ஆதாரில் அடுத்த சிக்கல்.. ரூ.50 கொடுத்து இப்பவே தப்பிச்சுடுங்க.. இல்லனா SIM கார்டு, BANK AC-னு மாட்டுவீங்க!
நீங்கள் சிம் கார்டு வாங்கும் போதும் அல்லது ஏதோவொரு வங்கியில் புதிதாக அக்கவுண்ட் திறக்கும் போதும் அல்லது லோன் வேண்டும் என்பதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போதும்.. உங்களுக்கு எந்த சிக்கலும் வராமல் இருக்க.. ஆதார் அட்டையில் உள்ள ஒரு விவரம் மிகச்சரியாக இருக்க வேண்டும்.
அந்த விவரம் - உங்களுடைய பிறந்த தேதி தான். ஆதார் அட்டையில் (Aadhaar Card) உங்களுடைய பிறந்த தினமானது (Birth of Date) தவறான தேதியில் குறிப்பிடப்பட்டு இருந்தால்.. அவ்வளவு தான் சிம் கார்டு வாங்குவது, பேங்க் அக்கவுண்ட் திறப்பது, லோன் வாங்குவது உட்பட.. உங்களுடைய பல வேலைகள் தடைபட்டு போகும்.

ஏற்கனவே பான்-ஆதார் இணைப்பிற்கு ரூ.1000 செலுத்த வேண்டிய கட்டாயம் 2024 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில்.. ஆதார் தொடர்பான அடுத்த சிக்கல் எதற்கு என்று நினைப்பவர்கள்.. உடனடி தேவை இருக்கிறதோ இல்லையோ, வருங்கால தேவைகளுக்காக, ஆதார் அட்டையில் உள்ள பிறந்த தினத்தை சரிபார்க்கவும்.
ஒருவேளை அது தவறாக இருந்தால்.. அதிகாரப்பூர்வ சரிபார்ப்புகளின் போது, அரசாங்க திட்டங்களை பெறும்போது மற்ற ஆவணங்களுடன் பொருந்தாமல் போவது போன்ற தடைகளை சந்திக்க நேரிடும் என்பதை இப்போதே புரிந்துகொண்டு, ஆதார் அட்டையில் தவறாக உள்ள உங்களுடைய பிறந்த தேதியை.. சரியான தேதிக்கு மாற்றி விடவும்.

ஆதார் அட்டையில் உள்ள தவறான பிறந்த தேதியை மாற்ற என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
ஆதார் அட்டையில் உள்ள தவறான பிறந்த தேதியை மாற்ற விரும்பும் ஒருவர் பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.
1. பான் கார்டு
2. பிறப்பு சான்றிதழ்
3. பாஸ்போர்ட்
4. பேங்க் பாஸ்புக்,
5. கல்வி வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியல் அல்லது சான்றிதழ்
ஆதார் அட்டையில் உள்ள தவறான பிறந்த தேதியை மாற்றுவது எப்படி?
இதற்கான செயல்முறையை தொடங்கும் முன்னர் யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையதத்தின் (Unique Identification Authority of India) விதிகளின்படி, ஆதார் அட்டையில் ஒருமுறை மட்டுமே பிறந்த தேதியை சரி செய்ய முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ரூ.50 செலவில் ஆதார் அட்டையில் உள்ள தவறான பிறந்த தேதியை மாற்றுவது எப்படி?
1. உங்கள் அருகில் உள்ள ஆதார் பதிவு மையத்திற்கு செல்லவும்.
2. அங்கே உள்ள கவுண்டரில் ஆதார் புதுப்பிப்பு / திருத்த படிவத்தை வாங்கி, அதை நிரப்பவும். பிறந்த தேதிக்கான சான்று உட்பட நீங்கள் புதுப்பிக்க விரும்பும் விவரங்களை குறிப்பிட்டு, அந்த படிவத்தை சமர்ப்பிக்கவும்.
3. பின்னர் உங்கள் பயோமெட்ரிக் விவரங்களை வழங்கவும், அது ஆதார் மையத்தில் உள்ள அதிகாரிகளால் சரிபார்க்கப்படும்.
4. இப்போது உங்களுடைய பிறந்த தேதியை மாற்ற, நீங்கள் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
5. நீங்கள் அளித்த ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட சில நாட்களுக்கு பிறகு, உங்களுடைய பிறந்த தேதியானது ஆதார் அட்டையில் புதுப்பிக்கப்படும்.
6. இந்த செயல்முறைக்காக, ஆதார் மையத்தில் உங்களுக்கு ஒரு சீட்டு வழங்கப்படும், அதை பயன்படுத்தி உங்கள் ஆதார் அப்டேட் கோரிக்கையின் நிலையை ஆன்லைன் வழியாகவும் கண்காணிக்கலாம்.
7. பின்னர் திருத்தப்பட்ட பிறந்த தேதியுடன் உங்களுக்கான ஆதார் அட்டை தயார் ஆனது, யுஐடிஏஐ இணையதளத்தில் இருந்து அதை பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கப்படுவீர்கள்.
ஒருவேளை உங்களுக்கு ஆதார் தொடர்பான வேறு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால்.. அதை தீர்க்க யுஐடிஏஐ-யின் ஹெல்ப்லைன் எண் (Helpline Number) ஆன 1947-ஐ நீங்கள் தொடர்பு கொள்ளலாம் அல்லது ஹெல்ப்@யுஐடிஏஐ.கவ்.இன் ([email protected]) என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு, உங்களுடைய புகார்களை, சிக்கல்களை மின்னஞ்சல் செய்யலாம்.


Click it and Unblock the Notifications