Home
Mobile

OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!

ஒப்போ நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ராவை பயன்படுத்தி பார்க்க, சீனாவின் ஷென்சென் நகருக்கு நாங்கள் சமீபத்தில் அழைக்கப்பட்டோம். தற்போதைக்கு இது சீன சந்தைக்கான பிரத்தியேக மாடலாக இருந்தாலும் கூட, இதன் கேமரா செட்டப் ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்க வைக்கும்படி உள்ளது.

ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ராவின் (OPPO Find X7 Ultra) கேமரா செட்டப் ஆனது தனித்து நிற்க என்ன காரணம்? அதன் கட்டிங்-எட்ஜ் ஹைப்பர்டோன் இமேஜ் எஞ்சின் உடனான குவாட் மெயின் கேமரா தான்! ஹை-ரெசல்யூஷன் கொண்ட கேமராக்கள் சுவாரஸ்யமாக இருந்தாலும், அதிகப்படியான எச்டிஆர் செயலாக்கம், எல்லைமீறிய ஹைலைட் மற்றும் தவிர்க்கப்பட்ட நிகழ்களுடன், இயற்கைக்கு மாறான புகைப்படங்களுக்கு வழிவகுக்கும்.

OPPO Find X7 Ultra.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஹைப்பர்டோன் இமேஜ் எஞ்சின் மூலம் இந்த சிக்கலைச் சமாளிக்கிறது. ஏஐ அடிப்படையிலான இந்த தொழில்நுட்பம் எச்டிஆர் போட்டோக்களை எடுப்பதற்கு, மிகவும் இயற்கையான மற்றும் யதார்த்தமான அணுகுமுறையை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. அல்ட்ரா-வைட் கேமராவை பொறுத்தவரை.. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் 14 மிமீ அல்ட்ரா-வைட் கேமராவானது 1/1.95 இன்ச் அளவு கொண்ட ஒரு பெரிய 50எம்பி சோனி எல்ஒய்டி-600 சென்சார் உடன் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த சென்சார் ஒரு புதிய எஃப்/2.0 அபெர்ச்சர் லென்ஸையும் கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போன்களில் உள்ள அல்ட்ரா-வைட் கேமராக்களுக்கான மிக வேகமான அபெர்ச்சர் லென்ஸ் ஆகும். இது வைட் ஆங்கிள் புகைப்படங்களை எடுக்கும்போது.. ஹைலைட்ஸ், டீட்டெயில்ஸ், எக்ஸ்போஷர் அக்யூரட் ஆன கலர்ஸ் ஆகியவைகளை சமநிலைப்படுத்துவதன் மூலம் விதிவிலக்கான படங்களை எடுக்கிறது.

OPPO Find X7 Ultra.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!

வைட் கேமராவை பொறுத்தவரை.. ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ரா ஆனது 23மிமீ அளவிலான 2வது தலைமுறை 50எம்பி சோனி எல்ஒய்டி-900 சென்சாரை கொண்டுள்ளது. இந்த 1-இன்ச் சென்சார் ஸ்மார்ட்போன்களுக்காக வடிவமைக்கப்பட்ட முதல் வகை சென்சார் ஆகும். இதற்கு முந்தைய சோனி ஐஎம்எக்ஸ்989 சென்சாருடன் ஒப்பிடும்போது, இது 32% சிறந்த செயல்திறனை வழங்குவதாக ஒப்போ கூறுகிறது, இது 1-இன்ச் சென்சாரை கொண்ட ஸ்மார்ட்போனில் அட்வான்ஸ்டு கம்ப்யூட்டஷனல் போட்டோகிராஃபி டெக்னீக்களை அனுமதிக்கிறது.

மேலும் இந்த போனில் கஸ்டம்-டிசைன்டு 1ஜி7பி லென்ஸும் பொருத்தப்பட்டுள்ளது, இது லென்ஸின் பிரதிபலிப்பை 50% குறைக்கும் என்று ஒப்போ நிறுவனம் கூறுகிறது. இந்த லென்ஸை இணைப்பதன் மூலம் 1-இன்ச் சென்சாரின் திறன்கள் அதிகரிக்கப்படும், இதன் விளைவாக இமேஜ் குவாலிட்டியும் சிறப்பாக இருக்கும்!

OPPO Find X7 Ultra.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!

டெலிஃபோட்டோ கேமராவை பொறுத்தவரை.. 65 மிமீ ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ரா ஆனது இரண்டு பெரிஸ்கோப் ஜூம் கேமராக்களைக் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும். குறிப்பாக இந்த போனின் உதவியுடன் தரமான படங்கள் எடுக்க முடியும். மேலும் இந்த போன்களின் லென்ஸ்களில் 3எக்ஸ் ஜூம் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1/1.56 இன்ச் அளவுள்ள பெரிய 50எம்பி ஐஎம்எக்ஸ்890 சென்சார் வசதி இதில் உள்ளது.

குறிப்பாக இந்த சென்சார் வேகமான எப்/2.8 அபெக்சர் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இது குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் கூட உயர்தர டெலிபோட்டோ புகைப்படங்களை எடுக்க உதவுகிறது. கூதலாக இந்த போனின் கேமரா லென்ஸ் குறைந்தபட்ச ஃபோகஸ் தூரம் 25 சென்டிமீட்டர்களைக் கொண்டுள்ளது. எனவே இந்த போனின் உதவியுடன் நெருக்கமாகவும் துல்லியமாகவும் படங்களை எடுக்க முடியும்.

OPPO Find X7 Ultra.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!

டெலிஃபோட்டோ - 135 மிமீ ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ரா புதிய 6எக்ஸ் பெரிஸ்கோப் ஜூம் லென்ஸுடன் டெலிஃபோட்டோ திறன்களை மேலும் மேம்படுத்துகிறது. இந்த லென்ஸில் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்858 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இது தொலைதூரப் பொருட்களைப் பிடிக்கவும் டெலிஃபோட்டோ ஓவியங்களை உருவாக்கவும் ஏற்றதாக அமைகிறது.

இதுதவிர ஒப்போ நிறுவனம் இந்த போனில் ஏஐ ஜூம் அம்சத்தையும் சேர்த்துள்ளது. இது மேம்பட்ட அருமையான படங்களை எடுக்க பயன்படும். குறிப்பாக இதில் அதிகபட்ச ஜூம் 120எக்ஸ் அடையும் போது நல்ல தரமான படங்;களை எடுக்க முடியும் என்று நிறுவனம் கூறியுள்ளது. சாதாரண நிலையில் ஜூம் 20எக்ஸ் அல்லது 30எக்ஸ் பயன்படுத்தி கூட தெளிவான படங்களை எடுக்க முடியும்.

OPPO Find X7 Ultra.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!

32எம்பி செல்பி கேமரா வசதியுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக செல்பி படங்களை அதிகம் விரும்பும் பயனர்கள் இந்த ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ரா போனை நம்பி வாங்கலாம். குறிப்பாக இந்த போன்உயர்தர செல்பிகள் மற்றும் தெளிவான வீடியோ அழைப்புகளை உறுதி செய்கிறது. மேலும் இதில் ஹைப்பர் டோன் எப்படி பயன்படுகிறது என்று இங்கே பார்க்கலாம்.

பாதுகாக்கப்பட்ட விவரங்கள்: அதாவது பாரம்பரிய எச்டிஆர் அல்காரிதம்கள் சில நேரங்களில் படங்களை அதிகமாகக் கூர்மைப்படுத்தலாம், இதன் விளைவாக சிறந்த விவரங்கள் இழக்கப்படும். ஆனால் ஹைப்பர் டோன் ஒரு புகைப்படத்தில் உள்ள இயற்கை அமைப்புகளையும் நுணுக்கங்களையும் பாதுகாத்து சமநிலையை அடைய முயற்சிக்கிறது. எனவே அசத்தலான புகைப்படங்களை இதில் எடுக்க முடியும்.

OPPO Find X7 Ultra.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!

பேலன்ஸ்டு டோன்ஸ்: இந்த ஸ்மார்ட்போனில் எடுக்கப்படும் புகைப்படங்கள் அப்படியே மனித கண்களால் பார்க்கப்படும் நிறங்களுடன் ஒத்துப்போகின்றன. இது மிகவும் சாமர்த்தியமாக புகைப்படங்களின் டைனமிக் ரேஞ்களை கையாள்கிறது. இதில் உள்ள ஹைப்பர் டோன் வைப்ரன்ட் மற்றும் ஹைலைட்களை துடிப்பாக வைக்க அனுமதிக்கிறது. புகைப்படத்தில் ஊழல் நிழல் மற்றும் டெப்த் விபரங்களை மிகவும் துல்லியமாக பிரதிபலிக்கிறது.

ட்ரூ கலர்ஸ்: ஹைப்பர் டோன் மூலம் மிகவும் இயற்கையான அசல் நிறங்களை புகைப்படத்தில் இந்த சாதனம் பிரதிபலிக்கச் செய்கிறது. நீங்கள் படம்பிடிக்கும் இடத்தின் அசல் நிறங்களை அப்படியே அசலாக கைப்பற்றுகிறது. நிஜ உலகில் நீங்கள் பார்க்கும் நிறங்களை அப்படியே வழங்குகிறது. இதன் விளைவாக, உங்களுக்கு இயற்கையான, அசல் உயிரோட்டம் உள்ள புகைப்படங்கள் கிடைக்கின்றன.

உங்கள் புகைப்பட அனுபவத்தை சிறப்படைய செய்ய உதவும் கூடுதல் அம்சங்கள்!
ஹசல்ப்ளாட் போட்ரைட் மோட்: ஹசல்ப்ளாட் கேமரா நிறுவனத்துடனான ஒப்போ நிறுவனத்தின் கூட்டணி ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் போட்ரைட் மோட் மூலம் நம்மை வியக்க வைக்கிறது. இந்த மோட் 4 விதமான ஃபோக்கல் லெந்த் ஆதரவை கொண்டுள்ளது. இவை 23மி.மீ, 44மி.மீ, 65மி.மீ, மற்றும் 135மி.மீ அளவுகளில் வருகிறது. இவை வித்தியாசமான ஹசல்ப்ளாட் லென்ஸ் உடன் செயல்படுகிறது.

மேலும் இது உங்களை பல்வேறு விதமான ஸ்டைலில் புகைப்படங்களை எடுக்க அனுமதிக்கிறது. அதில் கிளோஸ்-அப், ப்ரொஃபெஷனல் லூக்கிங் போக்கே எஃபக்ட் போன்றவைகளும் அடங்கும். மேலும் இது தோல் நிறம் மற்றும் முக விபரங்களை நீண்ட தூரத்தில் இருந்தும் துல்லியமாக படம் பிடிக்கிறது.

ஹசல்ப்ளாட் ப்ரோ மோட்: இந்த சிறப்பு மிகு அம்சம் ஹைப்பர் டோன் அம்சங்களை அடுத்தநிலைக்கு எடுத்து செல்கிறது. இதன் மூலம் இன்னும் அதிகப்படியான கேமரா கண்ட்ரோல் உங்களுக்கு கிடைக்கிறது. இதன் விளைவாக ப்ரொஃபெஷனல் போட்டோகிராபர் போன்ற புகைப்படங்களை உங்களால் படம்பிடிக்க முடிகிறது.

மாஸ்டர் மோட்: ஒப்போ நிறுவனம் மாஸ்டர் மோட் என்ற மோடை அறிமுகம் செய்துள்ளது. இது மேனுவல் கண்ட்ரோல் அம்சத்தை பிரத்தியேகமாக ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ரா கேமராவிற்காக மட்டுமே வழங்குகிறது. இது ஹசல்ப்ளாட் எக்ஸ்2டி 100சி கேமரா கேலிபரேஷனை ஆதரிக்கிறது. இதன் மூலம் ஹை-லெவல் கிரியேட்டிவ் கண்ட்ரோல் கிடைக்கிறது.

இந்த மோடில், பயனர்கள் அவர்களுக்கு விருப்பமான லென்ஸ், பிரேம் ஷாட், ஃபோக்கஸ், ஐஎஸ்ஓ கண்ட்ரோல் மற்றும் ஷட்டர் ஸ்பீட் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். மாஸ்டர் மோட்டில் இன்னும் ஒரு சுவாரசியம் இருக்கிறது. இது ஜேபெக் இமேஜின் சாச்சுரேஷன், கான்ட்ராஸ்ட், ஷார்ப்னஸ் மற்றும் விக்னெட் அளவுகளை அட்ஜஸ்ட் செய்ய அனுமதிக்கும் மாஸ்டர் எஃபக்ட் அம்சத்தையும் இந்த போன் கொண்டுள்ளது.

ப்ரோ கண்ட்ரோல்ஸ் மற்றும் மாஸ்டர் எஃபக்ட்ஸ்: ராவ் புகைப்பட பிரியர்களுக்காக, ராவ் மேக்ஸ் போட்டோஸ் விற்பதை வழங்குகிறது. இது 50எம்பி ராவ் பைல்லை 16 பிட் கலர் டெப்த் உடன், 13 ஸ்டாப்ஸ் டைனமிக் ரேஞ் உடன், பிடி.2020 கலர் ஸ்பேஸ் ஆதரவுடன் வழங்குகிறது. மாஸ்டர் எஃபக்ட்ஸ் மற்றும் ப்ரோ கண்ட்ரோல் மோடை ஆக்டிவேட் செய்ய மாஸ்டர் மோடில் இருந்து நீங்கள் ட்வீக் டேப் செய்தால் போதுமானது.

அப்கிரேட் வீடியோ கேப்ச்சர்: இதில் 60 ஃஎப்பிஎஸ் உடன் 4கே வீடியோ ரெக்கார்டிங்கை நீங்கள் மேற்கொள்ளலாம். முன்பக்க கேமரா 0.8எக்ஸ், 1எக்ஸ், மற்றும் 2எக்ஸ் ஜூம் விருப்பங்களுடம் செல்பி பிரேமிங்கை கொண்டுள்ளது. உங்கள் வீடியோகிராபி ரெக்கார்டிங்கை 10 பிட் டால்பி விஷன் ஆதரவுடன் 60 ஃஎப்பிஎஸ் வைடு கேமரா மற்றும் 30 ஃஎப்பிஎஸ் அல்ட்ரா-வைடு மற்றும் டெலிபோட்டோ கேமராவுடன் மேற்கொள்ள அனுமதிக்கிறது.

ஏஐ ஆப்ஜெக்ட் ரிமூவல்: போட்டோ ஆப்பில் உள்ள ஏஐஜிசி ரிமூவர் ஆனது பேக்கிரவுண்ட்டில் நிரம்பி உள்ள தேவையற்ற ஆப்ஜெக்ட்களை கண்டறிந்து அவைகளை நீக்க உதவுகிறது. உங்கள் போட்டோக்களை இன்னும் அழகாக மாற்றுகிறது. இதை நீங்கள் கையால் வரைந்து செய்யலாம் அல்லது குறிப்பிட்ட ஆப்ஜெக்ட்களின் மேல் வர்ணம் தீட்டுவதன் மூலம் செய்யலாம்.

கேமராக்களுக்கு அப்பால்: ஃபிளாக்ஷிப் பவர்ஹவுஸ்!
கேமரா சிஸ்டமானது, சென்டர் ஸ்டேஜ் எடுக்கும் போது, ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ராவானது, மற்ற ஃபிளாக்ஷிப்-வொர்த்தி பீச்சர்களை கொண்டுள்ளது. இந்த போன் மூன்று கலர்களில் வருகிறது: ஓஷன் ப்ளூ, செபியா பிரவுன் மற்றும் டெய்லர்டு பிளாக். ஒவ்வொன்றும் தனித்துவமான அழகியலை கொடுக்கிறது. அலுமினிய ஃபிரேமுடன் இணைக்கப்பட்ட பின்புறத்தில் கிளாஸ் அல்லது ஈகோ-லெதர் போன்ற பிரீமியம் மெட்டீரியல்களின் கலவையை இந்த போன் பயன்படுத்துகிறது.

டிஸ்பிளே: 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய பெரிய, அதிவேகமான 6.82-இன்ச் எல்டிபிஓ அமோலெட் டிஸ்பிளேவானது, ஸ்மூத் விசுவல்கள் மற்றும் கேமிங், பிரவுசிங் மற்றும் வீடியோ பிளேபேக்கிற்கு விதிவிலக்கான ரியாக்ஷன் தன்மையை உறுதி செய்கிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ஆனது, டிஸ்பிளே கீறல்கள் மற்றும் ஆக்சிடென்டல் டிராப்களிலிருந்து பாதுகாக்கிறது.

பெர்ஃபார்மென்ஸ்: ஒப்போ ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 ப்ராசஸரை பேக் செய்கிறது. இது 16ஜிபி வரை எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் உடன் இணைந்து, டிமாண்டிங் டாஸ்குகள், மல்டிடாஸ்கிங் மற்றும் கிராபிக்ஸ்-இன்டென்சிவ் கேம்களை இயக்குவதற்கான உயர்மட்ட செயல்திறனை வழங்குகிறது.

பேட்டரி: லாங்-லாஸ்டிங் 5000எம்ஏஎச் பேட்டரி நாள் முழுவதும் உங்களை பவருடன் வைத்திருக்கும். ஓப்போவின் 100 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபிளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பமானது, ஓப்போவின் கூற்றுப்படி, வெறும் 10 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து, தேவைப்படும் போது போனில் விரைவாக ரீபியூல் செய்ய முடியும் என்பதை உறுதி செய்யும்.

ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ராவை யார் கருத்தில் கொள்ள வேண்டும்?
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ரா, என்பது வெர்சடைல் கேமரா சிஸ்டத்தை தேடும் மொபைல் போட்டோகிராஃபி ஆர்வலர்களுக்கு ஒரு கட்டாய விருப்பமாகும். குவாட் மெயின் கேமரா செட்டப், பவர்புல் ஜூம் திறன்கள் மற்றும் ஹைப்பர் டோன் இமேஜ் எஞ்சின் ஆகியவற்றின் கலவையானது, பல்வேறு லைட்டிங் நிலைகளில் நேச்சுரலாக தோற்றமளிக்கும், உயர்தர புகைப்படங்களை பிடிக்க முன்னுரிமை அளிப்பவர்களுக்கு உதவுகிறது.

இந்த போன் மூலம் யார் அதிகம் பயனடையலாம் என்பதற்கான விவரம் இங்கே:
மொபைல் போட்டோகிராபர்கள்: குவாட்-கேமரா சிஸ்டத்தின் பல்துறைத்திறன், ஹைப்பர் டோன் செயலாக்கம் மற்றும் ராவ் கேப்சர் ஆப்ஷன்கள் இணைந்து, ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ராவை ஸ்டன்னிங் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை படம்பிடிப்பதற்கான சக்திவாய்ந்த கருவியாக மாற்றுகிறது.

டிராவல் ஆர்வலர்கள்: கேமரா சிஸ்டத்தின் வைடு ஆங்கிள், டெலிஃபோட்டோ மற்றும் லோவ்-லைட் கேப்பபிலிட்டிகள், டிராவல் மெமரிகளை அவற்றின் அனைத்து பெருமைகளிலும் படம்பிடிப்பதற்கு ஏற்றதாக மாற்றுகிறது. கன்டென்ட் கிரியேட்டர்கள்: நீங்கள் சோஷியல் மீடியா இன்ஃப்ளுயன்சர், விலாக்கர் அல்லது ஃபிலிம்மேக்காரக இருந்தாலும் சரி, ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ராவின் கேமரா சிஸ்டம் மற்றும் பவர்புல் ப்ராசஸர், உயர்தர ஹை-குவாலிட்டி கன்டென்ட்களை வழங்குவதற்காக டூல்களை கொடுக்கிறது.

விற்பனை மற்றும் விலை விவரங்கள்:
ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்7 அல்ட்ரா குறிப்பிடத்தக்க கவனத்தை பெற்றிருந்தாலும், அது தற்போதைக்கு சீனாவில் மட்டுமே கிடைக்கிறது. பேஸ் வேரியண்ட்டின் ஆரம்ப விலை (12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி) தோராயமாக சிஎன்ஒய் 5,999 (தோராயமாக ரூ. 70,000) ஆகும். 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி உடன் கூடிய டாப்-டயர் மாடலானது, சிஎன்ஒய் 6,999 (சுமார் ரூ. 80,000) விலையில் வருகிறது.

Best Mobiles in India

English summary
OPPO Find X7 Ultra Pushing The Boundaries of Smartphone Photography to Next Level
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X