கிடுகிடுவென குறைந்த OnePlus நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி போனின் விலை.. எவளோ குறைஞ்சிருக்கு தெரியுமா?
ஒன்பிளஸ் நிறுவனத்தின் தரமான ஒன்பிளஸ் நோர்ட சிஇ 3 லைட் 5ஜி போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் 108எம்பி கேமரா, 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, பெரிய டிஸ்பிளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஒன்பிளஸ் போன் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது பிளிப்கார்ட் தளத்தில் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி போனுக்கு 13 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.17,249 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1500 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.15,749 விலையில் வாங்கிவிட முடியும். மேலும் இந்த போனின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி அம்சங்கள் (OnePlus Nord CE 3 Lite 5G specifications): தரமான ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸர் உடன் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி வெளிவந்தது. மேம்பட்ட செயல்திறன் வழங்குகிறது ஸ்னாப்டிராகன் 695 ப்ராசஸர். ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தின் சொந்த ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.1 உடன் இந்த போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும்.
அதேபோல் கேமிங் பயனர்களை கவரும் நோக்கில் அட்ரினோ 619 ஜிபியு வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் போன். மேலும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர்(Side-mounted Fingerprint Scanner), கேம் ஃபோகஸ் மோட், நாய்ஸ் கேன்சலேஷன் ஆதரவுடனான டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ் போன்ற அசத்தலான வசதியைக் கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி போன்.
குறிப்பாக 6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே கொண்டு இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் 120 ஹெர்ட்ஸ் டைனமிக் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் ப்ரொடெக்ஷன் மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது. அதேபோல் இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் போன்.
108 மெகாபிக்சல் மெயின் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்.

5000mAh பேட்டரியை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W சூப்பர்வூக் வயர்டு சார்ஜிங் ஆதரவும் உள்ளது. எனவே இந்த ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பமானது வெறும் 30 நிமிடங்களில் 0 - 80% வரை பேட்டரியை சார்ஜ் செய்யும் என்று நிறுவனம் கூறியுள்ளது. அதேசமயம் இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.
5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, 3.5மிமீ ஆடியோஜாக், ப்ளூடூத் 5.1, யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற கனெக்டிவிட்டி ஆதரவுகள் கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 3 லைட் 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக 108எம்பி கேமரா, 67 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 5000எம்ஏஎச் பேட்டரி, ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த போன் கம்மி விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.


Click it and Unblock the Notifications