Just In
- 1 hr ago
ஒப்போ ரெனோ8 டி 5ஜி ஃபர்ஸ்ட் லுக்: பவர்-பேக்டு அம்சங்களுடன் இன்னொரு பவர்ஃபுல் ஸ்மார்ட்போன்!
- 5 hrs ago
பிரௌசர் ஹிஸ்டரிக்கு பாஸ்வோர்ட் லாக் போடலாமா? இப்படி செஞ்சா யாரும் உங்க ஹிஸ்டரியை பதம் பார்க்க முடியாது.!
- 6 hrs ago
வாஷிங் மெஷின் இருக்குதா? பழுதாகி விடாமல் இருக்க சில எளிய குறிப்புகள்: மிஸ் பண்ணாதீங்க.!
- 8 hrs ago
உங்கள் WiFi சிறப்பா.. ஸ்பீடா.. செயல்பட இந்த 5 விஷயத்தை செய்யணும்.! உடனே ட்ரை செய்து பாருங்க.!
Don't Miss
- Movies
தளபதி 67 டைட்டில் லியோ... வெல்கம் ட்வீட் செய்த CSK.. விஜய் ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்?
- Sports
பாக். வீரர் சையது ஆப்ரிடி மகளை மணந்த ஷாகின் ஆப்ரிடி.. காதலுக்கு பச்சை கொடி.. ரசிகர்கள் நெகிழ்ச்சி
- News
தமிழ்நாடு தன்னுரிமை கழகம்.. புதிய கட்சியை துவக்கிய ‛சர்க்கார்’ வில்லன் பழ கருப்பையா.. கொடிய பாருங்க!
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் தமனி சுவர்களில் அதிகளவு கொழுப்பு படிந்துள்ளதாம்... இது உயிருக்கே ஆபத்தாம்!
- Automobiles
திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல்/டீசல் விலை! பட்ஜெட்டில் வெளியான பகீர் ஆய்வு!
- Finance
இண்டிகோ: லாபம் 1000% வளர்ச்சி..! அடேங்கப்பா, என்ன காரணம் தெரியுமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
IRCTC Rules: ரயிலில் பயணிக்க 'இது' கட்டாயமா? மிடில் பெர்த் ரூல்ஸ்-னா என்ன தெரியுமா?
ரயிலில் பயணம் செய்யும் அனைவரும் IRCTC இன் இந்த முக்கிய விதியை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த கட்டாய விதியை சரியாகப் புரிந்துகொள்ளாத காரணத்தினால் தான், இன்னும் ஏராளமானோர் வீணாய் TTE அல்லது TTR-களிடம் சிக்கி அபராதம் செலுத்துகின்றனர். IRCTC இன் அறிவிப்புப் படி, எந்த முக்கிய ஆவணங்களை எல்லாம் நீங்கள் அடையாள சான்றாகக் காண்பிக்கலாம்? என்று தெரிந்துகொள்ளலாம்.

எந்த டிஜிட்டல் ஆப்ஸ் ஆவணங்களை TTE மற்றும் TTR ஏற்றுக்கொள்வார்?
அதேபோல், எந்த டிஜிட்டல் ஆப்ஸ் மூலம் காண்பிக்கப்படும் அடையாள ஆவணங்களை TTE மற்றும் TTR அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க. ரயிலில் பயணிக்கும் பயனர்களுக்கு, பயணச்சீட்டு எவ்வளவு முக்கியமோ, அதேபோல், அவர்களை அடையாளம் காண உதவும் சில முக்கிய ஆவணங்களும் பயணத்தின் போது மிக முக்கியமானது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

டிக்டேட் பரிசோதகரிடம் 'இதை' காண்பிப்பது கட்டாயம்
IRCTC மூலம் பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுடன் நீங்கள் பயணிக்கும் போது, இந்த ஆவணங்களை டிக்டேட் பரிசோதகரிடம் காண்பிப்பது கட்டாயம். இப்போது, ரயிலில் பயணம் செய்யும் பயணிகளிடம் TT-கள் அவர்களுடைய ஆதார் அடையாள அட்டையைக் காண்பிக்கும்படி கோருகிறார்கள். பயணிகளும் அவர்களிடம் இருக்கும் ஆதார் அட்டையைக் காண்பித்து அவர்களுடைய இருக்கையில் இருக்கும் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்கின்றனர்.

பயணத்தின் போது சரியான ஆவணம் இல்லை என்றால் என்ன செய்வது?
ஆனால், ஒரு சில நேரங்களில் எதிர்பாராத காரணங்களால் சில பயணிகள் ஆதார் அட்டைகளை தங்களுடன் கொண்டுவரத் தவறிவிடுகின்றனர். இந்த மாதிரியான நேரத்தில் சில பயணிகள் பதட்டமடைந்துவிடுகிறார்கள். இன்னும் சிலர் ரயில் நிலையம் வந்த பிறகு ஆதார் இல்லாமல் அவர்களுடைய பயணத்தை மேற்கொள்ளாமல் போன நிகழ்வுகள் எல்லாம் நிகழ்ந்துள்ளது. இந்த அச்சத்திற்கான முக்கிய காரணம், சரியான ஆவணம் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்பது தான்.

IRCTC பயணிகள் 12 வகையான ஆவணங்களைப் பயன்படுத்தலாமா?
IRCTC இன் விதிப்படி, உங்களுடைய பயணத்தின் போது, டிக்கெட் பரிசோதகரிடம் உங்களை, நீங்கள் அடையாளம் காண்பித்துக்கொள்ள சுமார் 12 அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பயன்படுத்தலாம் என்பதே உண்மை. ஆனால், மக்கள் அனைவரிடமும் ஆதார் அட்டை இருக்கும் என்ற பொதுவான நோக்கத்திலேயே TTE-கள் ஆதார் அட்டையைக் காண்பிக்கும்படி கோருகிறார்கள். பயண நேரத்தின் போது, ஒருவேளை உங்களிடம் ஆதார் அட்டை இல்லை என்றால் இனி கவலைப்படாதீர்கள்.

என்னென்ன ஆவணங்களை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்?
ஆதார் அட்டைக்குப் பதிலாக, உங்களுடைய டிரைவிங் லைன்சன்ஸ், PAN கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, இ-ஆதார் கார்டு, மாணவர் அடையாள அட்டை, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பாஸ்புக், புகைப்படம் அடங்கிய கிரெடிட் கார்டு, மத்திய - மாநில அரசுகள் வழங்கிய அடையாள அட்டை, போன்ற பல ஆவணங்களை நீங்கள் உங்களுக்கான அடையாள சான்றாகப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

அசல் ஆவணங்கள் இல்லை என்றால் டிஜிட்டல் ஆவணங்களை காட்டலாமா?
சரி, பயண நேரத்தின் போது உங்கள் ஆவணங்கள் அடங்கி இருக்கும் பர்ஸை மறந்துவிட்டிர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், இப்போதும் கூட நீங்கள் பதற்றமடையத் தேவையில்லை. டிஜிட்டல் மயமாக மாறிவரும் இந்த காலத்தில், உங்களுடைய அடையாள ஆவணங்களை சில குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ டிஜிட்டல் தளம் வழியாக TTE காண்பிப்பதும் செல்லுபடியாகும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ஆம், உங்கள் டிஜிட்டல் ஆவணங்களையும் IRCTC ஏற்றுக்கொள்ளும்.

டிஜிட்டல் முறையில் 'இப்படி' ஆவணங்களை காட்டினாள் செல்லுபடியாகாது
டிஜிட்டல் ஆவணங்கள் என்றதும், சிலர் ஸ்கேன் செய்து வைத்திருக்கும் ஆவணங்களைக் காண்பித்துக்கொள்ளலாம் என்று தவறாக நினைத்துவிடாதீர்கள். சில குறிப்பிட்ட மொபைல் ஆப்ஸ் அல்லது சில குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ டிஜிட்டல் தளங்கள் வழியாகக் காண்பிக்கப்படும் ஆவணங்களை மட்டுமே இந்திய ரயில்வே ஏற்றுக்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களிடம் அசல் ஆதார் அட்டை இல்லை என்றால்,

இந்த மொபைல் ஆப்ஸ் வழியாக காட்டும் ஆவணங்கள் மட்டுமே செல்லுபடியாகும்
அரசாங்கத்திற்குச் சொந்தமான m-aadhaar மொபைல் ஆப்ஸ் மூலம் உள்ள ஆதார் அட்டை விபரங்களை நீங்கள் காண்பிக்கலாம். இப்படி m-aadhaar மொபைல் ஆப்ஸ் மூலம் காண்பிக்கப்படும் ஆதார் கார்டு விபரங்கள் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படும். அதேபோல, அரசின் டிஜி லாக்கர் ஆப்ஸ் மூலம் 'Issued Documents' பிரிவில் உள்ள ஆதார் கார்டு மற்றும் டிரைவிங் லைசன்ஸ் அடையாள அட்டைகளும் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்படும்.

டிஜிட்டல் முறையில் இந்த ஆவணங்கள் மட்டும் செல்லாது
ஆனால், உங்களுடைய 'Uploaded Documents' பிரிவில் உள்ள ஆவணங்களை அதிகாரிகள் ஏற்றுகொள்ளமற்றர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்திய ரயில்வேவின் விதிப்படி, இப்படி காண்பிக்கப்படும் ஆவணங்கள் ரயிலில் செல்லாது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். ரயிலில் பயணம் செய்யும் போது, மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த 12 ஆவணங்களை நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ஆப்ஸ் வழியாக ஆவணங்களைக் காண்பிக்கலாம்.

IRCTC அமல்படுத்தியுள்ள புதிய விதிமுறைகள் இதோ
இதேபோல், IRCTC அதன் ரயில் பயணிகளின் பயணத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இன்னும் பல விதிமுறைகளை நடைமுறைப் படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் டிக்கெட் கேட்டு TTE-கள் பயணிகளைத் தொந்தரவு செய்யக் கூடாது, ரயிலில் பயணிக்கும் பயணிகள் இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு சத்தமாகப் பேசக் கூடாது, மிடில் பெர்த் ரூல்ஸ் என்று ஏராளமான விதிமுறைகளை IRCTC நடைமுறைப்படுத்தியுள்ளது. மிட்டில் பெர்த் ரூல்ஸ்-னா என்ன தெரியுமா?

மிடில் பெர்த் ரூல்ஸ் என்றால் என்ன? இதை கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்
எந்த நேரத்தில் நடுத்தர பெர்த்தில் தூங்குவதற்கு அந்த பயணிக்கு உரிமை உண்டு என்பதை, இந்த மிடில் பெர்த் ரூல்ஸ் தெளிவுபடுத்துகிறது. இந்திய ரயில்வே தகவலின் படி, பயணத்தின் போது பெரும்பாலும் கீழ் பெர்த்தில் பயணம் செய்யும் பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் தூங்காமல் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருப்பார்கள். இதனால், நடுப் பெர்த்திற்கு சொந்தமான பயணிகள், அவர்களின் கருணைக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

மிடில் பெர்த் டைமிங் ரொம்ப முக்கியம்
இது அந்த குறிப்பிட்ட பயணியின் பயண அனுபவத்தை அசவுகரியம் ஆக்குகிறது. இதற்காக, இந்திய ரயில்வே அமல்படுத்திய விதி தான் இந்த மிடில் பெர்த் விதி. ரயில்வே விதிகளின்படி, நடுத்தர பெர்த்தில் பயணிக்கும் பயணிகள் இரவு 10 மணிக்கு மேல் அவர்களின் இருக்கையைத் திறந்த பயன்படுத்தி, தூங்க அனுமதி உண்டு. இரவு 10 மணிக்கு மேல் அவர்கள் கீழ் பெர்த்தில் இருக்கும் பயணிகளின் கருணைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை இவ்விதி குறிக்கிறது.

காலை 6 மணிக்கு மேல் மிடில் பெர்த்தில் தூங்க கூடாதா?
அதேபோல், மிடில் பெர்த்தில் பயணிக்கும் பயணிகள், காலை 6 மணிக்கு மேல் நடு பெர்த்தை மீண்டும் கீழிறக்கி, பயணிகளின் இருக்கையாக மாற்றிவிட்டு அவர்களின் பயணத்தைத் தொடர வேண்டும் என்று இந்த மிடில் பெர்த் விதி கூறுகிறது. இதனால், காலையில் கீழே உள்ள பயணிகள், தங்கள் இருக்கையில் அமர்ந்து, வசதிக்கேற்ப பயணிக்கலாம். இரவில், கீழ் பெர்த்தில் இருக்கும் நபர்களுக்காகக் காத்திருக்காமல் பயணத்தை நீங்கள் மேற்கொள்ளலாம். இதேபோல், இன்னும் பல விதிகளை IRCTC நடைமுறைப்படுத்தியுள்ளது, அதைப் பற்றி அறிந்துகொள்ள மேலும் படியுங்கள்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470