இப்படி ஒரு டபுள் ட்ரம் வாஷிங் மெஷினா? Xiaomi அறிமுகம் செய்த MIJIA பார்ட்டிஷன் வாஷிங் மெஷின்!

|

நமது நவீன வாழ்க்கையைச் சுலபமாக்கக் கண்டுபிடிக்கப்பட்ட பல கருவிகளில் ஒன்று தான் சலவை எந்திரம் என்று கூறப்படும் வாஷிங் மெஷின். பொதுவாக வாஷிங் மெஷின் பயன்படுத்தும்போது வெள்ளை துணிகளை ஒரு முறை தனியாகப் போட வேண்டும், குழந்தைகள் துணியைப் பெரியவர்கள் துணியோடு சேர்த்துப் போடாமல் சிறிது கூடுதல் அக்கறையுடன் சலவை செய்ய வேண்டும் என்று துணிகளைத் துவைப்பதற்கே சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டியதுள்ளது.

இனி 'இந்த' கவலை உங்களுக்கு இல்லவே இல்லை

இனி 'இந்த' கவலை உங்களுக்கு இல்லவே இல்லை

லேசான துணிகளுக்கு ஒரு விதமாகவும், கனமான துணிகளுக்கு ஒரு விதமாகவும் நாம் சலவை செய்ய வேண்டியதுள்ளது. இவ்வாறு ஒவ்வொரு விதமான ஆடையையும் ஒவ்வொரு விதத்தில் பக்குவமாகச் சலவை செய்வதன் மூலம், நாம் அதன் தரத்தைப் பாதுகாக்க முடியும். இதைச் சாதாரண வாஷிங் மெஷினில் ஒவ்வொரு விதமான துணிகளைச் சலவை செய்து முடிப்பதற்குள் பொழுதே சாய்ந்துவிடும். இனி அந்த கவலையே இல்லை, காரணம் சியோமி ஒரு புதிய வாஷிங் மெஷினை அறிமுகம் செய்துள்ளது.

மிஜியா 15kg பார்ட்டிஷன் ஸ்மார்ட் வாஷிங் மற்றும் ட்ரையிங் மெஷின்

மிஜியா 15kg பார்ட்டிஷன் ஸ்மார்ட் வாஷிங் மற்றும் ட்ரையிங் மெஷின்

ஆம், முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான சியோமி, இப்போது மிஜியா பிராண்டின் கீழ் புதிய 15kg பார்ட்டிஷன் ஸ்மார்ட் வாஷிங் மற்றும் ட்ரையிங் மெஷினை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஒன்றன்மேல் ஒன்றாக இரண்டு பகுதிகளை சியோமி வழங்கியுள்ளது. இரண்டு அடுக்குகள் கொண்ட இந்த மெஷினின் மேல் தளத்தில் 5kg சிலிண்டரும், கீழ் தளத்தில் 10kg சிலிண்டரும் பொருத்தப்பட்டுள்ளது. எனவே ஒரே சமயத்தில் வெவ்வேறு விதமான துணிகளை வெவ்வேறு விதத்தில் நீங்கள் இனி துவைக்கலாம்.

ரூ.8,500-க்குள் புது Washing Machine வாங்க முடியுமா? உண்மை தானா? இந்த மாடல்களை கொஞ்சம் பாருங்க!ரூ.8,500-க்குள் புது Washing Machine வாங்க முடியுமா? உண்மை தானா? இந்த மாடல்களை கொஞ்சம் பாருங்க!

இனி வெவ்வேறு விதமான துணிகளை ஒரே நேரத்தில் சலவை செய்யலாமா?

இனி வெவ்வேறு விதமான துணிகளை ஒரே நேரத்தில் சலவை செய்யலாமா?

மேல்தளத்தில் உள்ள பகுதி பிரத்தியேகமாக மென்மையான துணிகளைச் சலவை செய்யும் விதத்தில் உருவாக்கப்பட்டிருப்பதால், சிறிய சிலிண்டரில் குழந்தைகளுடைய துணிகள், வெள்ளை துணிகள், உள்ளாடைகள் போன்றவற்றைத் தினசரி துணிகளுடன் சேர்க்காமல் ஒரே சமயத்தில் துவைக்கலாம். பெரிய 10kg சிலிண்டரில் படுக்கை விரிப்புகள், பெரியவர்களின் ஆடைகள் மற்றும் கனமான துணிகளை நீங்கள் துவைக்கலாம். மேலும் கீழ் சிலிண்டரை 7kg எடை வரை ட்ரையராகவும் பயன்படுத்தலாம்.

3-வே ஸ்பெஷல் ஏஜென்ட் வாஷிங் முறை

3-வே ஸ்பெஷல் ஏஜென்ட் வாஷிங் முறை

மென்மையான துணிகளைத் துவைக்கப் பயன்படுத்தப்படும் 3-வே ஸ்பெஷல் ஏஜென்ட் முறையில் இந்த வாஷிங் மெஷின் இயங்குவதால் துணிகளின் தரம் குறையாமலும் மற்றும் சிறப்பாகவும் சுத்தம் செய்கிறது. மேலும், வாஷரில் 15 நிமிட வேகமான சலவை மற்றும் ஸ்மார்ட் ட்ரையிங் உட்படப் பல அமைப்புகளும் உள்ளன. இந்த வாஷிங் மெஷின் ஐந்து வகையான கிளீனிங் செயல்முறையை வழங்குகிறது. பேஸ்சுரைசேஷன் + UV மற்றும் சில்வர் ஸ்டெரிலைசேஷன் மூலம் நம் துணிகளில் உள்ள 99.99% கிருமி நீக்கத்தை வழங்குகிறது.

இந்த 6 விஷயம் தெரியாம Washing Machine வாங்காதீங்க! டாப் or ஃபிரண்ட் லோட்! எது பெஸ்ட்?இந்த 6 விஷயம் தெரியாம Washing Machine வாங்காதீங்க! டாப் or ஃபிரண்ட் லோட்! எது பெஸ்ட்?

இனி துணிகளின் ஆயுள் அதிகமாகும் ஏன் தெரியுமா?

இனி துணிகளின் ஆயுள் அதிகமாகும் ஏன் தெரியுமா?

இதன் ஸ்மார்ட் டெலிவரி அம்சம், உங்கள் துணிகளை எடைபோட்டு அதற்கு ஏற்ற அளவு சோப்பு மற்றும் பிற பொருட்களான கண்டிஷனர், கிருமிநாசினி ஆகியவற்றை வழங்குகிறது. இதனால் துணிகளில் அதிகப்படியான சோப்பு படிந்து அவை நைந்துபோவது தவிர்க்கப்படுகிறது. இதனால் துணிகளின் வாழ்நாள் அதிகரிக்கப்படும். இரண்டு சிலிண்டர்களும் டூயல் டைரக்ட் மோட்டார்கள் மூலம் இயக்கப்படுவதால் 48dB குறைந்த சத்தத்துடன் இயங்குகிறது. இதன் மூலம் சிறந்த சலவையை நீங்கள் பெற முடிகிறது.

95°C உயர் வெப்பநிலை கிளீனிங் கூட இருக்கா?

95°C உயர் வெப்பநிலை கிளீனிங் கூட இருக்கா?

மேலும் இன்டெலிஜெண்ட் விண்ட் மற்றும் வெப்பநிலை கட்டுப்பாட்டுடன் கூடிய BLDC வேரியபில் ஃப்ரிக்வென்சி பேன் மூலம் ட்ரையர் இயங்குவதால் சிறந்த ட்ரையிங் அனுபவத்தையும் கொடுக்கிறது. 95°C உயர் வெப்பநிலை மூலம் இந்த வாஷிங் மெஷினை செல்ப் கிளீனிங் செய்துகொள்ள முடியும். வாஷிங் மெஷின் மற்றும் ட்ரையர் இரண்டிற்கும் தனித்தனி கட்டுப்பாடுகள் ஸ்மார்ட் டச் டிஸ்பிளே மூலம் வருகிறது.

இந்த புதிய வாஷிங் மெஷினின் விலை என்ன?

இந்த புதிய வாஷிங் மெஷினின் விலை என்ன?

இந்த கட்டுப்பாடுகளை மிஜியா ஆப் மூலமாகவும் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும். மேலும் ஸ்மார்ட் ஹோம் வசதியிருந்தால் சியோ AI ஸ்மார்ட் வாய்ஸ் அலெர்ட் மூலமாக இந்த வாஷிங் மெஷினை நீங்கள் கட்டுப்படுத்தலாம். இந்த ஸ்மார்ட் வாஷர் மற்றும் ட்ரையர் தற்போது சீனாவில் மட்டுமே அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது. இதன் தற்போதைய விலை 5999 யுவான் (US $888) ஆகும். இந்திய மதிப்பின் படி இது ரூ. 70,870 என்ற விலையில் இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi launches the MIJIA Partition Washing and Drying machine 15kg

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X