LPG Gas Cylinder Subsidy: உங்களுக்கு சிலிண்டர் மானியம் எவ்வளவு வருகிறது? உடனே ஆன்லைனில் செக் செய்யுங்க..
இந்தியாவில் உள்ள அணைத்து பொதுமக்களுக்கும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் மானியம் வரவு வைக்கப்படுகிறது. உங்கள் வங்கி கணக்கில் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வரவு வைக்கப்படுகிறது என்று ஆன்லைனில் உடனே செக் செய்யுங்கள். இதற்கு வெறும் 2 நிமிடங்கள் செலவழித்தால் போதும் மக்களே.
இந்தியாவில் சுமார் 30.53 கோடி மக்கள் எல்பிஜி கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder) இணைப்பை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் பல குடிமக்களுக்கு முழுமையான கேஸ் சிலிண்டர் மானியம் வழங்கப்படுகிறது. உஜ்வலா யோஜனா (Ujjwala Yojana) திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் வாங்கும் மக்களுக்கு இப்போது வரை ரூ.300 முதல் ரூ.200 வரை மானியம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

எல்பிஜி கேஸ் சிலிண்டர் மானியம் (LPG Gas Cylinder Subsidy):
சாமானிய மக்களுக்கு இப்போது ரூ.50 வரை அதிகபட்சமாக எல்பிஜி கேஸ் சிலிண்டர் மானியம் (LPG Gas Cylinder Subsidy) வரவு வைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பிரிவு மக்களுக்கும் ஒவ்வொரு விதமான மானியம் வழங்கப்படுவதனால், யாருக்கு எவ்வளவு மானியம் கிடைக்கிறது என்பதில் தெளிவு இல்லை. இதனால் மக்கள் சில நேரங்களில் குழப்பமடைகிறார்கள். ஆனாலும், மத்திய அரசு ஒவ்வொரு சிலிண்டருக்குமான உரிய மானியத்தை தொடர்ந்து அவரவர் வங்கி கணக்கில் வழங்கி வருகிறது.
உங்கள் வங்கி கணக்கில் எவ்வளவு சிலிண்டர் மானியம் ஒவ்வொரு முறையும் வழங்கப்பட்டிருக்கிறது என்பதை இப்போது நீங்கள் ஆன்லைன் (check lpg gas cylinder subsidy online) மூலம் சில நிமிடங்களில் தெரிந்துகொள்ளலாம். அதை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். உங்களிடம் ஒரு ஸ்மார்ட்போன் (smartphone) மட்டும் இருந்தால் போதும், நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே உங்கள் சிலிண்டர் மானியம் எவ்வளவு என்பதை அறிந்துகொள்ளலாம்.
இதை செய்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை ஒன்றின் பின் ஒன்றாக சரியாக பின்பற்றவும்.
- முதலில் நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் வெப் பிரௌசரை (web browser) ஓபன் செய்ய வேண்டும்.
- பிறகு சர்ச் பாரில் mylpg என்று டைப் செய்து சர்ச் (search) செய்யலாம்.
- அல்லது நேரடியாக https://www.mylpg.in என்ற இந்த இணையதள பக்கத்தை கிளிக் செய்து உள்நுழையலாம்.

மொபைல் மூலம் ஆன்லைனில் கேஸ் சிலிண்டர் மானியம் சென் செய்வது எப்படி?
- டிஸ்பிளேவின் வலதுபுறத்தில் 3 கேஸ் சிலிண்டர்கள் (gas cylinder) காண்பிக்கப்பட்டிருக்கும்.
- அதிலிருந்து நீங்கள் வாங்கும் சிலிண்டர் நிறுவனத்தை கிளிக் செய்யவும்.
- உங்களுக்கு உரிய சிலிண்டர் நிறுவனத்தின் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
- நீங்கள் இதற்கு முன்பு இந்த தளத்தில் சைன் இன் (Sign In) செய்யவில்லை என்றால், இப்போது Sign In செய்யுங்கள்.
- உங்கள் உரிய விபரங்களை உள்ளிட்டு பாஸ்வோர்ட் (password) செட் செய்து லாகின் (login) செய்ய வேண்டும்.
- அடுத்தபடியாக உங்கள் மொபைல் நம்பரை (Mobile number) உள்ளிட்ட வேண்டும்.
- பிறகு உங்கள் போனிற்கு அனுப்பப்பட்ட OTP விபரங்களை உள்ளிடவும்.
- மொபில் எண்ணை உள்ளிட்டு ஸ்கிரீனில் கட்டப்படும் கேப்ட்சா கோடை உள்ளிடவும்.
- இப்போது உங்களுக்கு பல விருப்பங்கள் காண்பிக்கப்படும்.
- டிஸ்பிளேவின் இடதுபுறத்தில் View Cylinder Booking History / Subsidy transferred என்ற விருப்பம் காண்பிக்கப்படும்.
- இந்த விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- அவ்வளவு தான் வேலை முடிந்தது.
இப்போது உங்களுக்கு ஒரு பெரிய பட்டியல் காண்பிக்கப்படும். இதில் நீங்கள் எப்போதெல்லாம் சிலிண்டர் ஆர்டர் செய்தீர்கள், உங்கள் சிலிண்டருக்கான அசல் கட்டணம் (lpg gas mrp price) எவ்வளவு? அந்த சிலிண்டருக்கான மானியம் எவ்வளவு வரவு வைக்கப்பட்டது? எந்த வங்கி கணக்கில் மானியம் போடப்பட்டது என்பது போன்ற முழு விபரமும் காண்பிக்கப்படும். இந்த முறையை பின்பற்றி உங்கள் சிலிண்டர் மானிய விபரங்களை ஆன்லைனில் செக் செய்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








