பிரபல நிறுவனத்தின் சாதனங்கள் இனி கடைகளில் கிடைக்காது.. விற்பனையாளர்கள் கூட்டமைப்பு.. ஏன்?
இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களுக்கு அடுத்து ஒன்பிளஸ் நிறுவனத்தின் போன்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. அதாவது ஒன்பிளஸ் நிறுவனம் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் போன்களை விற்பனை செய்கிறது.
எனவே தான் ஒன்பிளஸ் நிறுவனத்தின் போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் சாதனங்களை ஆஃப்லைன் கடைகளில் விற்பனை செய்ய மாட்டோம் என இந்தியாவின் ஒருங்கிணைந்த சில்லறை விற்பனையாளர்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது வரும் மே 1-ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் உள்ள முன்னணி ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் சாதனங்கள் விற்பனை செய்யப்பட மாட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியச் சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்திய விற்பனை பிரிவு இயக்குநர் ரஞ்சித் சிங்கிற்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த கடிதத்தில் விற்பனை தொடர்பாக ஏராளமான சிக்கல்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது வெளியான தகவலின்படி, இந்தியாவில் ஆஃப்லைன் கடைகளில் ஒன்பிளஸ் சாதனங்களை விற்பனை செய்யும் போது மிகவும் குறைந்த லாபம் கிடைக்கிறது என்றும், வாரண்டி தொடர்பான சேவைகளில் கால தாமதம் ஏற்படுவதால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே இது போன்ற காரணங்களால் விற்பனை மோசமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே இந்த காரணங்களால் தான் வரும் மே 1-ம் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் சுமார் 4500 ஆஃப்லைன் ஸ்டோர்களில் ஒன்பிளஸ் சாதனங்களை விற்பனை செய்வதில்லை என்று சில்லறை விற்பனையாளர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் இம்மாதம் இறுதிக்குள் இந்த முக்கியமான பிரச்சனைகள் குறித்து தீர்வு காண இந்தியச் சில்லறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை இந்த பிரச்சனை தொடர்பாக ஒன்பிளஸ் நிறுவனம் எந்த பதிலும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ4 அம்சங்கள் (OnePlus Nord CE4 specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7 Gen 3 chipset) உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த போனை வாங்க முடியும்.
ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 ஸ்மார்ட்போன் 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே (AMOLED display) உடன் வெளிவந்துள்ளது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 260 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 2160ஹெர்ட்ஸ் பிடபுள்யூஎம் டிம்மிங் (2160Hz PWM dimming) உள்ளிட்ட பல அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.

ஒஐஎஸ் (OIS)ஆதரவு கொண்ட 50எம்பி சோனி எல்ஒய்டி600 பிரைமரி கேமரா (50MP Sony LYT600 primary sensor) +8எம்பி சோனி ஐஎம்எக்ஸ்355 அல்ட்ரா வைடு கேமரா (8MP Sony IMX355 ultra-wide camera) என்கிற டூயல் ரியர் கேமரா வசதியும் இந்த போனில் உள்ளது. அதேபோல் 16எம்பி செல்பி கேமரா, OxygenOS 14.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 14 இயங்குதள வசதி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
5500எம்ஏஎச் பேட்டரி, 100 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் (100W SUPERVOOC fast charging technology), ஹை-ரெஸ் ஆடியோ சான்றிதழ், ஐபி54 ரேட்டிங், யுஎஸ்பி போர்ட், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6, புளூடூத் 5.3, ஜிபிஎஸ் போன்ற பல அம்சங்கள் இந்த போனில் உள்ளன. குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 4 போனின் ஆரம்ப விலை ரூ.24,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications








