"இதெல்லாம்" தெரியாம.. பந்தாவா AC வாங்கிடாதீங்க.. அப்புறம் ரூம்குள்ள உட்காந்து.. ஐயோ அம்மானு கதறுவீங்க!
பக்கத்துக்கு வீட்டுல சொன்னாங்க.. பிரெண்ட்ஸ் வீட்டுல இதுதான் வாங்கி இருக்காங்கனு.. இல்லனா அமேசான் மற்றும் பிளிப்கார்ட்ல ரிவ்யூஸ் நல்லா போட்டு இருக்காங்கனு.. ஏதோ ஒரு ஏசி (AC) மாடலை வாங்கிட்டு வந்து, உங்க வீட்டுலயும் மாட்டி விட்றாதீங்க.. அப்புறம் ரொம்ப வருத்தப்படுவீங்க!
ஏனென்றால்.. ஏசி வாங்குவதற்கு முன் நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 7 முக்கியமான விஷயங்கள் உள்ளன. உங்கள் பட்ஜெட் என்னவாக இருந்தாலும் சரி.. அதற்குள் சரியான ஏசியை வாங்க வேண்டும் என்றாலும் கூட இவைகளை பற்றி நீங்கள் தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.

1. உங்களுடைய ரூம் சைஸ் என்ன? எந்த அறையில் ஏசியை வைக்க போகிறீர்களோ அந்த அறையின் அளவை பொறுத்து ஏசியின் கெப்பாசிட்டியை தேர்ந்தெடுக்கவும். உங்களுடையது ஒரு சிறிய அறை என்றால், அளவில் 100 - 120 சதுர அடி இருக்கும் என்றால் 1 டன் ஏசி போதுமானது. பெரிய அறைகளுக்கு, 1.5 டன் அல்லது 2 டன் போன்ற பெரிய கெப்பாசிட்டி கொண்ட ஏசியை தேர்வு செய்யவும்.
2. உயரமான வீடுகளில் வசித்தால்? ஒருவேளை நீங்கள் அபார்ட்மென்ட்டில் வாசிக்கிறீர்கள் என்றால்.. நீங்கள் ஐந்தாவது அல்லது ஆறாவது தளத்தில் இருக்கிறீர்கள் என்றால்.. ஏசியை பொறுத்தவுள்ள அறையின் அளவுக்கு கூடுதலாக குறைந்தபட்சம் 0.5 டன் அதிக கெப்பாசிட்டி கொண்ட ஏசியை தேர்வு செய்யவும்!

3. ஸ்பிளிட் ஏசியா அல்லது விண்டோ ஏசியா? இவ்விரு வகை ஏசிகளுமே "கிட்டத்தட்ட" சமமான செயல்திறனையே வழங்குகின்றன. முக்கிய வேறுபாடு விலை மற்றும் அம்சங்களில் தான் உள்ளது. விண்டோ ஏசிகள் மலிவாக இருக்கும்; ஒப்பீட்டளவில் குறைவான அம்சங்களை வழங்கும். ஸ்பிளிட் ஏசிகள் ஆனது ஸ்லிப் மோர், டர்போ கூலிங் போன்ற பல அம்சங்களுடன், அதிக விலை நிர்ணயத்துடன் வரும்.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது.. எந்தவொரு அறையிலும் ஸ்பிளிட் ஏசியை பொருத்தி விடலாம். ஆனால் விண்டோ ஏசிகளுக்கு, ஏசியின் பரிமாணங்களுடன் பொருந்தக்கூடிய சரியான அளவிலான விண்டோ உங்கள் வீட்டில் இருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லை என்றால்.. கண்களை மூடிக்கொண்டு ஸ்பிளிட் ஏசி மாடலை வாங்கி விடவும்.

4. எத்தனை ஸ்டார் இருக்க வேண்டும்? இங்கே பல்வேறு விலைப்பிரிவுகளில் பல வகையான ஏசிகள் உள்ளன. பெரும்பாலும் 5 ஸ்டார் ஏசிகள் விலை உயர்ந்ததாக இருக்கும். ஏனென்றால் அவைகள் ஆற்றல் திறன் மிக்கதாக, நீண்ட காலத்திற்கு எந்த செலவும் கொடுக்காமல் உழைக்கும். அப்படியான பட்ஜெட் உங்களிடம் இருந்தால்.. முடிந்தவரை 5 ஸ்டார் ஏசியை வாங்கவும்; குறைந்தபட்சம் 3 ஸ்டார் ரேட்டிங்கையாவது தேர்வு செய்யவும்.
5. இன்வெர்ட்டர் அவசியமா? ஒரு ஏசி வாங்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டீர்கள் என்றால்.. அது இன்வெர்ட்டர் ஏசியாக இருப்பது தான் நல்லது; புத்திசாலித்தனம்! ஏனெனில் இன்வெர்ட்டர் ஏசி ஆனது மின் நுகர்வு குறைக்கவும், ஏசியின் ஒட்டுமொத்த சிறந்த செயல்திறனை அதிகரிக்கவும் உதவுகின்றன.
6. ஸ்மார்ட் ஏசிகள் VS நான்-ஸ்மார்ட் ஏசிகள்.. எது பெஸ்ட்? வைஃபை ஆதரவுடன் வரும் ஏசி மாடல்கள் ஆனது வாய்ஸ் கண்ட்ரோல், ஸ்கெட்யூலிங், ஆட்டோ டெம்ப்ரேச்சர் கண்ட்ரோல் மற்றும் பல கூடுதல் செயல்பாடுகளுடன் வரும். இருப்பினும், வைஃபை ஏசிகள் ஒப்பீட்டளவில் விலை உயர்ந்தவைகளாக இருக்கும். இது முழுக்க முழுக்க உங்கள் வசதிக்கும், விருப்பத்திற்குமான தேர்வாக இருக்கும்!
7. ஏசிக்களுக்கு நாய்ஸ் லெவல் உண்டா? கட்டாயம் உண்டு. ஏசிக்கள் நாய்ஸ் லெவல் அடிப்படையிலும் பிரிக்கப்படுகின்றன. நீங்கள் ஒரு லைட் ஸ்லீப்பர் ஆக இருந்தால் அல்லது உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால்.. க்வைட் மோட் அல்லது ப்ரீஸ் மோட் உடன் வரும் ஏசியை வாங்கவும். ஸ்பிளிட் ஏசிகளுடன் ஒப்பிடும்போது விண்டோ ஏசிகள் சத்தமாக இருக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது!


Click it and Unblock the Notifications