Home
Mobile

OnePlus விஸ்வரூபம்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. 16GB ரேம்.. எந்த மாடல்?

ஒட்டுமொத்த ஒன்பிளஸ் பிரியர்களையும் வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த ஒன்பிளஸ் 11ஆர் (OnePlus 11R) போனின் சோலார் ரெட் (Solar Red) மாடலானது, நம்ப முடியாத தள்ளுபடியில் விற்பனைக்கு வந்துள்ளது. 100W சார்ஜிங், சோனி கேமரா, 5000mAh பேட்டரி போன்ற பீச்சர்களில் மிரளவிடுகிறது.

இந்த சோலார் ரெட் எடிஷனில் 8 ஜிபி ரேம் + 128 மெமரி கொண்ட வேரியண்ட் கம்மியான பட்ஜெட்டில் வெளியாகி இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் தள்ளுபடியும் கொடுக்கப்படுவதால், விற்பனை சக்கைப்போடு போடுகிறது. முதலில் இந்த ஒன்பிளஸ் போனின் முழு பீச்சர்களை பார்ப்போம்.

OnePlus விஸ்வரூபம்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 100W சார்ஜிங்.. எந்த போன்?

ஒன்பிளஸ் 11ஆர் அம்சங்கள் (OnePlus 11R Specifications): இந்த மாடலின் கேமரா மற்றும் பேட்டரி சிஸ்டம் அல்ட்ரா பிரீமியமாக இருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சார் கொண்ட 50 எம்பி பிரைமரி கேமரா வருகிறது. ஓம்னிவிஷன் ஓவி08டி10 (Omnivision OV08D10) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது.

மேலும், ஓம்னிவிஷன் ஓவி02பி10 (Omnivision OV02B10) சென்சார் கொண்ட 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்டிருக்கிறது. மெயின் கேமராவில் ஆட்டோபோகஸ் (Autofocus), ஈஐஎஸ் (EIS) மற்றும் ஓஐஎஸ் (OIS) டெக்னாலஜி வருகிறது. 4கே வீடியோ ரெக்கார்டிங் (4K Video Recording) சப்போர்ட் உள்ளது.

நைட்ஸ்கேப் (Nightscape), அல்ட்ரா எச்டிஆர் (Ultra HDR), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ப்ரோ மோட் (Pro Mode), டில்ட்-ஷிப்ட் மோட் (Tilt-Shift Mode), டூயல்-வியூ வீடியோ (Dual-View Video), சூப்பர் ஸ்டேபிள் (Super Stable), போகஸ் டிராக்கிங் (Focus Tracking) போன்ற கேமரா பீச்சர்கள் வருகின்றன.

OnePlus விஸ்வரூபம்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 100W சார்ஜிங்.. எந்த போன்?

செல்பீ எச்டிஆர் (Selfie HDR), 1080P வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 16 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இந்த போனில் 100W சூப்பவூக் (SuperVOOC) பாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், நாள் முழுவதும் பேக்கப் கொடுக்கும். பேட்டரி ஹெல்த் என்ஜின் சப்போர்ட் வருகிறது.

இந்த போனின் டிஸ்பிளேவை பொறுத்தவரை 6.74 இன்ச் (2772 × 1240 பிக்சல்கள்) சூப்பர் ஃப்ளூயிட் அமோலெட் (Super Fluid AMOLED) பேனல் கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 360Hz டச் சாம்பிளிங் ரேட், எச்டிஆர்10 பிளஸ் (HDR10+) மற்றும் 1440Hz PWM டிம்மிங் பிரிகொன்சி சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

பக்கா பர்ஃபாமென்ஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8பிளஸ் ஜென் 1 4என்எம் மொபைல் (Octa Core Snapdragon 8+ Gen 1 4nm Mobile) சிப்செட், ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 13 (OxygenOS 13) கொண்டுள்ளது. அதேபோல அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் உள்ளது.

இந்த ஒன்பிளஸ் 11ஆர் போனில் 8 ஜிபி ரேம் (8 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), டைப்-சி ஆடியோ (Type-C Audio), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/ NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) வருகின்றன.

இந்த ஒன்பிளஸ் 11ஆர் போனின் விலை ரூ.35,999 ஆக இருக்கிறது. இப்போது, அமேசான் விற்பனையில் (Amazon Sale) ரூ.1000 உடனடி டிஸ்கவுண்ட் போக ரூ.34,999 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் எச்டிஎப்சி (HDFC), ஐசிஐசிஐ (ICICI) பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு கொடுக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus 11R 5G Solar Red Sale With 10 Percent Discount in Amazon Sale Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X