Home
News

இனி டபுள் வேலை.. பென்ஷன் ACCOUNT-குள்ள போக புது ரூல்.. ஆதார் வழியாக இந்திய அரசு கிடுக்கிப்பிடி!

உங்கள் வீட்டில் பென்ஷன் வாங்குபவர்கள் இருந்தாலும் சரி அல்லது நீங்களே பென்ஷன் வாங்குபவராக இருந்தாலும் சரி.. என்பிஎஸ் (NPS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நேஷனல் பென்சன் சிஸ்டமில் (National Pension System) கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதியை பற்றி கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்!

பிஎஃப்ஆர்டிஏ (PFRDA) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Pension Fund Regulatory and Development Authority) ஆனது என்பிஎஸ் வலைத்தளத்திற்குள் லாக்-இன் (Log-in) செய்வதற்கான புதிய பாதுகாப்பு விதியை (New Security Rule) நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது.

இனி டபுள் வேலை.. பென்ஷன் ACCOUNT-குள்ள போக புது ரூல்!

இனிமேல் என்பிஎஸ் வலைத்தளத்திற்கு லாக்-இன் செய்ய (உள்நுழைய) விரும்புபவர்கள் டூ ஃபேக்டர் ஆதார் அங்கீகாரத்தை (Two Factor Aadhaar Authentication) செய்ய வேண்டி இருக்கும். 2024 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விதியானது.. பாஸ்வேர்ட் (PASSWORD) உதவியுடன் மத்திய பதிவு காப்பீட்டு முகமை (Central Record-keeping Agency - CRA) அமைப்பிற்குள் லாக்-இன் செய்யும் அனைத்து பயனர்களும் பொருந்தும்!

டூ ஃபேக்டர் ஆதார் அங்கீகாரத்தை பயன்படுத்தி என்பிஎஸ் வலைத்தளத்திற்குள் லாக்-இன் செய்வது எப்படி?
1. முதலில், அதிகாரப்பூர்வ என்பிஎஸ் இணையதளத்தை (https://enps.nsdl.com/eNPS/NationalPensionSystem.html) அணுகவும்.
2. பின்னர் லாக்இன் வித் பிஆர்ஏஐஎன் / ஐபின் (Login with PRAIN / IPIN) என்கிறவிருப்பத்தை கிளிக் செய்யவும்.

இனி டபுள் வேலை.. பென்ஷன் ACCOUNT-குள்ள போக புது ரூல்!

3. இப்போது பிஆர்ஏஐஎன் / ஐபின் டேப்-ஐ (PRAIN / IPIN Tab) தேர்ந்தெடுக்கவும்,
4. உடனே ஒரு புதிய விண்டோ (New Window) திறக்கும்.
4. அங்கே உங்கள் யூஸர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்-ஐ (User ID and Password) உள்ளிடவும்.
5. கோரப்படும் கேப்ட்சா சரிபார்ப்பை (Captcha Verification) முடிக்கவும்.

6. பின்னர் ஆதார் அங்கீகாரத்திற்காக ஒரு விண்டோ தோன்றும் மற்றும் உங்களுக்கான ஒடிபி-ஐ (OTP) அனுப்பும்.
7. பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு வந்த ஒடிபி-ஐ உள்ளிடவும்.
8. கடைசியாக, அந்த ஒடிபி-ஐ சமர்ப்பிக்கவும்; அவ்வளவு தான், இப்போது என்பிஎஸ் வலைத்தளத்திற்குள் லாக்-இன் ஆகி இருப்பீர்கள்!

இனி டபுள் வேலை.. பென்ஷன் ACCOUNT-குள்ள போக புது ரூல்!

இந்த டூ ஃபேக்டர் ஆதார் அங்கீகாரத்தின் கீழ் என்ன பயன்? இது ஏன் முக்கியம்? டூ ஃபேக்டர் ஆதார் அங்கீகாரத்தின் கீழ் லாக்-இன் செய்யும் போது சிஆர்ஏ அமைப்பிற்குள் நுழைய முயற்சிக்கும் அங்கீகரிக்கப்படாத அணுகல்கள் (Unauthorized Access) தடுக்கப்படும் மற்றும் வெகுவாக குறையும். மேலும் இது என்பிஎஸ் பரிவர்த்தனைகளின் (NPS transactions) பாதுகாப்பை இன்னும் அதிகரிக்கும்.

2024 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் என்பிஎஸ் வலைத்தளத்திற்கு மட்டுமல்ல.. பான் கார்டு (PAN Card), ஃபாஸ்டாக் (FASTag) மற்றும் ஜிமெயில் (Gmail) சேவைக்குள்ளும் கூட புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. ஆதார் நம்பர் உடன் பான் நம்பரை இணைப்பதற்கான காலக்கெடுவானது மார்ச் 31 ஆம் தேதியோடு முடிந்தது.

இந்த காலக்கெடுவிற்குள் பான்-ஆதாரை இணைக்க தவறினால்.. குறிப்பிட்ட பான் எண் ஆனது ரத்துசெய்யப்படலாம். அதுமட்டுமின்றி ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு பிறகு பான்-ஆதாரை தாமதமாக இணைத்தால் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படும். நினைவூட்டும் வண்ணம் பிரிவு 139ஏஏ-யின் கீழ் பான் எண்ணை ஆதாருடன் இணைப்பது கட்டாயமமாகும்!

இதேபோல வாகன ஓட்டிகளுக்கான "ஒரு வாகனம், ஒரு ஃபாஸ்டாக்" (One Vehicle, One FASTag) என்கிற புதிய விதிமுறையும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. பல வாகனங்களுக்கு ஒரே ஒரு ஃபாஸ்டாக்-ஐ பயன்படுத்துவதுஅல்லது ஒரு குறிப்பிட்ட வாகனத்துடன் பல ஃபாஸ்டாக்-களை இணைப்பதை தடுக்கும் நோக்கத்தின் கீழ் இந்த புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.

ஜிமெயில் சேவைக்குள் கொண்டுவரப்பட்டுள்ள புதிய விதிகளை பொறுத்தவரை, 2024 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், புதிய அங்கீகாரத் தேவைகளை பூர்த்தி செய்யாதை பல்க் செண்டர்களால் (Bulk Senders) அனுப்பப்படும் இமெயில்களை கூகுள் நிறுவனம் நிராகரிக்கும். மேலும் ஜிமெயில் சேவையில் கடுமையான டொமைன் அங்கீகார விதிகளும் (Strict Domain Authentication Rules) அமலுக்கு வந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New NPS Rule 2024 How to Login National Pension System Website Using 2 Factor Aadhaar Authentication
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X