அப்பாடா.. இந்த முறை பூத்துக்கு போறப்ப.. கை வீசிட்டு போலாம்! டிஜிட்டல் Voter ID கார்டு DOWNLOAD செய்வது எப்படி?
இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் மக்களவை தேர்தலில், குடிமக்களாகிய நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒரே ஒரு வேலையைத்தான் அது - தவறாமல் ஒட்டு போடுவது. அதை சரியாக செய்ய உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை இப்போதே தயார்படுத்தி வைத்துக்கொள்ளவும்.
சமீபத்தில் வாக்காளர்களின் வசதிக்காக, இந்திய தேர்தல் ஆணையமானது இ-இபிஐசி (e-EPIC) அல்லது எலெக்ட்ரானிக் எலெக்டோரல் போட்டோ ஐடென்டிட்டி கார்டு (Electronic Electoral Photo Identity Card) என்று அழைக்கப்படும் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை (Digital Voter ID Card) அறிமுகம் செய்திருந்தது.

டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை என்றால் என்ன? இது மொபைல் போன்களில் எளிதாக சேமிக்கக்கூடிய பிடிஎஅப் வடிவத்தில் (PDF Format) கிடைக்கும் வாக்காளர் அடையாள அட்டை ஆவணமாகும். வோட்டர் ஐடி கார்டுக்கு கிடைத்துள்ள இந்த டிஜிட்டல் வடிவமானது பயனர்களுக்கு பலவகையான நெகிழ்வுத்தன்மைகளை / வசதிகளை வழங்கும்.
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையில் அப்படி என்ன வசதிகள் உள்ளன? டவுன்லோட் செய்யப்படும் ஒரு டிஜிட்டல் வோட்டர் ஐடி கார்டுகளை வாக்காளர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் சேமித்து வைத்துக்கொள்ள முடியும். மேலும் அதை டிஜிலாக்கர் ஆப்பிலும் பதிவேற்றம் செய்ய முடியும். எல்லாவற்றை விட முக்கியமாக தேவைக்கேற்ப அதை பிரிண்ட் செய்து லேமினேட் செய்து கையிலேயே கூட வைத்துக்கொள்ள முடியும்.

யாரெல்லாம் டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டையை டவுன்லோட் செய்ய முடியும்? செல்லுபடியாகும் இபிஐசி எண்களை (Valid EPIC numbers) கொண்ட அனைத்து தகுதியான வாக்காளர்களுமே டிஜிட்டல் வோட்டர் ஐடி கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். அதன் மூலம் கிடைக்கும் வாக்காளர் அடையாள அட்டையின் பிடிஎஃப் பதிப்பை மொபைல் போன்களில் சேமித்து தனிப்பட்ட க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அதை அணுகலாம்.
டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பது எப்படி? ஆன்லைன் வழியாக டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கவும், அதை பதிவிறக்கம் செய்யவும்.. முதலில் நீங்கள் தேசிய வாக்காளர் சேவைகள் போர்ட்டலில் (National Voters Services Portal - NVSP) பதிவு செய்ய வேண்டும்.

என்விஎஸ்பி இணையதளத்தில் பதிவு செய்தல், தேவையான விவரங்களை வழங்குதல் மற்றும் புதிய வாக்காளர்களுக்கான விண்ணப்ப படிவமாக செயல்படும் படிவம் 6-ஐ பூர்த்தி செய்தல் போன்ற வேலைகளை செய்த பின்னர்.. விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப நிலையை என்விஎஸ்பி இணையதளத்தில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
உங்களுக்கான டிஜிட்டல் வாக்காளர் அடையாள அட்டை தயார் ஆனதும் என்விஎஸ்பி இணையதளம் வழியாக அதை பதிவிறக்கம் செய்வதற்கான விருப்பம் உங்களுக்கு கிடைக்கும். அதை பதிவிறக்கம் செய்வதற்கு முன்னர், லாக்-இன் செய்வது, தொடர்புடைய விவரங்களை உள்ளிடுவது மற்றும் ஒடிபி மூலம் சரிபார்ப்பது போன்ற செயல்முறைகளை நீங்கள் கடக்க வேண்டியிருக்கும்.
வாக்காளர் அடையாள அட்டை கிழிந்தோ அல்லது தொலைந்தோ போய் இருந்தால்?ஒருவேளை உங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையானது, சரியான நிலையில் இல்லாதபடி கிழிந்து போய் இருந்தாலோ அல்லது தொலைந்து போய் விட்டாலோ அல்லது திருடப்பட்டு இருந்தாலோ.. அதனுடைய டூப்ளிகேட் காப்பியை (Duplicate Copy) ஆப்லைன் அல்லது ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வாங்கி வைத்து கொள்ளவும்.
ஆப்லைன் செயல்முறை வழியாக டூப்ளிகேட் வோட்டர் ஐடி கார்டை பெறுவது எப்படி?
1. தேர்தல் அதிகாரி அலுவலகத்திற்கு நேரில் சென்று, டூப்ளிகேட் வாக்காளர் அடையாள அட்டைக்கு தேவையான படிவத்தை கோரவும்.
2. பின்னர் உங்கள் பெயர், முகவரி மற்றும் பழைய வாக்காளர் அடையாள அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து குறிப்பிட்ட படிவத்தை நிரப்பவும்.
3. பூர்த்தி செய்யப்பட்ட படிவத்துடன், கோரப்பட்ட ஆவணங்களின் நகல்களையும் சமர்ப்பிக்கவும்.
4. நீங்கள் கொடுத்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டதும், தேர்தல் அதிகாரி உங்களுக்கான டூப்ளிகேட் வாக்காளர் அடையாள அட்டையை வழங்குவார்.
இந்த ஆப்லைன் செயல்முறையின் வழியாக சில நாட்களுக்குள் கூட உங்களுக்கான டூப்ளிகேட் வாக்காளர் அடையாள அட்டை கிடைக்கலாம்.
ஆப்லைன் வழியாக டூப்ளிகேட் வோட்டர் ஐடி கார்டை பெறுவது எப்படி?
1. மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்திற்கு சென்று EPIC-002 படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்.
2. ரெஃப்ரென்ஸ் நம்பரை பெற, உங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள தேர்தல் அலுவலகத்திற்கு குறிப்பிட்ட படிவத்தை எடுத்து செல்லவும்.
3. பின்னர் படிவத்தை பூர்த்தி செய்து, எப்ஐஆர் நகல், முகவரிக்கான சான்று மற்றும் அடையாள சான்று போன்ற தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைக்கவும்.
4. நீங்கள் படிவத்தை சமர்ப்பித்த பிறகு, தேர்தல் அலுவலகம் அதை சரிபார்க்கும். வெற்றிகரமான சரிபார்ப்புக்கு பிறகு, டூப்ளிகேட் வோட்டர் ஐடி பெறுவதற்கான அறிவிப்பை பெறுவீர்கள், பின்னர் நீங்கள் தேர்தல் அலுவலகத்திற்கு சென்று அதை வாங்கிக்கொள்ளலாம்!
தேர்தலுக்கு முன் வோட்டர் ஐடி கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகிய இரண்டையும் இணைக்க வேண்டுமா? அப்படி எந்த காட்டாயமும் இல்லை. இந்திய தேர்தல் ஆணையமானது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதை இன்னும் கட்டாயமாக்கவில்லை. எனவே அதுகுறித்து உங்களுக்கு எந்த கவலையும் இருக்க வேண்டாம்!


Click it and Unblock the Notifications