. இந்த ஸ்மார்ட்போனை ஏன் வாங்கலாம் என்பதற்கான 5 பவர்ஃபுல் காரணங்கள் இதோ:

லேட்டஸ்ட் OnePlus போன் மீது அபார விலை குறைப்பு!

1. பக்காவான கேமரா செட்டப்: ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போனின் கேமரா செட்டப்பில் ஹசல்பிளாட்-ஆல் இயங்கும் ட்ரிபிள் ரியர் கேமராக்கள் உள்ளன: சோனி ஐஎம்எக்ஸ்890 சென்சார் மற்றும் எப்/1.8 அபெர்க்ஷர் கொண்ட 50எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்581 சென்சார் மற்றும் எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 48எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 32எம்பி ஆர்ஜிபிடபுள்யூ டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளன. முன்பக்கத்தில் 16எம்பி செல்பீ கேமரா உள்ளது.

2. போட்டுத்தாக்கும் பெர்ஃபார்மென்ஸ்: இது குவால்காமின் லேட்டஸ்ட் 5ஜி சிப்செட்களில் ஒன்றான ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ப்ராசஸர் உள்ளது. இது 35% வேகமான சிபியு, 25% மேம்படுத்தப்பட்ட ஜிபியு-வை வழங்குகிறது. போதாக்குறைக்கு இந்த ஸ்மார்ட்போன் 16ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே மல்டி-டாஸ்கிங் மற்றும் கேமிங்கின் போது எந்த குறையும் இருக்காது.

லேட்டஸ்ட் OnePlus போன் மீது அபார விலை குறைப்பு!

3. உண்மையாகவே சூப்பர் பாஸ்ட் சார்ஜிங்: ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 100W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, வெறும் 25 நிமிடங்களில் ஸ்மார்ட்போனின் பேட்டரியை பூஜ்ஜியத்தில் இருந்து 100% ஆக சார்ஜ் செய்துவிடும்.

4. அலெர்ட் ஸ்லைடர்: ஒன்பிளஸ் 11 வழியாக இந்நிறுவனம் அதன் மிகவும் பிரபலமான அலெர்ட் ஸ்லைடர் அம்சத்தை மீண்டும் கொண்டு வந்தது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தபோதிலும் கூட இந்த அம்சம் ஒன்பிளஸ் 11-க்கு முன்னர் அறிமுகமான ஒன்பிளஸ் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் இடம்பெறவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

5. பல ஆண்டுகளுக்கு ஓஎஸ் அப்டேட்ஸ்: ஆண்ட்ராய்டு 13 (Android 13 OS) ஓஎஸ் அடிப்படையிலான ஆக்சிஜன் ஓஎஸ் 13.0 உடன் வரும் ஒன்பிளஸ் 11 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 4 முக்கிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) கிடைக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Second Price Cut for OnePlus 11 Smartphone Now Total of Rs 5000 Reduced From Original Launch Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X