மார்க்கெட்டே திணறப்போகுது.. Snapdragon சிப்செட்.. AMOLED டிஸ்பிளே.. வருகிறது ஒன்பிளஸ் டேப்லெட்.. எந்த மாடல்?
ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) மாடலை இந்தியா மற்றும் உலக சந்தையில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் பேட்ட மாடலுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருந்தது.
விரைவில் ஒன்பிளஸ் பேட் 2 மாடலும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால் கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும். மேலும் ஆன்லைனில் இந்த ஒன்பிளஸ் பேட் 2 மாடலின் சில அம்சங்கள் கசிந்துள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஒன்பிளஸ் பேட் 2 அம்சங்கள் (OnePlus Pad 2 specifications): தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3 chipset) வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் பேட் 2 சிப்செட். எனவே வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த டேப்லெட் மாடலில் தடையின்றி பயன்படுத்த முடியும். குறிப்பாக மேம்பட்ட செயல்திறன் வழங்கும் இந்த ஸ்னாப்டிராகன் சிப்செட்.
ஒன்பிளஸ் பேட் 2 மாடலில் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்தியாவில் ஒன்பிளஸ் பேட் 2 மாடல் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஒன்பிளஸ் பேட் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
ஒன்பிளஸ் பேட் அம்சங்கள் (OnePlus Pad specifications): 11.6-இன்ச் என்கிற அளவிலான 144ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் ஒன்பிளஸ் பேட் வெளிவந்துள்ளது. மேலும் எச்டிஆர் 10 பிளஸ், டால்பி விஷன், 7:5 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 88% ஸ்க்ரீன்-டூ-பாடி ரேஷியோ உள்ளிட்ட பல டிஸ்பிளே அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட்.
மீடியாடெக் டைமன்சிட்டி 9000 ப்ராசஸர் வசதியைக் கொண்டு இந்த ஒன்பிளஸ் பேட் வெளிவந்துள்ளது. எனவே இந்த லேப்டாப் மாடலில் அனைத்து ஆப்ஸ்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும். ஆக்ஸிஜென் 13.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் டேப்லெட் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த டேப்லெட் மாடலுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும்.
குறிப்பாக 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் பேட். மேலும் டால்பி அட்மோஸை (Dolby Atmos) கொண்டு இந்த ஒன்பிளஸ் டேப்லெட் வெளிவந்துள்ளது. எனவே இதில் சிறந்த ஆடியோ அனுபவத்தைப் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒன்பிளஸ் பேட் 13எம்பி சிங்கிள் ரியர் கேமராஉடன் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட் மாடல். அதேபோல் 30fps வேகத்தில் 4கே வீடியோக்களை (4K Video) பதிவு செய்யும் திறன் கொண்டது இந்த ஒன்பிளஸ் டேப்லெட். குறிப்பாக இந்த டேப்லெட் உதவியுடன் அசத்தலான புகைப்படங்களை எடுக்க முடியும்.
ஒன்பிளஸ் பேட் 9510எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே இந்த டேப்லெட் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். அதேசமயம் விரைவாக இதை சார்ஜ் செய்துவிட முடியும். குறிப்பாக இந்த டேப்லெட் மாடலின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.


Click it and Unblock the Notifications